ஜவகர் கோளரங்கம்

ஜவகர் கோளரங்கம் (Jawahar Planetarium) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது.[1] இது 1979-இல் கட்டப்பட்டது. இக்கோளரங்கம் நேரு-காந்தி குடும்பத்தின் முன்னாள் வசிப்பிடமான ஆனந்த பவனுக்கு அருகில் அமைந்துள்ளது. ஆனந்த பவன் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. இது 'ஜவகர்லால் நேரு நினைவு நிதி' (1964-இல் நிறுவப்பட்டது) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ள தீன் மூர்த்தி பவனில் உள்ளது.[2]

ஜவகர் கோளரங்கம்
ஜவகர் கோளரங்கம் முகப்பு
Map
நிறுவப்பட்டது1975
அமைவிடம்பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேசம், இந்தியா
ஆள்கூற்று25°27′32″N 81°51′37″E / 25.45890°N 81.86024°E / 25.45890; 81.86024
வகைஅறிவியல் காட்சியகம்
உரிமையாளர்ஜவகர்லால் நேரு நினைவு நிதி

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் முதல் பிரதமரின் பிறந்தநாளான நவம்பர் 14 அன்று, ஜவகர்லால் நேரு நினைவு நிதியத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்படும் மதிப்புமிக்க 'ஜவகர்லால் நேரு நினைவு விரிவுரை' கோளரங்கத்தில் நடத்தப்படுகிறது.

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவகர்_கோளரங்கம்&oldid=3920398" இலிருந்து மீள்விக்கப்பட்டது