ஜிம்கானா விடுதி, சென்னை

மெட்ராஸ் ஜிம்கானா விடுதி (Madras Gymkhana Club) விளையாட்டுத்துறை, சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக 1884ஆம் ஆண்டில் இந்தியாவின் சென்னையில் நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இந்தியாவின் இரண்டு 18-துளை கொண்ட குழிப்பந்தாட்ட மைதானம் ஒன்றை சொந்தமாக நடத்துகிறது. ஆசியாவில் உள்ள பழமையான கோல்ப் மைதானங்களில் இதுவும் ஒன்றாகும். 2009 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த சுர்ஜித்சிங் பர்னாலா, சென்னை ஜிம்கானா விடுதியின் 125ஆவது ஆண்டை நினைவுகூறும் வகையில், த க்ளோரி இயர்ஸ் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.[1]

மெட்ராஸ் ஜிம்கானா விடுதி,1905

வரலாறு

தொகு

1884 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், புகழ்பெற்ற காலனித்துவ ஆளுநரின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு, ஜிம்கானா விடுதியை நிறுவியது. பிறகு, பிரிகேடியர் ஜென்ரல் ஜான்சன் என்பவர் விடுதியின் குறிக்கோள்கள் மற்றும் விதிகள உருவாக்கி அதற்கு "ஜிம்கானா" என்ற பெயரிட்டார்.

விடுதியின் ஆரம்ப கால உறுப்பினர்களாக, காவல் படையைச் சேர்ந்தவர்கள், பிரித்தானிய நிர்வாகிகள் மற்றும் இந்திய உயர்குடி மக்கள் ஆகியோருக்காக ஒதுக்கப்பட்டது. வெம்ஹ்கடகிரியின் ராஜா திறந்தவெளி மைதானத்தில் ஒரு கூடாரம் அமைத்து போலோ என்ற விளையாட்டை விளையாட ஒரு மேடையை நன்கொடையாக வழங்கினார்.[2][3]

தற்போது இங்கு போலோ, சீட்டாட்டம், ரக்பி, டென்னிசு, கோல்ப், துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகள் இந்த விடுதியின் உறுப்பினர்களால் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. மேலும், தென்னிந்திய அரசர்கள் ஜிம்கானா விடுதிக்காக கட்டிடங்கள், பில்லியர்ட்ஸ் மேஜைகள் மற்றும் போலோ விளையாட்டுக்கு தாராளமாக நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.

விடுதி

தொகு

14 அறைகள் கொண்ட இந்த விடுதியில் -3 சொகுசு அறைகள், 6 சாதாரண அறைகள் மற்றும் 6 பெரிய அறைகள் உள்ளன. உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் இணைக்கப்பட்ட விடுதிகளின் உறுப்பினர்களுக்காக விடுதி அறைகள் வழங்கப்படுகிறது. அனைத்து அறைகளும் குளிரூட்டப்பட்டவை.[சான்று தேவை]

 
மெட்ராஸ் ஜிம்கானா விடுதி நீச்சல் குளம்

மற்ற வசதிகள்

தொகு

இவ்விடுதியில் ஒரு விளையாட்டுப் பொருட்கள் கடை, முடித்திருத்தகம், அழகு நிலையம், பனிக்கூல் நிலையம் மற்றும் நன்கு பராமரிக்கப்படும் புத்தகம் மற்றும் டிவிடி நூலகம் ஆகியவை அமைந்துள்ளது.


வெளி இணைப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Staff reporter (6 September 2009). "Book records Gymkhana Club’s glorious years". The Hindu இம் மூலத்தில் இருந்து 14 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140514172000/http://www.hindu.com/2009/09/06/stories/2009090657860200.htm. பார்த்த நாள்: 2 August 2012. 
  2. ALLADI JAGANNATHAySA^RI, b.a. & L.T. A FAMILY HISTORY OF VENKATAGIRI RAJAS.
  3. "ஜிம்கானா கிளப்". தி இந்து.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்கானா_விடுதி,_சென்னை&oldid=3246713" இலிருந்து மீள்விக்கப்பட்டது