ஜிசாட்-7 என்பது இந்தியாவின் கடற்படையை நவீனமயமாக்குவதற்காகவும், இந்தியாவின் நிலப்பரப்பைக் கண்காணிக்கவும் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோளாகும். இக்கோள் 185 கோடி இந்திய ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜிசாட்-7
திட்ட வகைஅனுப்புதல்
இயக்குபவர்இஸ்ரோ
காஸ்பார் குறியீடு2013-044B
சாட்காட் இல.39234
திட்டக் காலம்7 ஆண்டுகள் திட்டமிட்டம்.
விண்கலத்தின் பண்புகள்
செயற்கைக்கோள் பேருந்துஐ-2கே
தயாரிப்புஇ.வி.ஆ.செ.ம.ந
Space Applications Centre
ஏவல் திணிவு2,650 கிலோகிராம்கள் (5,840 lb)
திறன்3 kilowatts
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்29 August 2013, 20:30 (2013-08-29UTC20:30Z) UTC
ஏவுகலன்Ariane 5ECA
ஏவலிடம்கயானா விண்வெளி மையம் ELA-3
ஒப்பந்தக்காரர்ஏரியான்
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemGeocentric
சுற்றுவெளிபுவிநிலைச் சுற்றுப்பாதை
Longitude74° East
அண்மைgee35,779 கிலோமீட்டர்கள் (22,232 mi)
கவர்ச்சிgee35,806 கிலோமீட்டர்கள் (22,249 mi)
சாய்வு0.06 degrees
சுற்றுக்காலம்23.93 hours
Epoch7 நவம்பர் 2013, 23:12:49 UTC[1]
Transponders
BandUHF
C-band
Ku-band
புவிநிலைச் சுற்றுப்பாதை - அசைபடம்


ஏவுதல்

தொகு

ஜிசாட்-7 பிரஞ்ச் கயானாவில் உள்ள கவ்ரு ஏவூர்தி ஏவுதளத்திலிருந்து 30.08.2013 அதிகாலை 2 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.[2] 2,625 கிலோ எடை கொண்ட இதில் யூ.எச்.எப்., எஸ்,சி, மற்றும் கியூபாண்ட் என்ற மேம்மடுத்தப்பட்ட தொழில் நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய விண்வெளி கூட்டமைப்பின் ஏரியன்-5 ஏவூர்தி மூலம் 34 நிமிடம் 25 வினாடிகளில் புவியின் சுற்றுப்பாதையில் இது நிலை நிறுத்தப்பட்டது.

தகவல் பரிவர்த்தனை

தொகு

ஜிசாட்-7 தன்னை சுமந்து சென்ற ஏரியன்-5-லிருந்து விடுபடுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னரே தகவல்களை கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு சமிக்ஞைகளை அனுப்பத் துவங்கிவிட்டது. இதற்குத் தேவையான மின்சாரம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள தகட்டின் மூலம் கிடைக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Peat, Chris (7 November 2013). "GSAT 7 - Orbit". Heavens Above. பார்க்கப்பட்ட நாள் 9 November 2013.
  2. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7 செயற்கைக்கோள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிசாட்-7&oldid=2915317" இலிருந்து மீள்விக்கப்பட்டது