ஜெ. தேவிகா

முனைவர் ஜெ. தேவிகா (J. Devika முழு பெயர் ஜெயக்குமாரி தேவிகா) ஒரு மலையாள வரலாற்றாசிரியர், பெண்ணியவாதி, சமூக விமர்சகர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த கல்வியாளர் ஆவார். [1] இவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள மேம்பாட்டு ஆய்வு மையத்தில் பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். [2] ஆரம்பகால கேரள சமூகத்தில் பாலின உறவுகள் குறித்த பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். [3] இவர் இருமொழிகளில் எழுத்துப் பணிகளை மேற்கொள்கிறார். மலையாளம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் புனைகதை மற்றும் புனைகதை அல்லாத புத்தகங்களை மொழிபெயர்த்தார். இவர் கேரளாவில் பாலினம், அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்களைக் குறிக்கும் வகையில் காஃபிலா, எக்கனாமிக், பொலிடிக்கல், தெ வயர் ஆகிய பதிப்பகங்களில் எழுதி வருகிறார். [4]

கல்விதொகு

தேவிகா, வரலாற்று ஆய்வுகள் குறித்து புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கோட்டயத்தில் முனைவர் பட்டம் பெற்றார். [2]

படைப்புகள்தொகு

தேவிகாவின் ஆரம்பகால ஆராய்ச்சி, கேரளாவில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமூகம் மற்றும் சமூக மாற்றத்தை விவரிக்கும் மொழியாக நவீன இருமம் பாலினம் தோன்றியதைப் பற்றியதாக இருந்தது. கேரளாவில் முதல் தலைமுறை பெண்ணியவாதிகள் எழுதிய எழுத்துக்களின் மொழிபெயர்ப்புகளையும் அவர் வெளியிட்டார் .இவரது பிற்கால ஆராய்ச்சியில், தேவிகா சமகால அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை ஒரு வரலாற்று கண்ணோட்டத்தின் மூலம் ஆராய்கிறார்.இவரது பிற்கால புத்தகங்கள் இருபதாம் நூற்றாண்டு கேரளாவில் பாலினம் மற்றும் அரசியல்ஆகியவற்றைப் பற்றியதாக உள்ளது.. [5]

ஸ்திரீவதம் எனும் பெயரில் பெண்ணியக் கோட்பாட்டின் அறிமுகத்தை இவர் 2000 ஆம் ஆண்டில் வெளியிட்டார். குலஸ்திரீயும் சந்தப்பென்னும் உண்டாயாதெங்கினே? எனும் நூலில் பெண்ணியக் கண்ணோட்டத்தில் கேரள வரலாற்றினை தெரிவிக்கிறார். இவர் கேரளாவின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றைக் கண்டறிந்து அதனை சுவாரஸ்யமான உட்பார்வைகளை தனது படைப்புகளில் வழங்குகிறார். உதாரணமாக, கேரளாவில் புடவை ஆடைக் குறியீடு மற்றும் வரதட்சணை ஆகியவை எவ்வாறு பரவியது என்பதை இவர் விளக்குகிறார்.

தேவிகா மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு பல புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறார். நளினி ஜமீலாவின் சுயசரிதை[6] மற்றும் கெ.ஆர்.மீரா மற்றும் சாரா ஜோசப்பின் சிறுகதைகள் [7] ஆகியன இவற்றில் குறிப்பிடத்தகுந்தன ஆகும். மேலும் இவர் பரவலாக அறியப்பட்ட கெ. ஆர். மீரா எழுதிய மலையாளப் புதினமான ஆரேசர் என்பதனை 2014 ஆம் ஆண்டில் ஹேங்வுமன் என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.[5] 2017 ஆம் ஆண்டில் அம்பிகசுதன் எழுதிய என்மகஜே எனும் புதினத்தினை ஆங்கிலத்தில் சுவர்கா என்ம் பெயரில் மொழிபெயர்த்தார்.

இவர் இந்தியாவின் பல மாநிலங்களிலும் மற்ற நாடுகளிலும் வெளியான கல்வி இதழ்களில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், உலகம் முழுவதும் பல சொற்பொழிவுகளை வழங்கினார் மற்றும் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் சமகால பிரச்சினைகள் குறித்தும் இவர் விரிவாக எழுதினார். தேவிகா மலையாளத்தில், சமகால பதிப்பகங்களில் விரிவாக எழுதுகிறார். இவர் குழந்தைகளுக்காகவும் எழுதியுள்ளார், இவருடைய படைப்பு கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் மூலம் வெளியிடப்பட்டது

ஸ்வந்த்ரியவாதினி என்ற முதல் தலைமுறை மலையாள பெண்ணியவாதிகள் பற்றிய வலைத்தளமும் இவருக்கு உள்ளது.

சான்றுகள்தொகு

  1. Sahadevan, Sajini. "Women's presence in social media an ongoing struggle". Mathrubhumi. 2020-01-19 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Centre For Development Studies". cds.edu. 7 நவம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 November 2013 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "cds" defined multiple times with different content
  3. "Centre For Development Studies". cds.edu. 7 நவம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  4. "About". KAFILA - 12 YEARS OF A COMMON JOURNEY (ஆங்கிலம்). 2006-10-19. 2020-01-19 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 Kuruvilla, Elizabeth (2017-03-03). "Writing is my revenge: K.R. Meera". Livemint (ஆங்கிலம்). 2020-01-19 அன்று பார்க்கப்பட்டது.
  6. Mahadevan-Dasgupta, Uma (2007-10-05). "Nalini's story". The Indian Express. http://archive.indianexpress.com/news/nalini-s-story/225004/. 
  7. Help, Caravan Circulation. "Yellow is the Colour of Longing". The Caravan (ஆங்கிலம்). 2020-01-19 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._தேவிகா&oldid=3573232" இருந்து மீள்விக்கப்பட்டது