ஜாம்சோரோ மாவட்டம்


ஜாம்சோரோ மாவட்டம் (Jamshoro District) (சிந்தி மொழி: ضلعو ڄام شورو‎), (உருது: ضِلع جامشورو‎), தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் ஐதராபாத் கோட்டத்தின் ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் மாவட்டத் தலைமையிடம் ஜாம்சோரோ நகரம் ஆகும். இம்மாவட்டம் சிந்து ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

ஜாம்சோரோ மாவட்டம்
ضلعو ڄامشورو
மாவட்டம்
சிந்து மாகாணத்தில் ஜாம்சோரோ மாவட்டத்தின் அமைவிடம்
சிந்து மாகாணத்தில் ஜாம்சோரோ மாவட்டத்தின் அமைவிடம்
நாடுபாகிஸ்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
Headquartersஜாம்சோரோ
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்11,76,969
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
வருவாய் வட்டங்கள்5
இணையதளம்www.jamshoro.gos.pk


வரலாறு

தொகு

டிசம்பர் 2004-இல் தாது மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு ஜாம்சோரோ மாவட்டம் துவக்கப்பட்டது.

மாவட்ட எல்லைகள்

தொகு

ஜாம்சோரோ மாவட்டத்தின் வடக்கில் தாது மாவட்டமும், கிழக்கில் சிந்து ஆறு நவாப் ஷா, மத்தியாரி மற்றும் ஐதராபாத் மாவட்டங்களைப் பிரிக்கிறது. தெற்கில் தத்தா மாவட்டமும் மற்றும் தென்மேற்கில் கராச்சி மாவட்டமும், மேற்கில் பலுசிஸ்தான் மாகாணத்தின்]] லஸ்பெல்லா மாவட்டமும் உள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

11,517 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஜாம்சோரோ மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படு, மக்கள் தொகை 1,176,969 ஆக உள்ளது. [2]மக்கள் தொகை வளர்ச்சி (1981-1998) 2.57% ஆக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 89 ஆக உள்ளது. இம்மாவட்டத்தின் முதல் மொழியான சிந்தி மொழியை 83.86% மக்கள் பேசுகின்றனர். உருது மொழியை 6.28% மக்களும், பஞ்சாபி மொழியை 4.17% மக்களும், பஷ்தூ மொழியை 3.31% மக்களும் பேசுகின்றனர். [3]

பொருளாதாரம்

தொகு

இம்மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மைச் சார்ந்து உள்ளது. இங்கு கோதுமை, நெல், கரும்பு, வாழை முக்கியப் பயிர்களாக பயிரிடப்படுகிறது. மாவட்டத்தின் 20% மக்கள் மாகாண அரசிலும், பாகிஸ்தான் நடுவண் அரசிலும் ஊழியம் செய்கின்றனர்.

நூரியாபாத் மற்றும் கோட்டிரி தொழிற்சாலைகள் வளாகங்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. கோட்டிரி அனல் மின் நிலையம், மாவட்டத்திற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

கல்வி

தொகு

ஜாம்சோரோ மாவட்டத்தில் மெக்ரான் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகம், லியாகத் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பல்கலைக்கழகங்கள் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

ஜாம்சோரோ மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக கோட்டிரி, ஜாம்சோரோ, செக்வான் செரீப், தானா புல்லா கான் மற்றும் மஞ்சண்ட் என ஆறு வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

ஆதார நூற்பட்டியல்

தொகு
  • 1998 District census report of Dadu. Census publication. Vol. 82. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 2000.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாம்சோரோ_மாவட்டம்&oldid=3287243" இலிருந்து மீள்விக்கப்பட்டது