தமிழ்நாடு திட்டக் குழு

தமிழ்நாடு அரசு அமைப்பு
(தமிழ்நாடு திட்டக்குழு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாடு திட்டக்குழு என்பது தமிழ்நாடு அரசின் நிதிக் கொள்கைகளை, திட்டங்களை வகுக்கும் ஒரு குழுவாகும். திட்டக்குழுவானது ஆண்டு மற்றும் ஐந்தாண்டு திட்டங்களை வகுக்கிறது, புதிய திட்டங்களை ஆராய்கிறது. மேலும் பலதரப்பட்ட துறைகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரைகள் வழங்குகிறது

Tamil Nadu Planning Commission
தமிழ்நாடு திட்டக் குழு
துறை மேலோட்டம்
அமைப்பு தலைமைகள்
மூல அமைப்புநிதித்துறை (தமிழ்நாடு)
வலைத்தளம்http://www.tn.gov.in/spc/

வரலாறு

தொகு

தமிழ்நாடு திட்டக்குழுவானது 1971, மே, 25ஆம் நாள் துவங்கப்பட்டது. 2020 ஏப்ரல் 23 அன்று அதிமுக ஆட்சியால் ஆண்டு இது தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழு என மறுசீரமைக்கப்பட்டது.[1] இக்குழுவின் தலைவராக தமிழக முதலமைச்சர் இருப்பார். இந்த மாநில திட்டக்குழுவின் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களாக பொதுமக்களில் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இத்திட்டக்குழுவில் நிதித்துறை, திட்டக்குழு மற்றும் முன்னேற்றத் துறையில் முன்னால் செயலர்களும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் உறுப்பினர்களின் செயலாளர் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணிகளை வழிநடத்துகிறார்.[2] இந்நிலையில் 2021 இல் மு. க. ஸ்டாலினின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இக்குழுவின் பெயரை மீண்டும் தமிழ்நாடு திட்ட குழு என்று மாற்றியமைத்தது.[3]

திட்டக்குழு மையப்படுத்தும் துறைகள்

தொகு
  • வேளாண் துறை கொள்கை மற்றும் திட்டங்கள்
  • தொழிற்சாலைகள் – மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை
  • நில உபயோகம்
  • ஊரக மேம்பாட்டுத்துறை
  • நலவாழ்வு மற்றும் சமூக நலத்துறை
  • கல்வித்துறை
  • மாவட்டத் திட்டக் குழு
  • திட்டங்கள் ஒருங்கிணைத்தல்

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள், செய்தி, தினமணி, 2021 சூன், 6
  2. அரசு திட்டங்கள் & சேவைகள் :: தமிழ்நாடு திட்டக்குழு, தவேப வேளாண் இணைய தளம்
  3. மின்னம்பலம். "மாநில வளர்ச்சிக் கொள்கை குழு பெயர் மாற்றம்!". மின்னம்பலம். Archived from the original on 2021-11-14. பார்க்கப்பட்ட நாள் 2021-11-14.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_திட்டக்_குழு&oldid=3864833" இலிருந்து மீள்விக்கப்பட்டது