ஜெயது
ஜெயது (Jayathu) (1983 - ஆகஸ்ட் 30, 1984) என்பது இலங்கை சனாதிபதி ஜயவர்தனவினால் ரொனால்ட் ரீகனுக்கு பரிசாக வழங்கப்பட்ட குட்டி யானையாகும்.
ஜெயது | |
---|---|
இனம் | ஆசிய யானை |
பால் | பெண் யானை |
பிறப்பு | 1983 இலங்கை |
இறப்பு | ஆகஸ்ட் 30, 1984 இசுத்சோனியன் தேசிய விலங்கியல் பூங்கா |
அறியப்படுவதற்கான காரணம் | ரொனால்ட் ரீகனின் யானை |
வாழ்க்கை
தொகுஆசிய யானையான ஜெயது 1983இல் இலங்கையில் பிறந்தது. உள்ளூர் விவசாயிகள் இதனுடையக் கூட்டத்தை விரட்டியடிக்க முயலும்போது ஜெயது ஒரு குழியில் விழுந்து விட்டது. ஆனால் காப்பாற்றப்பட்டு யானைகள் அனாதை இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வாசிங்டன், டி. சி.யில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டது.[1]
இலங்கையின் சனாதிபதியான ஜே. ஆர். ஜயவர்தனா 1984 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணமாக சென்றபோது இந்த யானையை அமெரிக்க மக்களுக்கு வரிசாக வழங்கி "வெற்றி" என்று மொழிபெயர்க்கக்கூடிய பெயரான ஜெயது எனப் பெயரிட்டார். அப்போது இதற்கு பதினெட்டு மாதம் நிரம்பியிருந்தது.[2] ஜயவர்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ரீகனின் குடியரசுக் கட்சி ஆகிய இரு சனாதிபதிகளின் கட்சிகளின் சின்னமாக யானை இருந்தது.[3]
இறப்பு
தொகுரொனால்ட் ரீகனுக்கு பரிசாக வழங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 30, 1984 அன்று, இசுமித்சோனியன் தேசிய விலங்கியல் பூங்காவில் இசுகிசுடோசோமியாசிசு நோயால் ஜெயது இறந்தது.[4]
ஜெயதுவின் மரணம் குறித்து அதிர்ச்சியடைந்த இலங்கைத் தூதுவர் எர்னஸ்ட் கொரியா, இலங்கையில் இவ்வாறு சிறைபிடிக்கப்படும் யானைகளின் மரணம் மிகவும் அறிது என்று கூறினார்.[5] யானையின் வளர்ச்சியைப் பார்க்க முடியாமல் போனதற்காக மிகவும் வருத்தமடைந்ததாகவும் ரொனால்ட் ரீகன் பின்னர் குறிப்பிட்டார்.
இந்த யானை அமெரிக்காவிற்குக் கொண்டு செல்வதற்கு முன்னரே அது நோயினால் பாத்திக்கப்பட்டிருந்தது என பின்னர் கண்டறியப்பட்டது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jayathu at Smithsonian National Zoological Park in United States - Elephant Encyclopedia and Database". www.elephant.se. பார்க்கப்பட்ட நாள் 2023-09-28.
- ↑ sysadmin (1984-06-12). "Elephant Arrives at NZP as Sri Lankan Gift". Smithsonian Institution Archives (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-10.
- ↑ "Remarks on Accepting a Gift from the People of Sri Lanka".
- ↑ Ap (1984-08-31). "Baby Elephant Dies Of Mysterious Illness" (in en-US). The New York Times. https://www.nytimes.com/1984/08/31/us/baby-elephant-dies-of-mysterious-illness.html.
- ↑ Weil, Martin (1984-08-31). "Baby Elephant From Sri Lanka Dies at Zoo" (in en-US). Washington Post. https://www.washingtonpost.com/archive/local/1984/08/31/baby-elephant-from-sri-lanka-dies-at-zoo/339ba18e-bfad-415b-ac83-0f1b03b0b287/.
- ↑ Ap (1984-09-09). "Parasite Killed Elephant" (in en-US). The New York Times. https://www.nytimes.com/1984/09/09/us/parasite-killed-elephant.html.