ஜிம் கவீசல்

அமெரிக்க நடிகர்

ஜேம்சு பாட்ரிக் கவீசல் [1] (செப்டம்பர் 26, 1968-இல் பிறந்தவர் -- James Patrick Caviezel) ஒரு அமெரிக்க நடிகராவார். கவீசல் மெல் கிப்சனின் த பேசன் ஆப் த கிறைஸ்ட் (2004) என்ற படத்தில் இயேசு கிறிஸ்துவை சித்தரித்தார்; பெர்சன் ஆவ் இன்டரெஸ்டு என்ற அறிவியல் புனைகதை குற்ற நாடகத் தொடரில் ஜான் ரீசாக நடித்தார். [2]

ஜிம் கவீசல்
2013ம் ஆண்டில் கவீசல்
பிறப்புஜேம்சு பாட்ரிக் கவீசல்
செப்டம்பர் 26, 1968 (1968-09-26) (அகவை 56)
வாசிங்டன் மாநிலம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கெரி புரோவிட் (தி. 1996)
பிள்ளைகள்3
வலைத்தளம்
jimcaviezel.us

வாழ்வும் தொழிலும்

தொகு

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கவீசல் வாசிங்டன் மாநிலத்தில் மவுண்ட் வெர்னான் என்ற இடத்தில் மார்கரெட்-ஜேம்சு கவீசல் தம்பதிக்குப் பிறந்தார் [3]. அவருக்கு ஒரு தம்பியும் மூன்று சகோதரிகளும் உள்ளனர். அவரது தந்தை சிலோவாக்கிய-சுவிசு குடிப்பிறப்பையும் அவரது தாயார் ஐரிசு குடிப்பிறப்பையும் கொண்டவர்.

தொழில்

தொகு

முதலில் கவீசல் சியாட்டில் நகரத்தில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1991ஆம் ஆண்டில் மை ஓன் பிரைவேட் ஐடகோ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதன் பிறகு லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திற்குச் சென்றார். 1998ஆம் ஆண்டில் அவர் நடித்த த தின் ரெட் லைன் என்ற படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. 2000ஆம் ஆண்டில் மாடிசன் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்; ஆனால் 2005ஆம் ஆண்டு வரை இப்படம் வெளியாகவில்லை.

நடித்த பாத்திரங்களின் பட்டியல்

தொகு

ஜிம் 34 திரைப்படங்களிலும் 5 தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் நடித்துள்ளார்; இது தவிர, 4 ஆவணப்படங்களில் கதை கூறுபவராகவும் செயல்பட்டுள்ளார்.

தொலைக்காட்சித் தொடர்கள்

தொகு


Year Title[4] Role Notes
1992 தி வொண்டர் இயற்சு பாபி ரிடில் அத்தியாயம்: "கீரோ"
1995 மர்டர், சீ ரோட் டேரில் ஆர்டிங்கு அத்தியாயம் "பிலிம் பிலாம்"
1995 சில்டிரன் ஆவ் த டஸ்டு டெக்ஸ்டர் குறுந்தொடர்
2009 தி பிரிசனர் மைக்கேல் / சிக்சு குறுந்தொடர்
2011–2016 பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (தொலைக்காட்சித் தொடர்) ஜான் ரீசு 103 அத்தியாயங்கள்
நியமிக்கப்பட்டார் – 40வது மக்கள் தேர்வு விருதுகளுக்கு (2014, 2015)

மேற்கோள்கள்

தொகு
  1. "வென்றவர்கள் | மூவி கைடு® விருதுகள்" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2016-02-23. Retrieved 2016-06-26.
  2. "ஜேம்சு கவீசல் - Biography, Movie Highlights and Photos". ஆல் மூவீ. Retrieved 2018-04-28. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "ஜேம்சு கவீசலின் வாழ்க்கைக் குறிப்பு". Filmreference.com. Retrieved 2012-05-02. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "James Caviezel – Movies and Filmography". AllMovie Filmography. Retrieved April 28, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_கவீசல்&oldid=3777965" இலிருந்து மீள்விக்கப்பட்டது