ஜான் தன்ராஜ்
ஜான் தன்ராஜ் (John Dhanraj) இவர் ஓர் இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் 2010 முதல் 2013 வரை பொதிகைத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 2014இல் கலைஞர் தொலைக்காட்சியில் சமூகப் பிரச்சினைகளை விவாதிக்கும் 'நெஞ்சு பொறுக்கிதில்லையே' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.[1] காரசாரத்திற்கான சிறந்த தொகுப்பாளர் விருதான எடிசன் விருதுகளை பெற்றுள்ளார்.
ஜான் தன்ராஜ் | |
---|---|
நெஞ்சு பொறுக்குதில்லையே நிகழ்ச்சியில் ஜான் தன்ராஜ் | |
இயற்பெயர் | ஜான் தன்ராஜ் |
Medium | தொலைக்காட்சி, திரைப்படம் |
தேசியம் | இந்தியர் |
நடிப்புக் காலம் | 1992 முதல் தற்போது வரை |
முக்கிய தயாரிப்புகளும் பாத்திரங்களும் | நெஞ்சு பொறுக்குதில்லையே நிகழ்ச்சி |
இணையத்தளம் | www |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர், இந்தியாவின் தமிழ்நாட்டில்சென்னையில் பிறந்தார். டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.
தொழில்
தொகுஇவர், 1992 ஆம் ஆண்டில் சன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான கவிதை கேளுங்கள்,[2] என்ற உடனடி கவிதை நிகழ்ச்சியிலிருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பொதிகையில் வெளியான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியான 'காரசாரம்' (2010-2013) என்ற நிகழ்ச்சியில் தோன்றினார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற சமூகப் பிரச்சினைகள் பற்றிய ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
பாடலாசிரியர்
தொகுமனதில் ஒரு மார்கழி (தமிழ்) [3] மற்றும் லில்லிஸ் ஆஃப் மார்ச் (மலையாளம்) [4] படத்திற்காக இவர் பல பாடல்களை எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "எக்ஸ்பிரஸ் சேனல்". cinemaexpress.com. Archived from the original on 2014-01-03. பார்க்கப்பட்ட நாள் 2014-08-22.
- ↑ "பிரபலமான நிகழ்ச்சிகள்", குமுதம் (இதழ்), 19 October1995.
- ↑ "மனதில் ஒரு மார்கழி". www.maalaisudar.com. Archived from the original on 2014-08-18. பார்க்கப்பட்ட நாள் 2014-08-22.
- ↑ "John dhanraj Albums(malayalam)". www.raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-22.