ஜி. என். ஆர். குமரவேலன்
ஜி. என். ஆர். குமாரவேலன் (G. N. R. Kumaravelan) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் முக்கியமாக தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரிகிறார். இயக்குநர் பாலு மகேந்திரா , கமல்ஹாசன் ஆகியோரின் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பிறகு, 2009 ஆம் ஆண்டு நினைத்தாலே இனிக்கும் என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2011இல் யுவன் யுவதி என்ற தனது இரண்டாவது படத்தையும் இயக்கினார். இவரது மூன்றாவது படம் ஹரிதாஸ் (2013), சிறந்த தமிழ் இயக்குனருக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஜி. என். ஆர். குமரவேலன் | |
---|---|
பிறப்பு | ஜி. என். ஆர். குமரவேலன் 22 நவம்பர் 1978[1] தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2009 – தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ஆர். உமா வாணிஸ்ரீ |
தொழில்
தொகுகுமரவேலன், மறைந்த இயக்குநர் ஜி. என். இரங்கராஜனின் மகன் ஆவார். இவர் சாதி லீலாவதி (1995) படத்தில் பாலு மகேந்திராவின் கீழ் உதவி இயக்குநராகவும், பின்னர் கமல்ஹாசனின் வெளியிடப்படாத முயற்சிகளான லேடீஸ் ஒன்லி, மருதநாயகம் ஆகியவற்றிலும் பணியாற்றினார்.[2]
விக்ரம் பிரபு, புதுமுகம் இரன்யா ராவ் ஆகியோரின் நடிப்பில் வாகா என்ற படத்தை இயக்கி 12 ஆகஸ்ட் 2016 அன்று வெளியிட்டார். இந்தப் படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் மிகவும் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது.