ஜெனெட் ரோசிதா யங்
ஜெனெட் ரோசிதா யங் (Jeannette Rosita Young)[3] (பிறப்பு 1963) என்பவர் ஆத்திரேலிய மருத்துவர் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் ஆவார். இவர் ஆளுநராகப் பதவியேற்பதற்கு முன், 2005 முதல் 2021 வரை குயின்ஸ்லாந்தின் தலைமை சுகாதார அதிகாரியாக இருந்தார்.
ஜெனெட் ரோசிதா யங் Jeannette Young | |
---|---|
ஜெனெட் யங் 2022-ல் | |
27வது ஆளுநர், குயின்ஸ்லாந்து | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 நவம்பர் 2021 | |
ஆட்சியாளர்கள் | எலிசபெத் II சார்லசு III |
பிரதமர் | அன்னஸ்டாசியா பலாஸ்சுக் |
முன்னையவர் | பால் டி ஜெர்சி |
குயின்ஸ்லாந்து சுகாதார அலுவலர் | |
பதவியில் 17 ஆகத்து 2005 – 1 நவம்பர் 2021 | |
Deputy | சோனியா பென்னட் (2020–2021) பீட்டர் அய்ட்கன் (2021) லின் மெக்கின்லே (2021) ஜேம்சு சுமித் (2021) |
முன்னையவர் | ஜெர்ரி பிட்சுஜெரால்டு |
பின்னவர் | ஜான் ஜெரார்ட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1963 (அகவை 60–61)[1] சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா |
தேசியம் | ஆத்திரேலியா |
துணைவர் | கிரேமி நிம்மோ (தி. 2000) [2] |
பிள்ளைகள் | 2 |
கல்வி | தூய இவேஸ் உயர்நிலைப் பள்ளி |
முன்னாள் கல்லூரி | |
பணி
தொகுயங் 1963-ல் நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் பிறந்தார். இவர் தூய ஐவ்ஸ் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார், சிட்னி பல்கலைக்கழகத்தில் இவர் 1980-ல் மருத்துவப் பட்டம் பெற்றார். இவர், தான் படித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சூலை 1992-ல் மருத்துவ நிர்வாகத்திற்குச் செல்வதற்கு முன்பு சிறிது காலம் 1986 முதல் சிட்னியின் வெஸ்ட்மீட் மருத்துவமனையில் மருத்துவராகத் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார்.[4]
திசம்பர் 1994-ல், ராக்ஹாம்ப்டன் மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் இயக்குநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து குயின்ஸ்லாந்திற்கு சென்றார். ஏப்ரல் 1995-ல், யங் மேக்குயுரி பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார். பின்னர் யங் சனவரி 1999-ல் பிரிஸ்பேனின் இளவரசி அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையின் மருத்துவ சேவைகளின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
2005ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம் நாள் யங் குயின்ஸ்லாந்தின் தலைமை சுகாதார அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவரது பணி 2020-ல் கோவிட் பெருந்தொற்றின் போது சிறப்பாக செயல்பட்டதன் மூலம் முக்கியத்துவம் பெற்றார்.[5] நோய் தொடர்பாக பல செய்தியாளர் சந்திப்புகளை நடத்தினார். இவர் பல மரண அச்சுறுத்தல்களைப் பெற்றதால், செப்டம்பர் 2020-ல் காவல்துறைப் பாதுகாப்பில் இருந்தார்.[6][7]
2021ஆம் ஆண்டு சூன் 21 நாளன்று, குயின்ஸ்லாந்தின் 27வது ஆளுநராக யங் பதவியேற்பார் என்று பிரீமியர் அன்னாஸ்டாசியா பலாஸ்சுக் அறிவித்தார். அப்போதைய ஆளுநர் பால் டி ஜெர்சி சூலை 2021-ல் ஓய்வு பெறவிருந்தார், ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பூசி செலுத்துவதில் யங் கவனம் செலுத்தும் வகையில் இவரது தலைமை சுகாதார அதிகாரி பதவிக்காலம் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Governor's Biography". Government House Queensland. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
- ↑ Miles, Janelle (4 December 2020). "'I lost eight people in one shift': CHO's horror night". The Courier-Mail இம் மூலத்தில் இருந்து 5 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210805020501/https://login.newscorpaustralia.com/authorize?client_id=0v9i7KoW6MBLSfe036YSQT79zA8Zaz4Y&response_type=token%20id_token&scope=openid%20profile&audience=newscorpaustralia&redirect_uri=https%3A%2F%2Fwww.couriermail.com.au%2Fremote%2Fidentity%2Fauth%2Flatest%2Flogin%2Fcallback.html&state=4HIFjzNkqnI.xRXAXfy~1rlb1oT2lGD0&nonce=5HbCTQ1jizIXrkuR1ZzSzom_tfhyIfiD&response_mode=web_message&prompt=none&auth0Client=eyJuYW1lIjoiYXV0aDAuanMiLCJ2ZXJzaW9uIjoiOS4xNi4yIn0%3D.
- ↑ "Bundaberg Hospital Commission of Inquiry – Statement of Dr. Jeanette Rosita Young" (PDF). Queensland Public Hospitals Commission of Inquiry. 20 May 2005. பார்க்கப்பட்ட நாள் 5 November 2021.
- ↑ "BUNDABERG HOSPITAL COMMISSION OF INQUIRY" (PDF). Queensland Public Hospitals. 20 May 2005. Archived from the original (PDF) on 27 November 2020. பார்க்கப்பட்ட நாள் 19 November 2020.
- ↑ Lang, Kylie (5 June 2020). "Dr Jeanette Young humbled by Queenslander of the Year nomination". The Courier-Mail. https://www.couriermail.com.au/coronavirus/dr-jeanette-young-humbled-by-queenslander-of-the-year-nomination/news-story/cba29d6ef3e4a2c4f012bf4b615b07f8.
- ↑ Bosely, Matilda (14 September 2020). "Queensland's chief health officer given police protection after death threats". Guardian Australia. https://www.theguardian.com/australia-news/2020/sep/14/queenslands-chief-health-officer-given-police-protection-after-death-threats.
- ↑ Radford, Antoinette (19 September 2020). "Brett Sutton rose to cult status during the coronavirus pandemic. Jeannette Young received death threats". Special Broadcasting Service. https://www.sbs.com.au/news/brett-sutton-rose-to-cult-status-during-the-coronavirus-pandemic-jeannette-young-received-death-threats.
- ↑ "Dr Jeannette Young Queensland's New Governor". Ministerial Media Statements (in ஆங்கிலம்). Archived from the original on 24 June 2021. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.