ஜேரட் டயமண்ட்
(ஜாரெட் டயமண்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜேரட் டயமண்ட் அல்லது ஜாரெட் டயமண்ட் (Jared Diamond, பி. செப்டம்பர் 10, 1937) ஒரு அமெரிக்க அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தனது அறிவியல் அபுனைவு படைப்புகளில் பல அறிவியல் துறைகளைப் பற்றி எழுதியுள்ளார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (யுசிஎலஏ)புவியியல் மற்றும் உடற்செயலியல் பேராசிரியராக உள்ளார். தி தர்ட் சிம்பான்சி, துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு, கொலாப்ஸ் போன்ற இவரது வெகுஜன அறிவியல் புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை. புலிட்சர் பரிசு, அமெரிக்காவின் தேசிய அறிவியல் பதக்கம், ஐக்கிய இராச்சியத்தின் வேந்திய சங்கத்தின் அறிவியல் புத்தகங்களுக்கான பரிசு உட்பட பல விருதுகளையும் வென்றுள்ளார்.
ஜேரட் டயமண்ட் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜேரட் மேசன் டயமண்ட் 10 செப்டம்பர் 1937 பாஸ்டன், மாசசூசெட்ஸ் |
வாழிடம் | அமெரிக்கா |
குடியுரிமை | அமெரிக்கர் |
துறை | உடற்செயலியல் உயிர் இயற்பியல் பறவையியல் சூழலியல் புவியியல் பரிணாம உயிரியல் மானுடவியல் |
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) |
கல்வி கற்ற இடங்கள் | ஹார்வர்டு கேம்பிரிச் பல்கலைக்கழகம் |
விருதுகள் | அறிவியலுக்கான பை பீட்டா காப்பா விருது (1997) வேந்திய சங்கத்தின் அறிவியல் புத்தகங்களுக்கான பரிசு (1992, 1998 & 2006) புலிட்சர் பரிசு (1998) தேசிய அறிவியல் பதக்கம் (1999) |