சக்குசி

(ஜக்குஸி இலிருந்து வழிமாற்றப்பட்டது)


ஜக்குஸி என்பது பெருநீர்ச்சுழல் குளிக்கும் தொட்டி மற்றும் நீரூற்றுகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். குளியலுடன் உடற்பிடிப்புக்கான கூர் நுனிக்குழாய்கள் இவற்றின் முதல் தயாரிப்பு ஆகும். ஜக்குஸி என்ற பெயர் வணிகக் குறியாகக் குறிக்கப்பட்டு இருந்தால் அது பெரும்பாலும் குளியலுடன் கூடிய தண்ணீர் கூர் நுனிக்குழாய்களையே குறிக்கும். இவ்வாறு குறிக்கப்பட்டு இருந்தால் பொதுவான வணிகக் குறியாக கருதப்படும். இதை கவனத்தில் கொண்டு "எங்களுடைய தொட்டிகள் ஜக்குஸி என்றும் மற்றவை அனைத்தும் வெறும் சூடுபடுத்தும் தொட்டிகள்" என்று நிறுவனம் விளம்பரம் செய்கிறது.

Jacuzzi
வகைPrivate
நிறுவுகை1915
நிறுவனர்(கள்)Frank, Rachel, Valeriano, Galindo, Candido, Giocondo and Joseph Jacuzzi
தலைமையகம்Valvasone (PN) Italy-- Chino Hills, CA
சேவை வழங்கும் பகுதிU.S., Canada, Mexico, Europe, Asia, Africa, the Caribbean, Central and South America (excluding Brazil and Chile)
முதன்மை நபர்கள்Executives:Jerry Pasley; Steve Purcell, Senior VP Operations; Erica Moir, VP Product Development, Design & Marketing, Kurt Bachmeyer; Director of Customer Service
தொழில்துறைPlumbing manufacturing
உற்பத்திகள்hot tubs, bath tubs, showers, toilets, sinks and accessories
வருமானம்$1,202.4M (2006)[1]
நிகர வருமானம்US$40.4M (2006)[1]
பணியாளர்4,907
இணையத்தளம்Jacuzzi.com

வரலாறு

தொகு

1900 ஆம் ஆண்டுகளில் ஜக்குஸி (இத்தாலியில் யாக்-கூட்-ஜி உச்சரிக்கப்படும்) என்று அறியப்பட்ட ஏழு சகோதரர்கள் இத்தாலியிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறினார்கள். இறுதியில் கலிபோர்னியா, பெர்கெலேவில் உள்ள வெஸ்ட் கோஸ்ட்டில் குடியேறி இயந்திரங்களை இயக்குபவர்களாக மாறினர். அவர்களில் ஒருவரான ராச்சிலே ("ராஹ்-கேஹ்-லேஹ்" என்று உச்சரிக்கப்படும்) 1915 ஆம் ஆண்டு சான் ஃப்ரான்சிஸ்கோ அருகில் உள்ள பனாமா பசிபிக் எக்ஸ்பொசிசனில் தான் கண்ட விமான சாகச நிகழ்ச்சியினால கவரப்பட்டு வானூர்தி ஓட்டுக்கருவியை உருவாக்கத் தொடங்கினார்.[2][சான்று தேவை] அவர்கள் "ஜக்குஸி டூத்பிக்" என்று அறியப்படும் தனித்தன்மை வாய்ந்த ஓட்டுக்கருவியை வடிவமைத்தனர். ராச்சிலே மற்றும் அவரது சகோதரர்கள் பெர்கெலேவில் "ஜக்குஸி பிரதர்ஸ்" என்ற பெயரில் வானூர்தி தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 1976 ஆம் ஆண்டு வரை வணிகத்தில் ஈடுபட்டனர். கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் பொருள் தயாரிப்பு முறை மாறியுள்ளது. சான் பிரான்சிஸ்கோ குடா பகுதியிலிருந்து யோஸ்மிட்டி தேசிய பூங்காவிற்கு பயணிகளை அழைத்து செல்ல அமெரிக்காவின் தபால் சேவையில் உபயோகிக்கப்பட்ட முதல் சிற்றறை கொண்ட ஒற்றைத்தாங்கிவிமானம்[சான்று தேவை] இந்த நிறுவனத்தின் சாதனைகளில் ஒன்றாகும்.

1921 ஆம் ஆண்டு யோசிமிட்டிக்கும் சான் ஃப்ரான்சிஸ்கோவுக்கும்[2] [சான்று தேவை] இடையில் பயணம் செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் தனது சகோதரர்களில் ஒருவரான ஜியோகோண்டோ இறந்ததால் ஜக்குஸி சகோதரர்கள் வானூர்தி தயாரிப்பை 1925 ஆம் ஆண்டு முதல் நிறுத்தினர். புதிய வகையான வேளாண் பம்புகளிலிருந்து நீரழுத்த வானூர்தி பம்புகளை தயாரிப்பிற்கு ராச்சிலே நிறுவனத்தை மாற்றினார். அவர்களின் வடிவமைப்பு புதுமையான நீர் இறைக்கும் இயந்திரமாக மாறியது[3][சான்று தேவை]. அவர்கள் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற கலிபோர்னியா ஸ்டேட் சந்தையில் தங்கப் பதக்கம் பெற்றனர்.

1943 ஆண்டில்[3] [சான்று தேவை] பிறந்த 15 மாதங்களில் இருந்து கீழ்வாத நோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் வலியால் அவதிப்பட்ட அவரது மகன் கென்னித்திற்காக நீரில் மூழ்கக்கூடிய குளிக்கும் தொட்டியில் பயன்படும் பம்பை உருவாக்கினார். உள்ளூர் மருத்துவமனையிலிருந்து அந்த சிறுவன் நீர் மருத்துவமுறை சிகிச்சையை பெற்றுக் கொண்டிருந்தான். ஆனால் காண்டிடோ தனது மகன் ஒவ்வொரு முறை சிகிச்சைக்கு செல்லும் போது அவதிப்படுவதை கண்டு தாங்க இயலாமல் 1948 ஆம் ஆண்டு நிறுவனத்தில் பம்புகளை உருவாக்குவதில் தனக்கு இருக்கும் அறிவை பயன்படுத்தி இந்த பம்பை உருவாக்கினார். வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பம்புகளைக் கொண்டு தனது மகனுக்கு பெருநீர்ச்சுழல் சிகிச்சையை வீட்டில் உள்ள தொட்டியில் அளிக்க முடியும் என்று அவர் உணர்ந்தார். இறுதியில் கென்னித் ஜக்குஸி நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார்.

1955 ஆம் ஆண்டு "J-300" என்று பெயரிட்டு நோய்களை தீர்க்கும் இயல்புடைய பம்புகளை, குளியல் உபகரணங்களை விற்பனை செய்யும் கடைகளில் விற்க நிறுவனம் முடிவு செய்தது.[4][சான்று தேவை] அறியப்படாத இந்த பொருளுக்கு சிறிதளவு விளம்பரம் செய்ய குயின் ஃபார் எ டே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்களுக்கு கையடக்கமான ஜக்குஸிகள் உள்ளடக்கிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. களைப்படைந்த குடும்பத் தலைவிகளுக்கு சிரமத்தை குறைக்கும் விதத்தில் இது அமைந்தது. ஹாலிவுட் நட்சத்திரங்களான ராண்டோல்ப் ஸ்காட் மற்றும் ஜெய்னே மான்ஸ்ஃபீல்ட் நற்சான்றிதழ் அளித்ததன் காரணமாக ஜக்குஸி பெருநீர்சுழல் குளிக்கும் தொட்டி மிகவும் புகழ்பெற்றது. ஜக்குஸிக்கான பிரதிநிதி பேச்சாளராக ஜாக் பென்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

J-300 பம்புகள் எளிதானதாக குளியலறையில் எங்கும் பொருத்தக் கூடிய வகையிலும் இருந்தது. நீர் மருத்துவ முறையில் இந்த பொருட்களின் உபயோகத்தை மருத்துவ சமுதாயமும் அங்கீகரித்தது. உடற்பயிற்சி ஊட்ட உணவு சிகிச்சையாளார்கள் மற்றும் எலும்பு மூட்டு அறுவை மருத்துவர்கள் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் இவற்றை உபயோகிக்க அறிவுறுத்தினர்.

தொட்டிகளின் பக்கங்களில் நுனிக்குழாய்கள் அமைக்கப்பட்டு முழுவதும் அமையப்பெற்ற பெருநீர்சுழல் குளிக்கும் தொட்டிகளை முதன் முறையாக 1968 ஆம் ஆண்டு சந்தையில் கண்டிடோ ஜக்குஸி வெளியிட்டார். "ரோமன் பாத்டப்" என்று பெயரிடப்பட்ட நுனிக்குழாய்கள் 50-50 காற்று/தண்ணீர் விகிதங்களை உபயோகித்து சிறந்த அனுபவங்களை வழங்கியது. ஆடம்பரமான வாழ்கை தரத்திற்கு ஜக்குஸி சின்னமாக அமைந்தது. வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம், புதிதாக உருவாக்கப்படும் நிலையங்கள் மற்றும் தனியார் இல்லங்களில் ஆயிரக்கணக்கான ஜக்குஸி அமைப்புகள் அமைக்கப்பட்டன. ஹாலிவுட் பிரபலங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக சொந்தமாக உபயோகிக்க ஆரம்பித்தனர்.

மக்களிடையே இருந்த புகழின் காரணமாக பெருநீர்சுழல் குளியல் தொட்டிகள் ஜக்குஸி சகோதரர்களின் துணைத் தொழிலாக இன்றும் உள்ளது. ஜக்குஸி சகோதரர்களுக்கு அதிகபடியான வருவாய் தண்ணீர் பம்புகள், கடல்சார்ந்த நுனிக்குழாய் மற்றும் நீச்சல் குளம் சார்ந்த உபகரணங்களின் விற்பனையால் கிடைக்கிறது.

1970 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் நிறுவனம் வெப்பமாக்கல் மற்றும் வடிகட்டும் அமைப்புகளை உள்ளடக்கிய பெரிய உபகரணங்களை தயாரித்தது. இது தற்போது நாம் அறிந்த நீருற்று தொழிற்சாலைகள் உருவாக காரணமாக அமைந்தது. மேலும் இது ஜக்குஸி பெயர் கொண்ட தொட்டிகளுடன் தொடர்புடையது. ஜக்குஸியின் முதல் அச்சு விளம்பரங்களில் சூஸனே சோமர்ஸ் மாடலாகப் பயன்படுத்தப்பட்டார். ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு எளிதாக பொருத்தவும் மற்றும் அடக்கமாகவும் இருந்த காரணத்தினால் ஆயிரக்கணக்கான வீட்டு உரிமையாளர்கள் இந்த அமைப்புகளை பொருத்திக் கொண்டனர். தொழில் வளர்ச்சியடைந்த நிலையில், சூடாக்கும் குளியல் தொட்டிகள், பெருநீர்ச்சுழல் குளியல் தொட்டிகள் மற்றும் இரண்டும் கலந்து உபயோகிக்கும் வகையில் பொருட்களை நிறுவனம் தயார் செய்ய தொடங்கியது. இந்த அமைப்புகள் வீட்டின் உள்பகுதி அல்லது வெளிப்பகுதிகளில் பொருத்தும் வண்ணம் இருந்தது.

தற்போது சூடாக்கும் குளியல் தொட்டிகள், குளியல் தொட்டிகள், நீர் பொழிப்பிகள், கழிவறைகள், சிங்குகள் மற்றும் வீடுகள், உணவக விடுதிகள், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் கப்பல்கள் போன்றவற்றிலும் ஜக்குஸி பெயரிடப்பட்ட உபகரணங்களின் கருவிகளை பொதுவாக காணலாம் மேலும் உலகெங்கும் உள்ள நீருற்று அமைப்புகளில் பிரபலமாகவும் இது உள்ளது. தற்போது சண்டேன்ஸ் ஸ்பாஸ் இன்க்., நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஜக்குஸி பொருட்கள் 60க்கும் அதிகமான நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

கலிபோர்னியாவின் சின்னோவில் சண்டேன்ஸ் ஸ்பாஸ் நிறுவனம் அமைந்துள்ளது. சூடாக்கும் குளியல் தொட்டிகளுக்கான ISO 9001 தரச்சான்றிதழை உலகில் முதன் முறையாக பெற்ற நிறுவனம் இது தான் [5][சான்று தேவை]. உள்ளூர் மற்றும் ஏற்றுமதி தேவைகளுக்காக நாள் ஒன்றுக்கு 300 நீருற்றுகளை தயார் செய்யும் திறன் இந்த நிறுவனத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் காப்புரிமை பெற்ற நுனிக்குழாய்கள், ரெயின்போ வாட்டர்ஃபால்ஸ், சிந்தடிக் சன்-ரெசிஸ்டெண்ட் சைடிங், ஸ்டீரியோஸ், எர்கனோமிக் சீட்டிங், ட்ரிபிள்-லேயர்ட் ஷெல்ஸ், ஃபுல்-ஃபோர்ம் இன்சுலேஷன் மற்றும் சாலிட் A.B.S. பான் பாட்டம் போன்ற தனித்தன்மை வாய்ந்த பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

அக்டோபர் 2006 ஆம் ஆண்டு அப்பலோ மேனேஜ்மெண்ட் என்ற தனியார் நேர்மை நெறி நிறுவனம் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஜக்குஸியின் வணிகக் குறியுள்ள பொருட்களை $990 மில்லியனுக்கு வாங்குவதாக அறிவித்தது.[6]

2008 ஆம் ஆண்டு இந்நிறுவனம் சினோ ஹில்ஸில் உள்ள த ஷாப்ஸ் என்ற இடத்திற்கு தனது தலைமையகத்தை மாற்றியது.

மற்ற தயாரிப்புகள்

தொகு

வியட்நாம் சண்டையின் போது அமெரிக்க கடற்படையினால் பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் படகு, ஜக்குஸி சகோதரர்களின் பம்ப்-ஜெட்களின் உதவியுடன் 220 hp (164 kW) டெட்ராய்ட் டீசல் எந்திரங்களுடன் அமைக்கப்பட்டதாகும். குப்பை-கூளம் அல்லது காட்டுச்செடிகளில் சிக்கிக் கொள்ளும் கப்பலின் இயக்க உறுப்புகளை பொருட்படுத்தாமல் கையினால் இயக்க கூடிய திறனை இந்த அமைப்புகள் அளித்தன.

குறிப்புதவிகள்

தொகு
  1. 1.0 1.1 Jacuzzi Brands Corporation: Information and Much More from Answers.com
  2. 2.0 2.1 டாலாஸ் க்ரோனிக்கல் செப்டம்பர் 16, 2008
  3. 3.0 3.1 http://jacuzzihottubs.com/about/timeline.html
  4. http://inventors.about.com/library/inventors/bljacuzzi.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-25. பார்க்கப்பட்ட நாள் 2010-04-23.
  6. ஜக்குஸி ப்ராண்ட்ஸ் இஸ் கோயிங் பிரைவேட். ரியூட்டர்ஸ், அக்டோபர் 12, 2006

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்குசி&oldid=3641446" இலிருந்து மீள்விக்கப்பட்டது