ஜலோர் (Jalore), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தென்மேற்கில் உள்ள ஜலோர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். மார்வார் பிரதேசத்தில் உள்ள ஜலோர் நகரம், ஜோத்பூர் நகரத்திற்கு தெற்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜெய்ப்பூர் நகரத்திற்கு தென்மேற்கே 414.1 கிலோ மீட்டர் தொலைவிலும்; அகமதாபாத் நகரததிற்கு வடக்கே 309.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு ஜலோர் கோட்டை உள்ளது.

ஜலோர்
जालोर
சுவர்ணகிரி
நகரம்
ஜலோர் is located in இராசத்தான்
ஜலோர்
ஜலோர்
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் ஜலோர் நகரத்தின் அமைவிடம்
ஜலோர் is located in இந்தியா
ஜலோர்
ஜலோர்
ஜலோர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°21′N 72°37′E / 25.35°N 72.62°E / 25.35; 72.62
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்ஜலோர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஜலோர் நகராட்சி
ஏற்றம்
178 m (584 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்54,081
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
343001
தொலைபேசி குறியீடு912973
வாகனப் பதிவுRJ-16
அருகமைந்த நகரங்கள்சிரோஹி, பார்மேர், மெக்சனா, ஜோத்பூர்
இணையதளம்jalore.rajasthan.gov.in

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 30 வார்டுகளும், 10,400 வீடுகளும் கொண்ட ஜலோர் நகரத்தின் மக்கள் தொகை 54,081 ஆகும். அதில் ஆண்கள் 28,456 மற்றும் பெண்கள் 25,625 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 928 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.67% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.15% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 86.12%, இசுலாமியர் 10.74%, சமணர்கள் 2.63%, சீக்கியர்கள் 0.16%, கிறித்தவர்கள் 0.17% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.[1]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • Jalore at Rajasthan Tourism Website.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலோர்&oldid=3618368" இலிருந்து மீள்விக்கப்பட்டது