ஜார்ஜியாவின் குடியரசுத் தலைவர்

ஜோர்ஜியா நாட்டு குடியரசுத் தலைவர் ஜோர்ஜியாவின் நாட்டுத் தலைவர் ஆவார். இவரே அரசின் உயரதிகாரியும் ஆவார் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றதில் இருந்து குடியரசுத் தலைவர் பதவி செயல்பாட்டில் இருக்கிறது.[1] குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பார். 2013ஆம் ஆண்டு முதல் ஜியோர்ஜி மார்கவேலாஷ்விலி என்பவர் குடியரசுத் தலைவராக பதவியில் உள்ளார்.

ஜார்ஜியா
საქართველოს პრეზიდენტი குடியரசுத் தலைவர்
தற்போது
சலோமி ஜோராபிச்விலி

16 டிசம்பர் 2018 முதல்
நியமிப்பவர்மக்களின் நேரடி வாக்கு
பதவிக் காலம்ஐந்தாண்டுகள், ஒரு முறை மட்டுமே கூடுதல்
முதலாவதாக பதவியேற்றவர்சுவியடு கம்சகுர்தியா
உருவாக்கம்14 ஏப்ரல் 1991
இணையதளம்Official website

அதிகாரங்களும் பணிகளும் தொகு

இவரே நாட்டின் தலைவர் ஆவார். இவர் வெளியுறவுக் கொள்கைகளை செயல்படுத்துவதிலும், உள்நாட்டு ஒருமைப்பாட்டை காப்பதிலும் கவனம் செலுத்துவார். வெளிநாடுகள் உடனான் உறவுகளை மேம்படுத்தக்கூடிய, ஜோர்ஜியாவின் மூத்த பிரதிநிதியாக குடியரசுத் தலைவர் செயல்படுவார். உள்ளாட்சி அமைப்புகள் அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்ப செயல்படுவதை உறுதிபடுத்தும் பொறுப்பும் இவருக்கு உண்டு.[2]

குடியரசுத் தலைவர் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவார். ஜோர்ஜியாவின் குடிமகனாகவோ குடிமகளாகவோ இருந்து வாக்களிக்கும் உரிமையை பெற்று இருக்கும் ஒருவர், 35 வயதை அடைந்திருந்தால் குடியரசுத் தலைவராகும் தகுதியைப் பெறுகிறார். இவர் குறைந்தது 15 ஆண்டுகள் ஜோர்ஜியாவில் வசித்திருக்க வேண்டும். குடியரசுத் தலைவர் வேறு எந்த அரசுப் பொறுப்பிலும் இருக்கக் கூடாது. மற்ற நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெறக் கூடாது.[2]

பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன், மற்ற நாடுகளுடனான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதும், பிற நாட்டு அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் இவரது பணிகள். பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன், தூதுவர்களையும் பிற தூதரக அதிகாரிகளை நீக்கவும், அவசர கால சட்டத்தை பிறப்பிக்கவும் செய்யலாம். கருணை மனுவை ஏற்பது, அகதிகளுக்கு புகலிட உரிமை வழங்குவது உள்ளிட்ட அதிகாரங்களும் பெற்றவர். இவரே முப்படைகளின் தலைவரும் ஆவார். தேசிய பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பினர்களை நியமித்து, கூட்டங்களை வழிநடத்துவார்.[2]

குடியரசுத் தலைவருக்கு தற்காப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பதவியில் இருக்கும் காலத்தில், அவரை கைது செய்யவோ, இவர் மீது குற்றம் சுமத்தவோ முடியாது. இவர் அரசமைப்புச் சட்டத்தை மீறினாலோ, நாட்டுக்கு எதிராக செயல்பட்டாலோ அவரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு. இதை செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியாக வேண்டும்.[2] இவருக்கு அரசின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு அளிக்கின்றனர்.[3]

உறுதிமொழி தொகு

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முடிந்ததும் வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று, நாட்டின் முன்னிலையிலும், கடவுளின் முன்னிலையும் உறுதிமொழி ஏற்பார்.[2]

ஜோர்ஜியாவின் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட நான், ஜோர்ஜியாவின் அரசமைப்புச் சட்டத்தை போற்றி, அதன்வழி நடப்பதாகவும், நாட்டின் ஒற்றுமையை பேணி காப்பதாகவும், கடவுளின் மீது ஆணையிட்டு சொல்கிறேன். குடியரசுத் தலைவருக்கான அனைத்து பணிகளையும் செவ்வனே செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன். மக்கள் நலத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வேன்.

வரலாறு தொகு

சோவியத் ஒன்றியத்தில் இருந்து 1991ஆம் ஆண்டின் ஏப்ரல் ஒன்பதாம் நாளில் ஜோர்ஜியா தனி நாடாக பிரிந்தது. அப்போதே ஜோர்ஜியாவின் உச்சமன்றம் (நீதிமன்றம் அல்ல) குடியரசுத் தலைவர் பதவியை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அப்போது சுவியாடு கம்சகுர்தியா என்பவர் பதவியேற்றார். இவருக்கு பின்னர் எதுவார்து செவர்துநாத்சே பதவியில் இருந்தார். 2004ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற மிக்கைல் சாக்கஷ்விலி இறுதியாக பதவியில் இருந்தார். தற்போதைய குடியரசுத் தலைவராக ஜியோர்ஜி மார்கவேலஷ்விலி பதவியில் உள்ளார்.

சான்றுகள் தொகு

  1. (ஜார்ஜிய மொழி) (உருசிய மொழியில்) The Law of the Republic of Georgia on the Introduction of the Post of President of the Republic of Georgia பரணிடப்பட்டது 2012-01-20 at the வந்தவழி இயந்திரம். ஜோர்ஜியாவின் பாராளுமன்றம் Archive. Accessed on 17 April 2011
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Constitution of Georgia. Chapter 4. Articles 69–77. Parliament of Georgia. Retrieved on 14 June 2009
  3. History. Special State Protection Service of Georgia. Accessed on 24 April 2011

இணைப்புகள் தொகு