ஜெய்ஸ்-இ-முகமது
ஜெய்ஸ்-இ-முகமது (Jaish-e-Mohammed, உருது: جيش محمد) இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் போராளிக் குழு ஆகும்.[1] ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் உருதுச் சொல்லுக்கு முகம்மதின் படை என்று பெயர். இது ஒரு ஜிகாதியப் போர்க்குழுவாகும். காஷ்மீரில் இயங்கும் போராளிக் குழுக்களுள் மிகவும் கடுமையான குழு இது ஆகும்.[1][2]
ஜெய்ஸ்-இ-முகமது | |
---|---|
جيش محمد | |
ஜெய்ஸ்-இ-முகமது கொடி | |
தலைவர்கள் | மெளலானா மசூத் அசார் |
செயல்பாட்டுக் காலம் | 2000 – தற்போது வரை |
சித்தாந்தம் | இசுலாமிய அடிப்படைவாதம் |
தலைமையகம் | பகவல்பூர், பஞ்சாப் (பாக்கிஸ்தான்) |
தீவிரவாத அமைப்பாக அறிவித்தது | |
ஆத்திரேலியா, கனடா, இந்தியா, இரசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஐநா மற்றும் பிரிக்ஸ் |
குறிக்கோள்
தொகுஇந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோள் காஷ்மீரைத் தனி நாடாக்குவதாகும். இதன் பொருட்டு காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.[3][4]
தடை
தொகுஇந்த அமைப்பு 2002 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் நாட்டில் தடை செய்யப்பட்ட போதும், அதன் செயல்பாடுகள் பாகிஸ்தானில் தொடர்கின்றன.[5] இப்போராளிக் குழுவை இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன.[1]
வரலாறு
தொகு2000 ஆம் ஆண்டு மௌலானா மசூத் அசார் இக்குழுவைத் தொடங்கினார். இவர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 கடத்தலின் போது விடுவிக்கப்பட்டவர்.[1][2][6] விடுதலைக்குப் பின் ஹர்கத்-உல்-முஜாகிதீன் போராளிக் குழுவிலிருந்து விலகி, இக்குழுவை ஆரம்பித்தார். ஹர்கத்-உல்-முஜாகிதீன் இயக்கத்தில் இருந்தவர்களில் பலர் இவரது ஜெய்ஸ்-இ-முகம்மது இயக்கத்தில் இணைந்தனர்.[2] 2002 ஆம் ஆண்டு சனவரி மாதம் இப்போராளிக் குழுவை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் தடை செய்தார். தடையின் காரணமாக இக்குழு தனது பெயரை குத்தாம் உல்-இஸ்லாம் (Khuddam ul-Islam) என மாற்றிக் கொண்டது.[1]
2019 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று புல்வாமா எனும் இடத்தில் தீவிரவாத தாக்குதல்நடந்தது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் துரதிர்ஷ்டவசமான தாக்குதலான இது, இந்த இயக்கத்தால் நடத்தப்பட்டதாக இந்திய அரசு தகவல்கள் வெளியிட்டது.
முக்கிய நிகழ்வுகள்
தொகு- 2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் [1]
- 2002 பத்திரிகையாளர் டேனியல் பேர்ள் கொலை.[3][5]
- 2009 ஆம் ஆண்டு ஜெய்ஸ்-இ-முகம்மது இயக்கத்தினர் அமெரிக்காவில் கைது.[7][8][9]
- 2019, பிப்ரவரி 14 காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தில் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 44 மத்திய சேமக் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் மரணம் அடைத்தனர். மேலும் நாற்பதிற்கும் அதிகமானோர் காயமுற்றனர்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Cronin, Audrey Kurth; Huda Aden, Adam Frost, and Benjamin Jones (2004-02-06). "Foreign Terrorist Organizations". CRS Report for Congress (Washington, D.C.: Congressional Research Service): 40–43. http://www.fas.org/irp/crs/RL32223.pdf. பார்த்த நாள்: 2009-12-02.
- ↑ 2.0 2.1 2.2 Raman, B. (2001). JAISH-E-MOHAMMED (JEM) ---A BACKGROUNDER. South Asia Analysis Group. http://www.southasiaanalysis.org/%5Cpapers4%5Cpaper332.html. பார்த்த நாள்: 2013-12-29.
- ↑ 3.0 3.1 "Jaish-e-Mohammad: A profile", BBC News, 2002-02-06, பார்க்கப்பட்ட நாள் 2009-12-02
- ↑ Attack May Spoil Kashmir Summit
- ↑ 5.0 5.1 "Terror group builds big base under Pakistani officials' noses, Saeed Shah, McClatchy Newspapers, 13 Sep 2009". Archived from the original on 30 September 2009. பார்க்கப்பட்ட நாள் 29 December 2013.
- ↑ "JeM top commander killed in encounter in Kashmir".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-23. பார்க்கப்பட்ட நாள் 2009-05-23.
- ↑ "Synagogue targeted in NY plot, four charged". Reuters. 2009-05-21. http://www.reuters.com/article/latestCrisis/idUSN20523965.
- ↑ http://english.aljazeera.net/news/americas/2009/05/200952144536467973.html
- ↑ "Pulwama terror attack: Jaish-e-Mohammed claims responsibility with video of suicide bomber Adil Dar". இந்தியா டுடே. https://www.indiatoday.in/india/story/pulwama-terror-attack-kashmir-jaish-e-mohammad-adil-ahmad-dar-1456169-2019-02-14. பார்த்த நாள்: 14 February 2019.