ஜி. வேணுகோபால்

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

ஜி வேணுகோபால் (G. Venugopal) (பிறப்பு: திசம்பர் 10, 1960) மலையாள திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்ட ஒரு இந்திய பின்னணி பாடகராவார். "ஓடருத்தம்மாவ ஆளரியாம்" (1984) திரைப்படத்தில் தனது பாடலைத் தொடங்கினார்.[1] அதன் பின்னர் இவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார். 500க்கும் மேற்பட்ட தனி இசைத் தொகுப்புகளையும் கொண்டுள்ளார்.[2]

ஜி. வேணுகோபால்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு10 திசம்பர் 1960 (1960-12-10) (அகவை 63)
பிறப்பிடம்திருவனந்தபுரம்
தொழில்(கள்)பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக செயல்பாட்டாளர்
இசைத்துறையில்1984 – தற்போது வரை
இணையதளம்http://www.gvenugopal.com/

சேர்த்தலை கோபாலன் நாயர், மாங்காடு நடேசன், பி. சசிகுமார், பாலகுலங்கரா அம்பிகாதேவி, பெரும்பாவூர் இரவீந்திரநாத், வி சுப்பிரமணியம் ஆகியோர் அடங்குவர். பிரபல இசைக்கலைஞர் எம். ஜி. ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இவரது வழிகாட்டிகளாகவும் ஆசிரியர்களாகவும் இருந்து இவரது வாழ்க்கையை வடிவமைப்பதில் செல்வாக்கு செலுத்தியவர் ஆவர்.

சொந்த வாழ்க்கை

தொகு

ஜி வேணுகோபால் கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கிளிமானூர் அருகிலுள்ள தட்டத்துமலை என்ற ஊரில் கோபிநாதன் நாயர் என்பவருக்கும், திருவனந்தபுரம் அரசு மகளிர் கல்லூரியின் இசைத்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற சரோஜினி என்பவருக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். பரவூர் சகோதரிகள் என்று பிரபலமாக அறியப்பட்ட கே சாரதாமணியும், கே இராதாமணியும் இவரது தாய்வழி அத்தைகள் ஆவர். பிரபல பாடகர்கள் சுஜாதா மோகன் மற்றும் இராதிகா திலக் இவரது உறவினர்கள்.

மனிதாபிமானப் பணிகள்

தொகு

"சினேகம் ஜி வேணுகோபால்" என்பது உலகெங்கிலும் உள்ள இவரது ரசிகர்களின் உதவியுடன் வேணுகோபால் தொடங்கிய ஒரு தொண்டு முயற்சியாகும். 2009 ஆம் ஆண்டில், இவர் தனது இசை வாழ்க்கையின் 25 ஆம் ஆண்டை எட்டியபோது இது தொடங்கப்பட்டது. அனாதை இல்லத்தின் குழந்தைகளுக்கு கலை மற்றும் கைவினைகளை கற்பிக்கும் தன்னார்வக் குழுவினர்களுடன் இது ஒரு வித்தியாசமான தொண்டாக நடத்தப் படுகிறது. இது 2009 ஆம் ஆண்டு தொடங்கி, தற்போது ஐந்தாம் ஆண்டில் உள்ளது. கேரளாவில், இந்திய மருத்துவச் சங்கத்தின் கீழ், கற்றல் குறைபாடு குறித்தத் திட்டங்களுக்கான நல்லெண்ண தூதராக இவர் உள்ளார். திருவனந்தபுரத்தில் பணிபுரியும் ஒரு தொண்டு சங்கமான சுவஸ்தி அறக்கட்டளையின் துணைத் தலைவராகவும் உள்ளார். மேலும் திருவனந்தபுரத்தில் செயல்படும் சுவஸ்தி இசை மற்றும் நடனப் பள்ளியின் கௌரவ நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். தொண்டுப் பணிகளுக்கு தனது இரசிகர்களை அனுப்புவதும், தேவைப்படும் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதைத் தவிர, வேணுகோபால் நமது வாழ்க்கை முறை மற்றும் சுகாதார பிரச்சினைகளை நேரடியாக பாதிக்கும் செய்திகளை தொடர்ந்து பரப்பும் மனிதாபிமான முயற்சிகளிலும் இறங்கியுள்ளார். 'புகையிலை எதிர்ப்புப் பிரச்சாரம்', 'பசுமை கேரளப் பிரச்சாரம்', 'உறுப்பு தானப் பிரச்சாரம்', 'தூய்மையான கேரளா' ஆகிய பதாகைகளின் கீழ் இயங்கும் தூய்மை இயக்கங்கள் ஆகியன இதில் அடங்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Songs on Sand: G. Venugopal's blog". Archived from the original on 2011-09-10. பார்க்கப்பட்ட நாள் 2021-02-03.
  2. Latest Devi Devotional from G. Venugopal

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._வேணுகோபால்&oldid=3706958" இலிருந்து மீள்விக்கப்பட்டது