ஜெகநாத்புவ புரோகித்

ஜெகநாத்புவ புரோகித் (Jagannathbuwa Purohit) (12 மார்ச் 1904 - 1968) இவர் ஓர் பாடகரும் பாரம்பரிய இந்துஸ்தானி இசையாசிரியருமாவார். இவர் ஆக்ரா கரானாவின் விலாயத் உசைன் கானின் கீழ் பயிற்சி பெற்றார். 'குணிதாஸ்' என்றப் புனைப்பெயரில் இவர் பல நூல்களை எழுதினார்.

ஆக்ரா கரானா

தொகு

இவர், முகலாய அரசவைகளின் மிகப் பழமையான கரானா (பாடும் பாரம்பரியம்) ஆவார். இவரது பாணி சரியானதாகவும், துல்லியத்தை மையமாகக் கொண்டும் இருப்பதாக கூறப்படுகிறது. இவரது தோற்றம் துருபத்-தமர் கயாகியில் இருந்தது.

சீடர்கள்

தொகு

இவரது சீடர்களில் சிதேந்திர அபிசேகி, பண்டிட் ராம் மராத்தே, பண்டிட் வசந்த்ராவ் குல்கர்னி, சி.ஆர்.வியாசு, பண்டிட் யசுவந்த்புவ ஜோசி, மாணிக் வர்மா ஆகியோர் அடங்குவர். பருகாபாத் கரானாவின் கைம்முரசு இணைக் கலைஞர் பண்டிட் பாய் (சுரேஷ்) கெய்டோண்டே, , இவரிடமிருந்து ஆரம்ப பயிற்சியைப் பெற்றார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் ஐதராபாத் நிசாமின் மாநிலத்தில் ஒரு கர்கடே பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது முதன்மை கல்வியை தனது தாய்மொழியான மராத்தியில் பெற்றார். இவரது இசை திறமை குரு-சீடன் என்ற பாரம்பரியமுறையில் வளர்க்கப்பட்டது. ஜெகந்நாத் தனது பயிற்சியை மேற்கொள்ள பல ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தார். அப்போதிருந்த வழக்கம் கல்விக்கு பணம் செலுத்துவது அல்ல, மாறாக ஆசிரியருக்கு சேவை செய்வதாகும்.

இவர் உஸ்தாத் திர்காவாவிடமிருந்து இந்தியத் தாளக் கருவியான கைம்முரசு இணையைக் கற்றுக் கொண்டு மதில் மேதையானார். ஆக்ரா வம்சத்தின் முக்கிய பாடகரான உஸ்தாத் விலாயத் உசைன் கானிடமிருந்து சிறந்த பயிற்சியையும் இறுதியில் பாராட்டையும் பெற்றார். மும்பையில் இருந்தபோது, இவர் இசை ஆர்வலர்களால் போற்றப்பட்டார், மேலும் வி. வி. கோகலே மற்றும் அவரது தம்பி, உள்ளிட்ட பலர் இவரை ஆதரித்தனர். இவர் தாதர்-மாதுங்கா இசைச் சங்கத்தில் வழக்கமான கலைஞராக இருந்தார்.[2]

இறப்பு

தொகு

இவர் 1968 இல் தீபாவளி நாளில் மும்பையின் டோம்பிவ்லியில் இறந்தார். தாதரில் தகனம் செய்யப்பட்டார். [3]

மரபு

தொகு

இவரது பெயரில் ஒரு இசை விழா (குணிதாஸ் சம்மேலனம்) 1977 ஆம் ஆண்டில் இவரது சீடரான சி. ஆர். வியாசால் தொடங்கப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் மும்பையிலும் பிற முக்கிய இந்திய நகரங்களிலும் நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Google Groups". Groups.google.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
  2. "From "Between Two Tanpuras" by Vamanrao Deshpande Translation by Ram Deshmukh and B.R. Dekhney First published November 1967 : Jagannathbuwa Purohit "Gunidas" by Vaman Hari Deshpande" (PDF). Parrikar.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
  3. "Google Groups". Groups.google.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகநாத்புவ_புரோகித்&oldid=3100602" இலிருந்து மீள்விக்கப்பட்டது