ஜவஹர்லால் நேரு கோளரங்கம்

ஜவஹர்லால் நேரு கோளரங்கம் (Nehru Planetarium) இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவாகப் பெயரிடப்பட்ட இந்தியாவில் உள்ள ஐந்து கோளரங்கங்கள் ஆகும். இவை மும்பை, புது தில்லி, புனே மற்றும் பெங்களூரில் அமைந்துள்ளன. மேலும் நேரு பிறந்த அலகாபாத்தில் ஜவஹர் கோளரங்கம் உள்ளது.

அமைவிடங்கள்

தொகு

புது தில்லியில் உள்ள நேரு கோளரங்கம், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும், தற்போது அவரது நினைவாக தற்போது அருங்காட்சியகமாகவும், நேரு அருங்காட்சியகமும் கோளகமும் என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் இது தீன் மூர்த்தி பவன் மைதானத்தில் அமைந்துள்ளது.

மும்பையில் உள்ள கோளரங்கம் முன்னாள் பிரதம மந்திரி திருமதி இந்திரா காந்தி அவர்களால் பிப்ரவரி 6 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] இந்திய வின்வெளி ஆராய்ச்சியாளரான ராகேஷ் சர்மாவை விண்வெளிக்கு எடுத்துச் சென்ற சோயுஸ் டி-10 இந்த இடத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும். மேலும் அவரது விண்வெளி உடையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு

தொகு

ஜவகர்லால் நேரு கோளரங்கதில் உள்ள விண்வெளி திரையரங்கம் ஒவ்வொரு வருடமும் 20 லச்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்க்கக்கூடிய ஒரு புகழ்வாய்ந்த இடமாகும். கோள்கள், விண்மின்கள், பற்றிய செய்திகளை புகைப்படங்கள், ஓவியங்கள், குண்சித்திர கதாபாத்திரங்கள், கணினி உருவ பொம்மைகள் மூலம் சிறப்பு ஒலி, ஒளி வடிவமைப்புடன் காண்பிக்கப்படுகிறது. மீண்டும் 2016 செப்டம்பர் மாதம் 11கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இங்கு உள்ள பெரிய படம் காட்டிமூலம் 2 மில்லியன் நட்சதிரங்கள் வரை காணமுடியும்.[2][3][4]

மேற்கோள்கள்

தொகு

புகைப்படங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு