வி. பி. மாதவ ராவ்

இந்திய ஆட்சிப் பணியாளர்

விசுவநாத் பதங்கர் மாதவ ராவ் (Vishwanath Patankar Madhava Rao) (1850 பிப்ரவரி 10 - 1934) இவர் ஓர் இந்திய நிர்வாகியும் மற்றும் அரசியல்வாதியுமாவார். இவர் 1906 முதல் 1909 வரை மைசூர் இராச்சியத்தின் திவானாகவும், 1910 முதல் 1913 வரை பரோடாவின் திவானாகவும் பணியாற்றினார்.

விசுவநாத பதங்கர் மாதவ ராவ்
இந்தியப் பேரரசின் தோழர்
வி. பி. மாதவ ராவின் உருவப்படம்
பரோடாவின் திவான்
பதவியில்
1910–1913
மைசூர் இராச்சியத்தின் 17ஆவது திவான்
பதவியில்
1906 சூன் 30 – 1909 மார்ச் 31
ஆட்சியாளர்நான்காம் கிருட்டிணராச உடையார்
முன்னையவர்பி. என். கிருட்டிணமூர்த்தி
பின்னவர்த. ஆனந்த ராவ்
திருவிதாங்கூரின் திவான்
பதவியில்
1904–1906
ஆட்சியாளர்மூலம் திருநாள்
முன்னையவர்கே. கிருட்டிணசாமி ராவ்
பின்னவர்எஸ். கோபாலாச்சாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1850 பிபரவரி
கும்பகோணம், சென்னை மாகாணம்
இறப்பு1934
தொழில்அரசுப் பணி

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

மாதவ ராவ் தஞ்சாவூர் மராத்தி தேசஸ்த் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு தஞ்சையில் குடியேறினர். இவர் தஞ்சையில் மராட்டிய வெற்றியை அடுத்து சதாரா மாவட்டத்திலிருந்து தென்னிந்தியாவுக்கு குடிபெயர்ந்ததாகக் கருதப்படுகிறது. [1] [2] மாதவ ராவ் 1850 பிப்ரவரியில் சென்னை மாகாணத்தின் கும்பகோணத்தில் பிறந்தார். கும்பகோணம் கல்லூரியில் வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டரிடம் கல்வி பயின்றார். 1869 இல் இளங்கலை முடித்த இவர் மைசூர் இராச்சியத்தில் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

நியமனங்கள்

தொகு

மாதவ ராவ் 1869 இல் மைசூர் இராச்சியத்தின் சேவையில் அரச பள்ளியின் தலைமை ஆசிரியராக நுழைந்தார். பின்னர் மைசூரின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு நீதித்துறை மற்றும் வருவாய் துறைகளில் பணியாற்றினார். இவர் காவல்துறை இயக்குநராகவும், 1898 முதல் 1901 வரை மைசூர் இராச்சியத்தில் பிளேக் ஆணையாளராகவும், 1902 முதல் 1904 வரை வருவாய் ஆணையராகவும் பணியாற்றினார். 1906 முதல் திவானாக நியமிக்கப்பட்டார்.

மைசூர் திவான்

தொகு

மாதவ ராவ் 1906 சூன் 30 முதல் 1909 மார்ச் 31 வரை மைசூர் இராச்சியத்தின் திவானாக பணியாற்றினார். 1906 ஆம் ஆண்டில், மைசூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டங்களை இயற்ற அதிகாரம் அளிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. புதிய சட்டமன்றம் 1907 மார்ச் 6 இல் அமைக்கப்பட்டது. வருவாய் ஆணையரை தலைமை வருவாய் அதிகாரியாக மாற்றுவதற்காக நில வருவாய் சட்டம் திருத்தப்பட்டது. மேலும் கருவூலத்தின் பொறுப்பும் வழங்கப்பட்டது. பொது சுகாதாரத் துறை உருவாக்கப்பட்டது. மேலும் மைசூர் அரசுப் பணிக்காகான போட்டித் தேர்வுகள் புதுப்பிக்கப்பட்டன. பாக்கு மீதான வரி இரத்து செய்யப்பட்டன.

மைசூர் இராச்சியத்தில் மழலையர் பள்ளிகள் அறிமுகப்படுத்தப்பட்டு ஆரம்பக் கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. ஏராளமான நீர்ப்பாசன திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1906-07 ஆம் ஆண்டில் மரிகனைட் படைப்புகள் மற்றும் 1907-08 இல் பெலகோலாவில் காவிரி நீர்மின்சாரம் தயாரிக்கும் பணிகள் போன்றவை நிறைவடைந்தன. இந்திய அறிவியல் நிறுவனத்திற்கு இலவசமாக நிலம் வழங்கவும் அரசு அனுமதித்தது.

1908 சனவரி 1 ஆம் தேதி பெங்களூர் நகரத்திலும் மற்றும் இராணுவத் தளங்களிலும், 1908 செப்டம்பர் 26 அன்று மைசூர் நகரத்திலும் மின்சார விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. [3]

மரியாதை

தொகு

மாதவ ராவ் 1899 ஆம் ஆண்டில் இந்தியப் பேரரசின் தோழராக மாற்றப்பட்டார் மற்றும் 1900 இல் இவருக்கு கைசர்-இ-ஹிந்த் பதக்கம் வழங்கப்பட்டது .

குறிப்புகள்

தொகு
  • Mysore Gazetteer. p. 3148.
  • Mysore Gazetteer. pp. 3020–3026.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._மாதவ_ராவ்&oldid=2996482" இலிருந்து மீள்விக்கப்பட்டது