ஆகாஷ் கணேசன் (Akash Ganesan, பிறப்பு: 1 அக்டோபர் 1996) ஒரு இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டரும், முன்னாள் இந்திய தேசிய சதுரங்க வாகையாளரும் ஆவர்.

ஜி. ஆகாஷ்
G. Akash
நாடுஇந்தியா
பிறப்பு1 அக்டோபர் 1996 (1996-10-01) (அகவை 28)
சென்னை, இந்தியா
பட்டம்கிராண்ட்மாஸ்டர் (2020)
பிடே தரவுகோள்2495 (திசம்பர் 2021) 2495
உச்சத் தரவுகோள்2495

ஆகாஷ் 2013-ஆம் ஆண்டு சதுரங்க உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். முதல் சுற்றில் இத்தாலிய-அமெரிக்கரும், உலக வாகைக்கான சவாலாளரான பேபியானோ கருவானாவால் வெளியேற்றப்பட்டார். 2013-இல், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய இளையோர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். 2014 ஆம் ஆண்டில், ஆகாஷ் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டம் பெற்றார். அந்த 4 ஆண்டுகள் சதுரங்கத்தில் இருந்து ஓய்வு எடுத்தார். 2019 திசம்பரில், சிக்கிமில் நடைபெற்ற தேசிய முதுநிலை வாகையாளர் போட்டியில் தனது 3-வது கிராண்ட்மாஸ்டர் நியமத்தை முடித்து, வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 2020 பிப்ரவரியில், ஆகாஷ் பிராக் பன்னாட்டு சதுரங்க விழாவில் திறந்த 2020 பதக்கத்தை வென்று,[1] 2021 இற்கான பிராக் சர்வதேச சதுரங்க விழா சவாலுக்குத் தகுதி பெற்றார். அவரது கிராண்ட்மாஸ்டர் பட்டம் 2020 சூலை 3 அன்று நடைபெற்ற பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் 2-வது பேரவைக் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.[2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. https://praguechessfestival.com/
  2. "भारत के 66वें शतरंज ग्रैंडमास्टर बने तमिलनाडु के जी आकाश". Hindustan (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2020-08-19.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "akash-becomes-india-s-66th-chess-gm".
  4. "akash-becomes-indias-66th-grandmaster".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._ஆகாஷ்&oldid=3317368" இலிருந்து மீள்விக்கப்பட்டது