ஜார்ஜ் மார்ஷல்

ஜார்ஜ் கேட்லெட் மார்ஷல் ஜூனியர் (George Catlett Marshall Jr. டிசம்பர் 31, 1880 - அக்டோபர் 16, 1959) ஓர் அமெரிக்க சிப்பாய் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் அமெரிக்காவின் இராணுவத்தின் மூலம் ஜனாதிபதிகள் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் மற்றும் ஹாரி எஸ். ட்ரூமன் ஆகியோரின் கீழ் தலைமைப் பணியாளராகப் பணியாற்றினார். பின்னர் ட்ரூமனின் கீழ் மாநில செயலாளராகவும் பாதுகாப்பு செயலாளராகவும் பணியாற்றினார். [1] வின்ஸ்டன் சர்ச்சில், இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் வெற்றிக்கு தலைமை தாங்கியதற்காக மார்ஷலை "வெற்றியின் அமைப்பாளர்" என்று பாராட்டினார், இருப்பினும், மார்ஷல் தலைமைப் பதவியை மறுத்துவிட்டார். பின்னர் அது அமெரிக்க சனாதிபதியான டுவைட் டி. ஐசனோவருக்குச் சென்றது .போருக்குப் பின்னர் பொருளாதாரா மிட்ட்பு பணிகளை மேற்கொண்டார். இந்த பணியினை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு 1953 இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பென்சில்வேனியாவின் யூனியன் டவுனில் பிறந்த மார்ஷல் 1901 இல் வர்ஜீனியா ராணுவ கல்வி நிறுவனத்தில் (வி.எம்.ஐ) பட்டம் பெற்றார். வர்ஜீனியாவின் டான்வில்லில் உள்ள டான்வில்லி மிலிட்டரி அகாதமியில் மாணவர்களின் தளபதியாக இவர் சில காலம் பணியாற்றிய பின்னர், மார்ஷல் 1902 பிப்ரவரியில் காலாட்படையின் இரண்டாவது லெப்டினெண்டாக தனது பதவி உயர்வு பெற்றார். எசுப்பானிய-அமெரிக்கப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில், அவர் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் பிலிப்பைன்ஸ்-அமெரிக்கப் போரின்போது பிலிப்பைன்ஸில் படைப்பிரிவுத் தலைவர் உள்ளிட்ட சில பொறுப்புகளை வகித்தார்.1908 ஆம் ஆண்டு இராணுவப் பணியாளர் கல்லூரியில் தனது முதல் பட்டத்தினைப் பெற்றார். 1916 ஆம் ஆண்டில் மார்ஷல் மேற்கத்திய துறையின் தளபதியான ஜே. பிராங்க்ளின் பெல்லுக்கு இவர் உதவியாளராக நியமிக்கப்பட்டார். இவர் 1 வது பிரிவில் பணியாறுவதற்காக நியமிக்கப்பட்டார், மேலும் அமெரிக்காவில் அணிதிரட்டல் மற்றும் பயிற்சிக்கு உதவினார், அத்துடன் பிரான்சு நாட்டில் போர் நடவடிக்கைகளைத் திட்டமிட்டார். பின்னர், அமெரிக்க எக்ஸ்பெடிஷனரி ஃபோர்ஸ் தலைமையகத்தில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட அவர், மியூஸ்-ஆர்கோன் தாக்குதல் உள்ளிட்ட அமெரிக்க நடவடிக்கைகளில் திட்டமிட்ட நபர்களில் முக்கிய நபராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

ஜார்ஜ் கேட்லெட் மார்ஷல் ஜூனியர், பென்சில்வேனியாவின் யூனியன் டவுனில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். ஜார்ஜ் கேட்லெட் மார்ஷல் சீனியர் மற்றும் லாரா எமிலி (நீ பிராட்போர்டு) மார்ஷல் ஆகியோரின் மகனாகப் பிறந்த இவர், [2] வர்ஜீனியா குடும்பத்தின் வாரிசாகவும், முன்னாள் தலைமை நீதிபதி ஜான் மார்ஷலின் தொலைதூர உறவினரும் ஆவார்.பின்னர், அவரது அரசியல் நிலைப்பாடுகள் பற்றி கேட்டபோது, மார்ஷல் தனது தந்தை ஒரு மக்களாட்சிக் கட்சியினைச் சேர்ந்தவர் (ஐக்கிய அமெரிக்கா), என்றும் அவரது தாயார் குடியரசுக் கட்சியினராகவும் இருந்தார் என்றும் தான் ஒரு எபிஸ்கோபாலியன் என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். [3]

வி.எம்.ஐ.யில் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து, மார்ஷல் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படைதொடர்பான போட்டித் தேர்வினை எழுதினார். [4] முடிவுகளுக்காக காத்திருந்தபோது, வர்ஜீனியாவின் டான்வில்லில் உள்ள டான்வில்லி ராணுவ நிறுவனத்தில் மாணவர்களின் படைத் தளபதி பதவியை ஏற்றுக்கொண்டார். [5] மார்ஷல் அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பிப்ரவரி, 1902 இல் இரண்டாவது துனை நிலை படை டதிகாரியாக நியமிக்கப்பட்டார். [6]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_மார்ஷல்&oldid=2898070" இருந்து மீள்விக்கப்பட்டது