ஜிஎடிட்
ஜிஎடிட்(gedit) UTF-8 வடிவத்துடன் ஒத்தியங்கக்கூடிய ஒர் உரை திருத்தி மென்பொருள். இது லினக்ஸ் இயங்குதளத்தில் குனோம் வரைகலை இடைமுகப்பினை தரும் பணிச்சூழலில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுவே குனோம் பணிசூழலின் இயல்பிருப்பான(default) உரை திருத்தியாகும். மேலும் இது மாக் ஓ.எசு(Mac OS), விண்டோசு(windows) இயங்குதளங்களிலும் இயங்கும். எளிமையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் ஜிஎடிட்-இல் உள்ள நீட்சிகளை (addons) நிறுவதின் மூலம் இதை ஒரு நிரல் திருத்தியாகவும், மீயுரை திருத்தியாகவும் பயன்படுத்த முடியும். இந்த உரையாவணத் தொகுப்பியானது, உபுண்டு இயக்குதளத்தில் இயல்பிருப்பாகத் தரப்படுகிறது.
gedit 3.12 with syntax highlighting | |
உருவாக்குனர் | Paolo Maggi Paolo Borelli Steve Frécinaux Jesse van den Kieboom James Willcox Chema Celorio Federico Mena Quintero |
---|---|
தொடக்க வெளியீடு | பெப்ரவரி 12, 1999 |
மொழி | C, Python |
உருவாக்க நிலை | Limited maintenance (August 2017) |
மென்பொருள் வகைமை | உரைத்தொகுப்பி |
உரிமம் | குனூ பொதுமக்கள் உரிமம் |
இணையத்தளம் | wiki |