ஜிசாட்-8 (GSAT-8) ஒரு தகவல் தொடர்புச் செயற்கைக்கோள் ஆகும். இச்செயற்கைக் கோளானது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்டதாகும். இச்செயற்கைக்கோள் இன்சாட் வகை செயற்கைக் கோளாகும். இது 2011 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தியதி பிரெஞ்சு கயானாவின் கெளரெளவிலிருந்து அனுப்பப்பட்டதாகும். இச்செயற்கைக் கோளை செலுத்திய செலுத்து வாகனம் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஏரியான் செலுத்து வாகனம் மூலம் விண்வெளியில் செலுத்தப்பட்டது.

ஜிசாட்-8
ஜிசாட்-8
திட்ட வகைதகவல் தொடர்பு
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
காஸ்பார் குறியீடு2011-022A
திட்டக் காலம்12 வருடங்கள்
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
திட்ட ஆரம்பம்
ஏவலிடம்பிரெஞ்சு கயானா
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemபுவி மைய வட்டப்பாதை
சுற்றுவெளிபுவி ஒத்திணைவு வட்டப்பாதை
Longitude55° கிழக்கு
Transponders
Band24 கேயூ வரிசை

திட்டமிடலும் செலுத்துதலும்

தொகு

இச்செயற்கைக் கோளானது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பிரெஞ்சு கயானாவின் அருகிலுள்ள கெயினி விமானத் தளத்திற்கு அண்டாநோவ் அந்-124 சரக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாகும். இச்சரக்கு விமானம் சோவியத் ஒன்றியத்தினுடையதாகும் (உக்ரைன்). இச்செயற்கைக் கோளை வெற்றிகரமாக செலுத்தியதின் மூலம் ஏற்கனவே இழந்த இரண்டு ஜி. எஸ். எல். வியின் இழப்பை ஈடு செய்தது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிசாட்-8&oldid=3213905" இலிருந்து மீள்விக்கப்பட்டது