ஜெகதீசு லால் அகுஜா

லங்கர் பாபா என்று பிரபலமாக அழைக்கப்படும் ஜெகதீஷ் லால் அகுஜா (Jagdish Lal Ahuja) இந்தியாவின் சண்டிகரைச் சேர்ந்த சமூக சேவகராவார். இவர் பசியால் வாடுபவர்களுக்கும், ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்குவதில் பெயர் பெற்றவர். [1][2] 2020 ஆம் ஆண்டில், சமூகப் பணிகளில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன்களுக்கான விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. [3]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து அகுஜா தனது 20 வயதில் பெசவரிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். இவரது குடும்பம் பாட்டியாலாவிலும் பின்னர் அமிர்தசரசு மற்றும் மான்சவிலும் தஞ்சம் புகுந்தது. [4]

சமூகப் பணி தொகு

அகுஜா தினமும் 2500 மக்கள் ஏழைகளுக்கும் பட்டினியால் வாடுபவர்களுக்கும் லங்கர் ஏற்பாடு செய்வதன் மூலம் சேவை செய்து வருகிறார். [5] சண்டிகரின் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் லங்கரை ஏற்பாடு செய்யத் தொடங்கினார். சனவரி 2000 இல் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் சண்டிகரின் பிரிவு 32இல் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு இலவச உணவை வழங்க ஆரம்பித்தார். [6]

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவருக்கு 85 வயது. கடந்த 19 ஆண்டுகளாக மக்களுக்கு இலவச உணவை வழங்கி வருகிறார். [7] [8] இவர் தனது 36 ஏக்கர் பண்ணை, 9 ஏக்கர் பண்ணை, பஞ்ச்குலாவில் ஒரு நிலம், ஓரிரு கடைகளை இலவச உணவு வழங்குவதற்காக விற்றார். [9]

அங்கீகாரம் தொகு

சனவரி 26, 2020 அன்று சமூகப் பணித் துறையில் இவரது பணியை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன்களின் விருதான பத்மசிறீ வழங்கியது. [10]

குறிப்புகள் தொகு

  1. Service, Tribune News. "Padma Shri for 'Langar Baba', PGI doc". Tribuneindia News Service (in ஆங்கிலம்). Archived from the original on 2020-01-26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-27.
  2. "पंजाब के लंगर बाबा को मिलेगा पद्म श्री अवार्ड, पिछले 38 वर्षों से रोजाना बांट रहे लंगर". punjabkesari. 2020-01-26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-27.
  3. "Chandigarh PGIMER doctor, 'langar baba' on Padma Shri list". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-01-26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-27.
  4. Sehgal, Manjeet (January 26, 2020). "Hawker turned social worker gets Padma Shri award for running free kitchen for poor in Chandigarh". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-27.
  5. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  6. Service, Tribune News. "Padma Shri for 'Langar Baba', PGI doc". Tribuneindia News Service (in ஆங்கிலம்). Archived from the original on 2020-01-26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-27.Service, Tribune News. "Padma Shri for 'Langar Baba', PGI doc" பரணிடப்பட்டது 2020-01-26 at the வந்தவழி இயந்திரம். Tribuneindia News Service. Retrieved 2020-01-27.
  7. "UP's Langar Baba, 'Encyclopedia of Forest' Among 118 Personalities to Get Padma Shri Award". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-27.
  8. "Chandigarh PGIMER doctor, 'langar baba' on Padma Shri list". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-01-26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-27."Chandigarh PGIMER doctor, 'langar baba' on Padma Shri list". Hindustan Times. 2020-01-26. Retrieved 2020-01-27.
  9. Service, Tribune News. "Padma Shri for 'Langar Baba', PGI doc". Tribuneindia News Service (in ஆங்கிலம்). Archived from the original on 2020-01-26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-27.Service, Tribune News. "Padma Shri for 'Langar Baba', PGI doc" பரணிடப்பட்டது 2020-01-26 at the வந்தவழி இயந்திரம். Tribuneindia News Service. Retrieved 2020-01-27.
  10. Sehgal, Manjeet (January 26, 2020). "Hawker turned social worker gets Padma Shri award for running free kitchen for poor in Chandigarh". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-27.Sehgal, Manjeet (January 26, 2020). "Hawker turned social worker gets Padma Shri award for running free kitchen for poor in Chandigarh". India Today. Retrieved 2020-01-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகதீசு_லால்_அகுஜா&oldid=3676313" இலிருந்து மீள்விக்கப்பட்டது