ஜார்ஜ் எல்லிசு
ஜார்ஜ் பிரான்சிசு இரேனர் எல்லிசு (George Francis Rayner Ellis) FRSH Hon. FRSSAF (பிறப்பு: ஆகஸ்ட் 11,1939) தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் கணித, பயன்பாட்டுக் கணிதத் துறையில் சிக்கலான அமைப்புகளின் புகழ்பெற்ற பேராசிரியராக உள்ளார். 1973 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக இயற்பியலாளர் சுட்டீவன் ஆக்கிங்குடன் இணைந்து காலவெளியின் பேரியல் கட்டமைப்பு எனும் நூலை எழுதினார் , மேலும் அண்டவியலில் உலகின் முன்னணி கோட்பாட்டாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.[1] 1989 முதல் 1992 வரை பொது சார்பியல் , ஈர்ப்பு பற்றிய பன்னாட்டுக் கழகத்தின் தலைவராக பணியாற்றினார். இவர் அறிவியல், மதத்திற்கான பன்னாட்டுக் கழ>கத்தின் முன்னாள் தலைவர் ஆவார். அவர் என். ஆர். எஃப் மதிப்பீட்டின்படி, ஏ - தர ஆராய்ச்சியாளர் ஆவார்.
1970கள் மற்றும் 1980களில் தேசிய கட்சி ஆட்சியின் போது குவேக்கராக நிறவெறிக்கு எதிராக குரல் கொடுத்தார் , மேலும் இந்தக் காலகட்டத்தில்தான் எல்லிசின் ஆராய்ச்சி அண்டவியல் பற்றிய கோட்பாட்டுக் கூறுபாடுகளில் கவனம் செலுத்தியது , இதற்காக அவர் 2004 இல் டெம்பிள்டன் பரிசை வென்றார்.[2][3] 1999 ஆம் ஆண்டில் நெல்சன் மண்டேலாவால் தென்னாப்பிரிக்காவின் விண்மீன் ஆணை அவருக்கு வழங்கப்பட்டது. 2007 மே 18 அன்று பிரித்தானிய அரசு கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாழ்க்கை.
தொகு1939 ஆம் ஆண்டில் ஜார்ஜ் எல்லிசு ஒரு செய்தித்தாள் ஆசிரியருக்கும் குவென்டோலின் கில்டா மெக்ராபர்ட் எல்லிசுக்கும் யோகான்னசுபர்கு நகரில் பிறந்தார். ஜார்ஜ் எல்லிசு கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு அவர் 1960 ஆம் ஆண்டில் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். இவர் வேலியிடல், படகுவிடல், வானில் பறத்தலில் பல்கலைக்கழகப் பேராளர் ஆவார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது , அங்கு 1964 ஆம் ஆண்டில் பயன்பாட்டு கணிதத்திலும் கோட்பாட்டு இயற்பியலிலும் முனைவர் பட்டம் பெற்றார்.
கேம்பிரிட்ஜில் 1965 முதல் 1967 வரை ஆராய்ச்சியாளராக பணியாற்றிய எல்லிசு , 1970 வரை பயன்பாட்டு கணிதம் கோட்பாட்டு இயற்பியல் துறையில் உதவி விரிவுரையாளராக இருந்தார் , பின்னர் 1974 வரை பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
எல்லிஸ் 1970 இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் என்றிக்கோ பெர்மி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியராக ஆனார். 1971 இல் கோர்சிகாவில் உள்ள கார்கேசு கோடைப் பள்ளியிலும் , 1972 இல் சிசிலியில் உள்ள எரிசு கோடைப் பள்ளியிலும் விரிவுரையாளராக இருந்தார். 1972 இல் காம்பர்கு பல்கலைக்கழகத்திலும் வருகை தரும் எச்3 பேராசிரியராக இருந்தார்.
அடுத்த ஆண்டு , பொது சார்பியல் கோட்பாட்டின் வளர்ச்சியில் முதன்மைச் செயல்பாட்டுத் தருணத்தில் சுட்டீவன் ஆக்கிங்குடன் இணைந்து கால்வெளியின் பேரியல் கட்டமைப்பு என்ற நூலை எழுதினார்.
அடுத்த ஆண்டில் , எல்லிசு தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பினார். அங்கே கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு கணிதப் பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். இந்தப் பதவியை அவர் 2005 இல் ஓய்வு பெறும் வரை வகித்தார்.
2005 ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர் மினசோட்டாவில் நடந்த நோபல் மாநாட்டில் எல்லிசு விருந்துப் பேச்சாளராக தோன்றினார்.
வேலை.
தொகுஜார்ஜ் எல்லிசு பல பத்தாண்டுகளாக சமச்சீரிலா அண்டவியல் (பியாஞ்சி படிமங்கள்), ஒருபடித்தற்ற அண்டங்கள், அண்டவியல்சார் மெய்யியல் புலங்களில் பணியாற்றியுள்ளார். 8. அவர் தற்போது சிக்கலின் தோற்றம், சிக்கலின் படிநிலையியலில் மேல் - கீழ் முதல் விளைவு வழியாக இது செயல்படுத்தப்படும் விதம் குறித்து எழுதுகிறார்.[4][5] அறிவியலின் மெய்யியலைப் பொறுத்தவரை , எல்லிசு ஒரு பிளாட்டோனியராக விளங்கினார்.
வெளியீடுகள்
தொகுபுத்தகங்கள்
தொகு- ——; Hawking, S.W. (1973). The Large Scale Structure of Space-Time. Cambridge: University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-20016-5.[6]
- ——; Dewar, David (1979). Low Income Housing Policy in South Africa. Urban Problems Research Unit, UCT.
- ——; Williams, Ruth (1988). Flat and Curved Space Times (2000 revised ed.). Oxford University Press.
- —— (1993). Before the Beginning: Cosmology Explained. Bowerdean/Marion Boyars.
- ——; Lanza, A.; Miller, J. (1993). The Renaissance of General Relativity and Cosmology (2005 paperback ed.). Cambridge: University Press.
- —— (1994). Science Research Policy in South Africa. Royal Society of South Africa.
- ——; Murphy, Nancey (1996). On The Moral Nature of the universe: Cosmology, Theology, and Ethics. Fortress Press.
- ——; Wainwright, John, eds. (1997). Dynamical Systems in Cosmology. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-55457-2.
- ——; Coles, Peter (1997). Is The Universe Open or Closed? The Density of Matter in the Universe. Cambridge Lecture Notes in Physics, vol. 7. Cambridge: University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-56689-6.
- ——, ed. (2002). The Far Future Universe: Eschatology from a Cosmic Perspective. Templeton Foundation Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-890151-90-4.
- —— (2004). Science in Faith and Hope: an interaction. Quaker Books.
- —— (2004a). Science and Ultimate Reality: Quantum Theory, Cosmology and Complexity. Cambridge: University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-83113-0.
- —— (2006). Handbook in Philosophy of Physics. Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53002-8.
- ——; Maartens, Roy; MacCallum, Malcolm A. H. (2012). Relativistic Cosmology. Cambridge: University Press.
- —— (2016). How Can Physics Underlie the Mind? Top-Down Causation in the Human Context. Springer.
ஆவணங்கள்
தொகுஎல்லிஸ் நேச்சர் என்ற இதழில் 17 கட்டுரைகள் உட்பட 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். குறிப்பிடத்தக்க ஆவணங்கள் பின்வருமாறு:
தகைமைகள்
தொகு2019 ஆம் ஆண்டில் கிரகாம்சுட்டவுனில் உள்ள உரோட்சு பல்கலைக்கழகம் எல்லிசுக்கு சட்டங்களில் தகைமை முனைவர் பட்டம் வழங்குவதாக அறிவித்தது.[7]
மேலும் காண்க
தொகு- அறிவியல், மத அறிஞர்களின் பட்டியல்
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ Gibbs, W. W. (1995). "Profile: George F. R. Ellis – Thinking Globally Acting Universally". Scientific American 273 (4): 50–55. doi:10.1038/scientificamerican1095-50. https://archive.org/details/sim_scientific-american_1995-10_273_4/page/50.
- ↑ "The Theology of the Anthropic Principle". Counterbalance Foundation. Center for Theology and the Natural Sciences. பார்க்கப்பட்ட நாள் October 13, 2021.
- ↑ "Templeton Prize for Progress Toward Research or Discoveries about Spiritual Realities". Archived from the original on 24 February 2008. பார்க்கப்பட்ட நாள் 16 May 2007.
- ↑ Felin, Teppo; Koenderink, Jan; Krueger, Joachim I.; Noble, Denis; Ellis, George F.R. (2021-02-10). "The data-hypothesis relationship". Genome Biology 22 (1): 57. doi:10.1186/s13059-021-02276-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-760X. பப்மெட்:33568195. பப்மெட் சென்ட்ரல்:7874637. https://doi.org/10.1186/s13059-021-02276-4.
- ↑ Felin, Teppo; Koenderink, Jan; Krueger, Joachim I.; Noble, Denis; Ellis, George F. R. (2021-02-10). "Data bias". Genome Biology 22 (1): 59. doi:10.1186/s13059-021-02278-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-760X. பப்மெட்:33568166. பப்மெட் சென்ட்ரல்:7874446. https://doi.org/10.1186/s13059-021-02278-2.
- ↑ Markus, Lawrence (1976). "Book Review: The large scale structure of space-time". Bulletin of the American Mathematical Society 82 (6): 805–818. doi:10.1090/S0002-9904-1976-14169-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9904.
- ↑ "Rhodes University honours five of Africa's best". grocotts.co.za. 7 March 2019. பார்க்கப்பட்ட நாள் 7 March 2019.
வெளி இணைப்புகள்
தொகு- Partial list of Ellis' published papers
- George Ellis's web page பரணிடப்பட்டது 2019-02-03 at the வந்தவழி இயந்திரம்
- Professor George Ellis: a man of many parts, Cape Argus, 18 March 2004
- George Ellis's scientific work as listed at SPIRES[தொடர்பிழந்த இணைப்பு]
- Interview with George Ellis (Recorded June 2004) at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 1 ஏப்பிரல் 2013) on Speaking of Faith with Krista Tippett (transcript பரணிடப்பட்டது 2016-12-30 at the வந்தவழி இயந்திரம்)
- George Ellis extended interview with transcript for the 'Why Are We Here?' documentary series.