ஜான் ஊர்த்
ஜான் என்றிக் ஊர்த் (Jan Hendrik Oort, அரசு வானியல் கழக அயல்நாட்டு உறுப்பினர்[1] (/ˈɔːrt/ or /ˈʊərt/;[2] 28 ஏப்பிரல் 1900 – 5 நவம்பர் 1992) நெதெர்லந்து சார்ந்த ஒரு டச்சு வானியலாலர். இவர் பால்வழி பற்றிய புரிதலில் பெரும்பங்களிப்பு செய்துள்ளார். இவர் ஒரு கதிர்வீச்சு வானியல் முன்னோடி.[3] நியூயார்க் டைம்சு இதழ் தன் நினைவேந்தலில் இவரை இந்த நூற்றாண்டின் ”புடவி தேட்டத்தில் பெரும்பணியாற்றிய முன்னோடி வானியலாளர்களில் ஒருவராக” பாராட்டியுள்ளது.[4] ஐரோப்பிய விண்வெளி முகமையின் வலைத்தளம் இவரை “இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வானியலாளராக்க் கருதுவதோடு இவர் தன் அரிய கண்டுபிடிப்புகளால் வானியலையே புரட்சிகரமாக மாற்றியதாகக் கூறுகிறது.”[5] ஊர்த்தின் பெயர் 1955 இல் நூறு வாழும் பெருமக்களில் ஒருவராக லைஃப் இதழில் வெளியிடப்பட்டது.[6] போருக்குப் பின்னரான வானியலில் நெதெர்லாந்தை அதன் முன்னணிக்கு வந்தவரகக் கருதப்படுகிறார்.”[4]
ஜான் ஊர்த் Jan Oort | |
---|---|
பிறப்பு | பிரானெக்கர், பிரீசுலாந்து | 28 ஏப்ரல் 1900
இறப்பு | 5 நவம்பர் 1992 லைடன், தெற்கு ஒல்லாந்து | (அகவை 92)
தேசியம் | டச்சு |
துறை | வானியல் |
ஆய்வு நெறியாளர் | யாக்கோபுசு கார்னேலியசு காப்டெய்ன் |
அறியப்படுவது |
|
விருதுகள் | வெத்லேசன் பரிசு (1966) கியோட்டோ பரிசு (1987) |
ஊர்த் பால்வழி சுழல்கிறதென்று தீர்மானிது, சூரியன் அதன் மையத்தில் அமையவில்லையென்று உறுதிப்படுத்தினார். இவர் 1932 இல் கரும்பொருண்ம்ம் நிலவுவதையும் முன்மொழிந்தார். இதுவே புடவியின் 84.5% பங்களவுக்கு அமைகிறதென்றார். இதன் ஈர்ப்பே விண்மீன்களைப் களக்கொத்துகளாக்கி, அவற்றைப் பால்வெளிகளின் சரங்களாக அணிதிரட்டுகிறதென்றார்.”[4][7] இவர்தான் பால்வெளியின் புறவட்டத்தை அதாவது பால்வழியின் விண்மீன்களின் குழுவொன்று முதன்மை வட்டத்தின் வெளியே சுற்றி வருவதைக் கண்டறிந்தார்.[8] இவர் மேலும் வால்வெள்ளிகள் வட்டணைகளில் சுற்றிவருவதைத் தெளிவாகக் கூறியதோடு அவற்றின் பல கருத்துப்படிமங்களையும் உருவாக்கினார் “implied there was a lot more solar system than the region occupied by the planets.”[4]
ஊர்த் முகிலும் ஊர்த் மாறிலிகளும் சிறுகோள் 1691உர்த்தும் இவரது பெயரால் வழங்குகின்றன.
ஊர்த்தின் சில கண்டுபிடிப்புகள்
தொகு- ஊர்த் 1924 இல் பால்வழி எனும் நம் பால்வெளியின் புறவட்டத்தைக் கண்டுபிடித்தார். இதில் அணிதிரண்ட விண்மீன்கள் ஒரு குழுவாகப் பால்வழியை முதன்மை வட்ட்த்தின் வெளியே சுற்றிவருகின்றன என்றார்.
- இவர் 1927 இல் பால்வழியின் மையம் புவியில் இருந்து 5,900[பார்செக்குகள் (19,200 ஒளிடாண்டுகள்) தொலைவில் சகாரிட்டசு விண்மீன் குழுவின் திசையில் அமைவதாகக் கூறினார்.[9]
- இவர் 1932 இல் பால்வழி விண்மீன்களின் இயக்கங்களை அளந்து முதன்முதலில் கரும்பொருண்மம் நிலவுவதைச் சான்றோடு காட்டினார். அதாவது, பால்வழித் தளத்தின் பொருண்மை காணும் பொருள்களின் பொருண்மையை விட கூடுதலாக இருத்தலால், அதன்வழி கரும்பொருண்மம் பால்வழியின் மையத்தில் இருப்பதை நிறுவினார்.[10][11][12]
- இவர் சூரியனைப் போல பால்வழி 100 பில்லியன் மடங்காக உள்ளதாக எடுத்துக் காட்டினார்.
- இவர் 1950 இல் சூரியக் குடும்பத்தின் பொது வட்டரத்தில் இருந்து வால்வெள்ளிகள் வருவதை முன்மொழிந்தார். இவ்வட்டரம் இப்போடு ஊர்த் முகில் எனப்படுகிறது.
- இவர் நண்டு ஒண்முகிலின் ஒளி முனைவுற்றுள்ளதைக் கண்டறிந்து இது ஒத்தியங்கு முடுக்கி உமிழ்வால் விளையும் கதிர்வீச்சாகும் என்றார்.
தகைமைகள்
தொகுவிருதுகள்
- பசிபிக் வானியல் கழகப் பொற்பதக்கம், 1942
- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம், 1946
- பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழக ஜான்சன் பதக்கம், 1946
- அமெரிக்க வானியல் கழக ஃஎன்றி நோரிசு இரசெல் விரிவுரைத் தகைமை, 1951
- கவுடன் கஞ்சவீர், 1960
- வெத்லேசன் பரிசு, 1966
- தேசிய வானியல் காணக, ஜான்சுகி பரிசு, 1967
- கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம், வானியல் நிறுவனம் (Astronomische Gesellschaft), 1972
- Association pour le Développement International de l’Observatoire de Nice இன் அடியோன் பதக்கம், 1978
- வானியற்பியலுக்கான பால்சன் பரிசு, 1984
- இனமோரி அறக்கட்டளையின், கயோட்டோ பரிசு, 1987
இவர் பெயரிடப்பட்டவை
- சிறுகோள் 1691ஊர்த்
- ஊர்த் முகில்
- பால்வெளிக் கட்டமைப்பின் ஊர்த் மாறிலிகள்
உறுப்பினர்த் தகுதிகள்
- நெதெர்லாந்து அரசுகலை, அறிவியல் கழகத்தின் உறுப்பினர் (1937–1943, 1945–)[13]
இவர் இறந்த பிறகு நோபெல் பரிசாளரான சுப்ரமணியன் சந்திரசேகர், "வானியலின் ஓக் மரம் சாய்ந்திடவே, அதன் அரிய நிழலை இழந்து விட்டோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.[14]
குறிப்புகள்
தொகு- ↑ Hendrik C. van de Hulst (1994). "Jan Hendrik Oort. 28 April 1900-5 November 1992". Biographical Memoirs of Fellows of the Royal Society 40: 320–326. doi:10.1098/rsbm.1994.0042.
- ↑ "Oort". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)
- ↑ Lodewijk Woltjer (November 1993). "Obituary: Jan H. Oort". Physics Today 46 (11): 104–105. doi:10.1063/1.2809110. Bibcode: 1993PhT....46k.104W. http://www.physicstoday.org/resource/1/phtoad/v46/i11/p104_s1?bypassSSO=1. பார்த்த நாள்: 2016-02-06.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Wilford, John (12 November 1992). "Jan H. Oort, Dutch Astronomer In Forefront of Field, Dies at 92". New York Times. http://www.nytimes.com/1992/11/12/us/jan-h-oort-dutch-astronomer-in-forefront-of-field-dies-at-92.html. பார்த்த நாள்: 30 May 2014.
- ↑ "Jan Hendrik Oort: Comet Pioneer". European Space Agency. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
- ↑ Katgert-Merkelijn, J. "Jan Oort". Archived from the original on 21 May 2013. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
- ↑ Bertschinger, Edmund. "DARK MATTER, COSMOLOGICAL". பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
- ↑ J. H. Oort; Arias, B; Rojo, M; Massa, M (June 1924), "On a Possible Relation between Globular Clusters and Stars of High Velocity", Proc Natl Acad Sci U S A., 10 (6): 256–260, Bibcode:1924PNAS...10..256O, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1073/pnas.10.6.256, PMC 1085635, PMID 16586938.
- ↑ J. H. Oort (1927-04-14), "Observational evidence confirming Lindblad's hypothesis of a rotation of the galactic system", Bulletin of the Astronomical Institutes of the Netherlands, 3 (120): 275–282, Bibcode:1927BAN.....3..275O.
- ↑ http://imagine.gsfc.nasa.gov/docs/teachers/galaxies/imagine/hidden_mass.html
- ↑ http://www.esa.int/esaSC/SEMBPC2PGQD_index_0.html
- ↑ Ken Freeman, Geoff McNamara (2006). In Search of Dark Matter. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-27616-8. "the story of the emergence of the dark matter problem, from the initial 'discovery' of dark matter by Jan Oort"
- ↑ "Jan Hendrik Oort (1900 - 1992)". Royal Netherlands Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 30 July 2015.
- ↑ van de Hulst, H. C. (1994), "Jan Hendrik Oort (1900–1992)", Quarterly Journal of the Royal Astronomical Society, 35 (2): 237–242, Bibcode:1994QJRAS..35..237V.
வெளி இணைப்புகள்
தொகு- Jan Oort, astronomer (Leiden University Library, April–May 2000) பரணிடப்பட்டது 2013-05-21 at the வந்தவழி இயந்திரம்
- கணித மரபியல் திட்டத்தில் Jan Hendrik Oort