ஜுவாலாமுகி

ஜுவாலாமுகி (Jawalamukhi), இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்தின் காங்ரா மாவட்டத்தின் 7 உறுப்பினர்கள் கொண்ட நகராட்சி மன்றமுமாக உள்ளது. இங்கு புகழ் பெற்ற ஜுவாலாமுகி அம்மன் கோயில் உள்ளது. 51 சக்தி பீடங்களில் ஜுவாலாமுகியும் ஒன்றாகவும் மற்றும் நவ சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

ஜுவாலாமுகி
जवालामुखी
ஜுவாலாஜி
நகராட்சி
ஜுவாலாமுகி தேவி கோயில்
ஜுவாலாமுகி தேவி கோயில்
ஜுவாலாமுகி is located in இமாச்சலப் பிரதேசம்
ஜுவாலாமுகி
ஜுவாலாமுகி
இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்தில் ஜுவாலாமுகியின் அமைவிடம்
ஜுவாலாமுகி is located in இந்தியா
ஜுவாலாமுகி
ஜுவாலாமுகி
ஜுவாலாமுகி (இந்தியா)
ஆள்கூறுகள்: 31°53′N 76°19′E / 31.88°N 76.32°E / 31.88; 76.32
நாடு இந்தியா
மாநிலம்இமாசலப் பிரதேசம்
மாவட்டம்காங்ரா
ஏற்றம்
610 m (2,000 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,361
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுHP 40

புவியியல்

தொகு

கடல் மட்டத்திலிருந்து 2,001 அடி உயரத்தில் அமைந்த ஜுவாலாமுகி நகரம் 31°53′N 76°19′E / 31.88°N 76.32°E / 31.88; 76.32ல் அமைந்துள்ளது..[1]

மக்கள் தொகையில்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜுவாலாமுகி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 5,361 ஆகும். அதில் 2,782 ஆண்கள் ஆகவும்; 2,579 பெண்கள் ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 559 (10.43%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 92.19% ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 94.33% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 89.94%. ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 927 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 95.24% ஆகவும்; இசுலாமியர்கள் 3.71% ஆகவும்; சீக்கியர்கள் 0.86% ஆகவும்; பௌத்தர்கள் 0.09% ஆகவும்; சமயம் குறிப்பிடாதவர்கள் 0.09% ஆகவும் உள்ளனர். [2]

ஜுவாலாமுகி தேவி கோயில்

தொகு

காங்ரா நகரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும், தரம்சாலாவிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், கீழ் இமயமலையில் ஜுவாலாமுகி தேவி கோயில் உள்ளது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்குள்ள இயற்கையான குகைக்குள் உள்ள ஒரு பாறையின் பிளவில் ஒரு நெருப்புச் சுடர் உள்ளது. இந்த நெருப்புச் சுடரே ஜுவாலாமுகி தேவியின் உருவமாகவும், கருவறையாகவும் பூசிக்கப்படுகிறது. இந்தச் சுடரே தாட்சாயிணியின் நாக்காக கருதப்படுகிறது. இந்த நிரந்தரச் சுடருக்கு நாள்தோறும் ஐந்து முறை ஆரத்தி உண்டு. நவதுர்க்கையின் அடையாளமாக ஒன்பது சுடர்கள் இக்கோயிலில் வழிபடப்படுவதாக நம்பப்படுகிறது. தீச் சுடர் எப்போதிருந்து எரிகிறது. எங்கிருந்து தீப்பிழம்பு வருகிறது என்பது தெரியவில்லை. கோவிலுக்கு அடியில் ஒரு நிலத்தடி எரிமலை இருப்பதாகவும், எரிமலையின் இயற்கை வாயு பாறையின் வழியாக எரிகிறது என்றும் அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். ஜுவாலாமுகி கோயில் இந்தோ சீக்கிய பாணியில் அமைந்துள்ளது. முதன்மைச் சந்நிதியின் மேலே தங்க முலாம் வேயப்பட்ட விமானம் உள்ளது. சந்நிதியின் உள்ளே வெள்ளி முலாம் பூசப்பட்ட விதானத்தில் அம்மனை பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

விழாக்கள்

தொகு

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களிலும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [3] [4]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுவாலாமுகி&oldid=3823780" இலிருந்து மீள்விக்கப்பட்டது