ஜெருசா கெபர் சாண்டோசு

ஜெருசா கெபர் தாசு சாண்டோசு (Jerusa Geber dos Santos) (பிறப்பு: 1982 ஏப்ரல் 26) பிரேசிலைச் சேர்ந்த இவர் பார்வைக் குறைபாடு பிரிவில் இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் விளையாடும் விரைவோட்ட வீரராவார். [1] டி 11 வகைப்பாட்டில் போட்டியிடும் இவர் இரண்டு கோடைகால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிட்டு இரண்டு வெள்ளியையும், வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இவர் பல உலகப் போட்டிகளிலும், பரப்பன் அமெரிக்கப் போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளார். ஐந்து போட்டிகளில் பத்து பதக்கங்களை எடுத்துள்ளார். [2]

ஜெருசா கெபர் சாண்டோசு
2013 உலகப் போட்டியில் சாண்டோசு தனது பயிற்சியாளருடன்.
தனிநபர் தகவல்
முழு பெயர்ஜெருசா கெபர் தாசு சாண்டோசு
தேசியம்பிரேசிலியர்
பிறப்பு26 ஏப்ரல் 1982 (1982-04-26) (அகவை 42)
இரியோ பிரான்கோ, பிரேசில்
விளையாட்டு
நாடுபிரேசில்
விளையாட்டுதடகளம்
மாற்றுத்திறன் வகைப்பாடுடி 11 வகைப்பாடு
பதக்கத் தகவல்கள்
இணை ஒலிம்பிக் தடகளப் போட்டிகள்
நாடு  பிரேசில்
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2008 பெய்ஜிங் 200 மீ டி11
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2012 இலண்டன் 100மீ டி11
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2012 இலண்டன் 200மீ டி11
ஐபிசி உலகப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2011 கிறைஸ்ட்சேர்ச் 100 மீ ரிலே டி11-13
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2011 கிறைஸ்ட்சேர்ச் 100 மீ டி11
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2011 கிறைஸ்ட்சேர்ச் 200 மீ டி11
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2013 லியோன் 100 மீ டி11]]
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2013 லியோன் 200 மீ டி11]]
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 தோகா 100 மீ டி11]]
பரப்பன் அமெரிக்க விளையாட்டுகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2011 குவாதலஹாரா 100 மீ டி11]]
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2011 குவாதலஹாரா 200 மீ டி11]]
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2015 தொராண்டோ 100 மீ டி11]]
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2015 தொராண்டோ 400 மீ டி11]]

ஆரம்ப வரலாறு

தொகு

பிறவிக் கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு நான்கு வயதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் எட்டு வயதில் இவர் கண் அழுத்த நோயால் பாதிக்கப்படத் தொடங்கினார். மேலும், 18 வயதில் நிரந்தரமாக தனது பார்வையை இழந்தார். இவர் இணை ஒலிம்பிக் தடகளத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு 2005 இல் போட்டியிடத் தொடங்கினார்.

2008 இல் பெய்ஜிங்கிலும், 2012 இல் இலண்டன்|இலண்டனிலும்]], 2016 இல் இரியோ டி செனீரோவிலும் நடந்த மூன்று கோடைகால இணை ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றார். உலகப் போட்டிகளிலும், பராபன்-அமெரிக்க விளையாட்டுகளின் பல்வேறு பதிப்புகளிலும் அவர் கௌரவிக்கப்பட்டார். இலண்டன் இணை ஒலிம்பிக்கின் போது, ​​100 மீட்டரிலும், 200 மீட்டரிலும், இவர் பிரேசிலிய வீரர் ஜூலியா சாண்டோசையும், சீன வீரர் ஜுண்டிங்சியன் ஜியாவை பின்னுக்குத் தள்ளி தனது தோழி தெரெசின்கா ​​கில்கெர்மினாவுக்குப் பின் வெள்ளியை வென்றார். ஆனால் இவரது தாயகத்தில் நடந்த 2016 இரியோ டி செனீரோ விளையாட்டுப் போட்டிகளில், இவர் எந்த இறுதிப் போட்டிகளையும் எட்டவில்லை.

துபாயில் நடந்த 2019 உலகக் கோப்பையில் தங்கமும், லிமாவில் நடந்த பரப்பன் அமெரிக்கப் போட்டியில் இரட்டை தங்கமும் வென்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Santos, Jerusa". paralympic.org. பார்க்கப்பட்ட நாள் 20 August 2016.
  2. "GEBER DOS SANTOS Jerusa". IPC. பார்க்கப்பட்ட நாள் 20 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெருசா_கெபர்_சாண்டோசு&oldid=3842293" இலிருந்து மீள்விக்கப்பட்டது