ச. கோபாலாச்சாரி

திருவிதாங்கூர் திவான்

திவான் பகதூர் சறுக்கை கோபாலாச்சாரி(Sarukkai Gopalachari) (பிறப்பு: 1850 ஆகத்து 16) அல்லது கோபாலாச்சார்யார் என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய வழக்கறிஞரும் மற்றும் நிர்வாகியுமாவார். இவர் 1906 ஆகத்து 16 முதல் 1907 அக்டோபர் 26 வரை திருவிதாங்கூரின் திவானாக பணியாற்றினார்.

சறுக்கை கோபாலாச்சாரி
திருவிதாங்கூரின் திவான்
பதவியில்
16 ஆகத்து 1906 – 26 அக்டோபர் 1907
ஆட்சியாளர்மூலம் திருநாள்
முன்னையவர்வி. பி. மாதவ ராவ்
பின்னவர்பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கோபாலாச்சாரி 1850 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் சறுக்கையில் ஒரு வைணவ பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[1] இவர் சட்டத்தில் பட்டம் பெற்று, 1885 மார்ச் 21 இல் துணை நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு மதுரையில் வழக்கறிஞராக சிலகாலம் பணியாற்றினார்.[1] 1903 சூனில் இவர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1906 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் திவானாக நியமிக்கப்பட்டபோது கோபாலாச்சாரி திருநெல்வேலியின் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார் .[1]


குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Jeffrey, Robin (1976). The decline of Nayar dominance: society and politics in Travancore, 1847-1908. Holmes & Meier Publishers. p. 337. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0841901848.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._கோபாலாச்சாரி&oldid=3459586" இலிருந்து மீள்விக்கப்பட்டது