ஜி. என். அன்புச்செழியன்

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்
(ஜி. என். அன்புச் செழியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜி. என். அன்புச் செழியன் (G. N. Anbu Chezhiyan) என்பவர் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒரு நிதியாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர். இவரது தயாரிப்பு நிறுவனம் கோபுரம் ஃபிலிம்ஸ் ஆகும். 2003 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ஜி. வெங்கடேஸ்வரனின் தற்கொலைக்கு காரணமானார் என்று கூறப்படுகிறது.[1]  சுந்தரா டாராவல்ஸ் படத்தைத் தயாரித்த திரைப்பட தயாரிப்பாளர் எஸ். வி. தங்கராஜ் அளித்த புகாரின் அடிப்படையில்  பணம் கேட்டு மிரட்டியதாக முரளி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோருடன் 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.[2][3] 2017 நவம்பர் மாதம் சுப்பரமணியபுரம் படத்தின் இணைத்தயாரிப்பாளரும், நடிகர் சசிகுமாரின் உறவினருமான அசோக் குமார் இவரால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஜி. என். அன்புச் செழியன்
பிறப்புஇராமநாதபுரம் மாவட்டம், பம்மனேந்தல் கிராமம்
பணிநிதியாளர், தயாரிப்பாளர்

வாழ்கை

தொகு

அன்புச்செழியனின் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பம்மனேந்தல் கிராமம் ஆகும். இவரின் தந்தை ஒரு தலைமை ஆசிரியர் ஆவார். இவரின் தந்தை ஓய்வுபெற்றபோது கிடைத்த பணப்பலன்களை முதலீடாக கொண்டு தொழில், மதுரை கீரைத்துரை பகுதிக்கு வந்தார். துவக்கத்தில் சிறுவணிகர்களுக்கு கடன் கொடுத்தவர், படிப்படியாக உயர்ந்து, கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட விநியோக நிறுவனத்தை தொடங்கினார். அடுத்த கட்டமாக சினிமாத் துறையினருக்கு கடன் கொடுப்பவராக வளர்ந்து, முதன்முதலாக வானத்தைப் போல படம்த்துக்கு கடனுதவி அளித்தார். அதன்பிறகு பல படங்களுக்கு கடனுதவி அளிப்பவராக மாறினார்.[4]

திரைப்பட வரலாறு

தொகு

தயாரிப்பாளராக

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The seamier side of film financing". The hindu. http://www.thehindu.com/2003/05/10/stories/2003051007390300.htm. பார்த்த நாள்: 22 November 2017. 
  2. "Financier held for extorting money". Times of India. https://timesofindia.indiatimes.com/city/madurai/ampnbspFinancier-held-for-extorting-money/articleshow/10951765.cms. பார்த்த நாள்: 22 November 2017. 
  3. "Borrower alleges his property was forcibly taken". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/three-including-film-financier-held-on-attempt-to-murder-charge/article2679704.ece. பார்த்த நாள்: 22 November 2017. 
  4. கே.கே.மகேஷ் (23 நவம்பர் 2017). "சினிமாத் துறையின் 'தனி ஒருவன்'". செய்திக் கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._என்._அன்புச்செழியன்&oldid=3578337" இலிருந்து மீள்விக்கப்பட்டது