ஜெ. ஜெயரஞ்சன்

தமிழக பொருளாதார அறிஞர்

ஜெ. ஜெயரஞ்சன் (J. Jeyaranjan, பிறப்பு: 29 மே 1960), தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருளியல் அறிஞர், பேராசிரியர், ஆய்வாளர், மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ்நாடு திட்டக் குழு துணைத்தலைவராக 2021 முதல் பணியாற்றி வருகிறார்.

ஜெ. ஜெயரஞ்சன்
துணைத் தலைவர்,
தமிழ்நாடு திட்டக்குழு
பதவியில் உள்ளார்
பதவியில்
6 சூன் 2021
நியமிப்புமு. க. ஸ்டாலின்
தலைவர்மு. க. ஸ்டாலின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 மே 1960 (1960-05-29) (அகவை 63)
இலுப்பக்கோரை, தஞ்சாவூர் மாவட்டம், மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா
குடியுரிமைஇந்தியர்
முன்னாள் கல்லூரி

தொடக்க வாழ்க்கை தொகு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகிலுள்ள இலுப்பக்கோரை எனும் சிற்றூரில் 29 மே 1960 அன்று பிறந்தார் ஜெயரஞ்சன்.[1][2]

கல்வி தொகு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் பட்ட மேற்படிப்பையும், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் (1995) பெற்றார்.

ஆய்வுப்பணி தொகு

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICSSR) சார்பில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பணியாற்றியுள்ளார். தமிழ்நாட்டின் பொருளாதார மாற்றங்கள் குறித்து 60-க்கும் மேற்பட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஐம்பதுக்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.[3]

தமிழ்நாடு திட்டக் குழு துணைத்தலைவர் தொகு

தமிழ்நாடு திட்டக் குழு துணைத்தலைவராக தமிழக அரசால் 6 சூன் 2021 அன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் நியமிக்கப்பட்டார் ஜெயரஞ்சன்.[4][5]

நூல்கள் தொகு

  • உலக வர்த்தக அமைப்பு ஓர் அறிமுகம்
  • திராவிட ஆட்சி மாற்றமும் வளர்ச்சியும்
  • கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்
  • இந்தியப் பொருளாதார மாற்றங்கள் (2018)
  • தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை (2020)[6]

குறிப்புகள் தொகு

  1. "VICE CHAIRMAN - Dr. J. JEYARANJAN".
  2. பசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது!- ஜெயரஞ்சன் பேட்டி, செவ்வி, 17 சூன் 2020, இந்து தமிழ்
  3. ஜெயரஞ்சன்: தமிழ்நாடு கொள்கை வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவர்; ஏராளமான ஆய்வுகள்! - யார் இவர்?, கட்டுரை, ஆனந்த விகடன் 2021 சூன் 7
  4. தமிழக அரசின் மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவராக பேரா ஜெ. ஜெயரஞ்சன் நியமனம், செய்தி ஒன் இந்தியா, 2021 சூன் 6
  5. மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவராக ஜெயரஞ்சன் நியமனம்: முதல்வர் உத்தரவு, செய்தி, 06 சூன் 2021, இந்து தமிழ்
  6. நூல் வெளி: காவிரிப் படுகையின் நில அரசியல், புத்தக அறிமுகம், 14 மார்ச் 2020, இந்து தமிழ் ]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._ஜெயரஞ்சன்&oldid=3864789" இலிருந்து மீள்விக்கப்பட்டது