பகவல்பூர் மாவட்டம்

பகவல்பூர் மாவட்டம் (Bahawalpur District) (பஞ்சாபி, உருது: ضلع بہاول پور) தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் பஞ்சாப் மாகாணத்தில் தெற்கில் அமைந்துள்ளது. பகவல்பூர் கோட்டத்தில் உள்ள இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் பகவல்பூர் ஆகும்.

பகவல்பூர் மாவட்டம்
بہاول پور
மாவட்டம்
தராவர் கோட்டை
நாடுபாகிஸ்தான்
மாகாணம்பஞ்சாப்
தலைமையிடம்பகவல்பூர்
பரப்பளவு
 • மொத்தம்24,830 km2 (9,590 sq mi)
மக்கள்தொகை (1998)
 • மொத்தம்24,33,091
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
வட்டங்கள் எண்ணிக்கை5
வட்டங்கள்பகவல்பூர்
அகமதுபூர் கிழக்கு
ஹசில்பூர்
கைப்பூர்
யாஸ்மன்
மொழிகள்சராய்கி மொழி, பஞ்சாபி மொழி மற்றும் உருது

மாவட்ட எல்லைகள் தொகு

பஞ்சாப் மாகாணத்தின் தெற்கில் பகவல்பூர் கோட்டத்தில் அமைந்த பகவல்பூர் மாவட்டத்தின் தெற்கிலும், தென்கிழக்கிலும் இந்தியாவும், கிழக்கில் பகவல்நகர் மாவட்டமும், வடக்கில் வெகாரி மாவட்டம், லோத்ரான் மாவட்டம் மற்றும் மூல்தான் மாவட்டங்களும், மேற்கில் ரகீம்யார்கான் மாவட்டமும், வடமேற்கில் முசாப்ப்பர்கர் மாவட்டமும் எல்லைகளாகக் கொண்டது.

மாவட்ட நிர்வாகம் தொகு

24,830 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகவல்பூர் மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக பகவல்பூர், அகமதுபூர் கிழக்கு, ஹசில்பூர், கைப்பூர் மற்றும் யாஸ்மன் என ஐந்து [[வட்டம் (தாலுகா)|வட்டங்களாகவும், நூற்றி எட்டு கிராம ஒன்றியக் குழுக்களாகவும், 1216 வருவாய் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. [1]

ஊர்களும் நகரங்களும் தொகு

இம்மாவட்டத்தில் நான்கு நகராட்சி மன்றங்களும், மூன்று நகர் பஞ்சாயத்துகளும், ஒரு இராணுவப் பாசறை ஊரும் உள்ளது.

சோலிஸ்தான் பாலைவனம் தொகு

பகவல்பூர் மாவட்டத் தலைமையிட நகரமான பகவல்பூரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இந்தியாவின் தார் பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ளது. உள்ளூரில் சோலிஸ்தான் பாலைவனத்தை ரோகி என அழைப்பர். சோலிஸ்தான் பாலைவனம் 26,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நீண்டு பரவியுள்ளது. இப்பாலைவனத்தில் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி இன மக்கள் வாழ்கின்றனர்.

தராவர் கோட்டை தொகு

 
தராவர் கோட்டை, சோலிஸ்தான் பாலைவனம், பகவல்பூர் மாவட்டம், பாகிஸ்தான்

பகவல்பூர் மாவட்டத்தில் உள்ள சோலிஸ்தான் பாலைவனத்தில் அமைந்துள்ள பதினோறு கோட்டைகளில் தராவர் கோட்டை பெரியதும், மிகவும் புகழ் பெற்றதும் ஆகும்.

இக்கோட்டைச் சுற்றுச் சுவர்களின் சுற்றளவு 1500 மீட்டர்களும், உயரம் முப்பது மீட்டரும் கொண்டது. நீண்ட சதுர வடிவிலான இக்கோட்டையின் மீதுள்ள நாற்பது காவல் கோபுரங்களை (கொத்தளம்) பாலவனத்திலிருந்து பல கிலோ மீட்டர் தொலவிலிருந்தும் சாதராணமாக காணலாம்.

மக்கள் தொகையியல் தொகு

1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 24,830 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகவல்பூர் மாவட்டத்தின் மக்கள் தொகை 24,33,091 ஆகுன். அதில் ஆண்கள் 1278775 (52.56%); பெண்கள் 1154316 ( 47.44 %)ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் (1981 - 98) 3.08% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 98 பேர் வீதம் வாழ்கின்றனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 110.8 ஆண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 35% ஆக உள்ளது. [2]

மக்கள் தொகையில் சராய்கி மொழியை 64.3% மக்களும், பஞ்சாபி மொழியை 28.4% மக்களும் மற்றும் உருது மொழியை 5.5% மக்களும் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். [3] இம்மாவட்ட மக்கள் தொகையில் 27.01% மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர்.[4]

பொருளாதாரம் தொகு

இம்மாவட்டத்தின் முக்கிய வேளாண் விளைபொருள் பருத்தி ஆகும். தோல் பதனிடுதல், தோல் செருப்புகள், பைகள், ஆடைகள் தயாரித்தல், கம்பளித் துணி நெய்தல் பிற முக்கியத் தொழில்கள் ஆகும்.

மேற்கோள்காள் தொகு

  1. "Tehsils & Unions in the District of Bahawalpur - Government of Pakistan". Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2017-01-31.
  2. "BAHAWALPUR DISTRICT AT A GLANCE" (PDF). Archived from the original (PDF) on 2017-01-20. பார்க்கப்பட்ட நாள் 2017-01-31.
  3. 1998 District Census report of Bahawalpur. Census publication. 48. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999. பக். 33. 
  4. "Urban Resource Centre". Archived from the original on 2006-05-13. பார்க்கப்பட்ட நாள் 2017-01-31.



"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவல்பூர்_மாவட்டம்&oldid=3792510" இலிருந்து மீள்விக்கப்பட்டது