துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு

துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு: மனித சமுகங்களின் நிலையைத் தீர்மானித்த காரணிகள் (Guns, Germs, and Steel: The Fates of Human Societies) என்பது 1997 ஆம் ஆண்டில் வெளியான ஒரு நூல் ஆகும். இதனை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியல், உடலியங்கியல் பேராசிரியர் ஜேரட் டயமண்ட் எழுதியிருந்தார். 1998 ஆம் ஆண்டில் இந்நூலிற்குச் சிறந்த அ-புனைவுக்கான புலிட்சர் பரிசு கிடைத்தது. இந்நூலை ஒட்டி விபரணத் திரைப்படம் ஒன்று தேசிய புவியியல் கழகத்தினால் தயாரிக்கப்பட்டது.[1]

துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு
மனித சமுகங்களின் நிலையைத் திர்மானித்த காரணிகள்
நூலாசிரியர்ஜேரட் டயமண்ட் (தமிழில் : ப்ரவாஹன்)
நாடுவட அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பொருண்மைபுவியியல், சமூக பரிணாம், வரலாறு, கலாச்சார பரவல்
வெளியிடப்பட்டது1997 (W. W. Norton) (தமிழில்: பாரதி புத்தகாலயம்)

உலகின் ஒரு சில நாடுகள் வளமாகவும், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் இருக்கிறதே அது ஏன் என்ற கேள்விக்கு ஜேரட் டயமண்ட், இந்த நூலின் மூலம் விடையைத் தேடிப் பயணிக்கிறார். ஐரோப்பியர்கள் உலகின் பல பகுதிகளைத் தங்கள் காலனிகளாக மாற்ற முடிந்தது எவ்வாறு ஏன் சீனாவோ அமெரிக்க இந்தியர்களின் இன்கா சமுகமோ இதை செய்ய முடியவில்லை மனித சமுகத்தின் மீதான அடிப்படையான சுற்றுச்சுழல் சக்திகளின் தாக்கத்தை உலகப் புகழ்பெற்ற இந்நூல் விளக்குகிறது மேலும் மனித குலத்தின் கடந்து 13,000 ஆண்டுகால வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. Lovgren, Stefan (2005-07-06). ""Guns, Germs and Steel": Jared Diamond on Geography as Power". தேசிய புவியியல் கழகம். பார்க்கப்பட்ட நாள் 2011-11-16.

வெளி இணைப்புகள் தொகு