ஜாம்தாரா
ஜாம்தாரா (Jamtara) இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த ஜாம்தாரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான ராஞ்சிக்கு வடகிழக்கே, தேசிய நெடுஞ்சாலையில் எண் 320-இல் 204 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியாவின் கணினி குற்றங்களின் தலைநகரம் என ஜாம்தாரா நகரத்தை அழைப்பர்.[1][2]
ஜாம்தாரா | |
---|---|
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாம்தாரா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 23°57′48″N 86°48′05″E / 23.9633°N 86.8014°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜார்கண்ட் |
மாவட்டம் | ஜாம்தாரா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,802 km2 (696 sq mi) |
ஏற்றம் | 155 m (509 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 29,415 |
• அடர்த்தி | 439/km2 (1,140/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 815351 |
தொலைபேசி குறியீடு | 06433 |
வாகனப் பதிவு | JH-21 |
பாலின விகிதம் | 959 ♂/♀ |
இணையதளம் | jamtara |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து 155 மீட்டர் (508 அடி) உயரத்தில் உள்ள ஜாம்தாரா நகரம் 23°57′N 86°48′E / 23.95°N 86.8°E பாகையில் அமைந்துள்ளது. இந்நகரம் ராஞ்சியிலிருந்து 204 கிலோ மீட்டர் தொலைவிலும்; தன்பாத் நகரத்திலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலும்; கொல்கத்தாவிலிருந்து 260 கிலோ மீட்டர் தொலைவிலும் மற்றும் பாட்னாவிலிருந்து 290 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 14 வார்டுகளும், 5743 வீடுகளும் கொண்ட ஜாம்தாரா பேரூராட்சியின் மக்கள் தொகை 29,415 ஆகும். அதில் 15,372 ஆண்கள் மற்றும் 14,043 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83.8% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,034 மற்றும் 1,162 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 89.82%, இசுலாமியர் 8.3% மற்றும் பிறர் 1.16% ஆகவுள்ளனர்.[3]
தட்பவெப்பம்
தொகுஇந்நகரத்தின் கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பம் 45 °C மற்றும் குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பம் 2 °C ஆக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Singh, Shiv Sahay (12 August 2017). "The cyber con 'artists' of Jharkhand's Jamtara district". The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/the-cyber-con-artists-of-jamtara/article19476173.ece.
- ↑ "ED raids 5 locahhajahahbababByber conning PMLA case". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ed-raids-5-locations-in-jharkhand-in-first-cyber-conning-pmla-case/articleshow/65700810.cms?from=mdr.
- ↑ Jamtara Population, Religion, Caste, Working Data Jamtara, Jharkhand - Census 2011