ஜெ. பி. சாணக்யா

தமிழ் எழுத்தாளர்

ஜெ. பி. சாணக்யா ஒரு தமிழக எழுத்தாளர். 1998 முதல் தமிழில் எழுதி வருகிறார். இவரது கதைகள் தீவிர இலக்கிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரின் சிறுகதைள் "என் வீட்டின் வரைபடம் (2003), கனவுப்புத்தகம் (2005), முதல் தனிமை(2013)" என்ற தொகுப்பு நூல்களா வெளிவந்துள்ளன. இவர் சிறந்த இளம் எழுத்தாளருக்கான சுந்தர ராமசாமி விருதும், கதா விருதும் பெற்றுள்ளார். இவருடைய புவியீர்ப்பு விசை சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கலகத்தின் பத்திரிக்கை பிரிவான தமிழ் தலித் எழுத்தில் வெளிவந்துள்ளது. இவருடைய ”ஆண்களின் படித்துறை” கதா - காலச்சுவடு சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது. இவருடைய சிறுகதைகளை, மதுரை காமராசர் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி தமிழ் மாணவர்கள் Mphil பட்ட ஆய்வுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

ஜெ. பி. சாணக்யா.
பிறப்புஜெ.பி.சாணக்யா
(1973-05-28)மே 28, 1973
முடிகண்டநல்லூர்
கடலூர்
அடக்கத்தலம்சென்னை
தொழில்எழுத்தாளர், திரைப்படத்துரை
மொழிதமிழ்
தேசியம்இந்தியா
காலம்1995 - தற்சமயம்.
வகைபுனைவு
கருப்பொருள்இலக்கியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கனவுப்புத்தகம்
முதல் தனிமை
என் வீட்டின் வரைபடம்
குறிப்பிடத்தக்க விருதுகள்சுந்தர ராமசாமியின் இளம் எழுத்தாளருக்கான விருது - 2011”
கதா விருது

தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் பாலுமகேந்திரா, மணிரத்னம், ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார். சமீபமாக "மெட்ராஸ், கபாலி" ஆகியத் திரைப்படங்களில் திரைக்கதையாசிரியராக பணிபுரிந்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்புகள்

தொகு

கடலூர் மாவட்டம் முடிகண்டநல்லூர் கிராமத்தில் 1973 மே 28 ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் எம்.அப்பாதுரை, அம்மாவின் பெயர் எம்.கே. தெய்வக்கன்னி இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். திருமணமானவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழிசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு பயின்ற இவர் ஓவியரும் கூட. தற்போது எழுத்தாளராகவும், திரைப்படத்துரையில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார்.

விருதுகள்

தொகு
  1. சிறந்த இளம் எழுத்தாளருக்கான சுந்தர ராமசாமி விருது
  2. கதா விருது

ஆக்கங்கள்

தொகு
புத்தகம் ஆண்டு வெளியீடு
என் வீட்டின் வரைபடம் 2002 நாகர்கோவில்: காலச்சுவடு’
கனவுப் புத்தகம் 2005 நாகர்கோவில்: காலச்சுவடு.’
முதல் தனிமை 2013 நாகர்கோவில்: காலச்சுவடு.
பெருமைக்குரிய கடிகாரம் 2022 நாகர்கோவில்: காலச்சுவடு.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._பி._சாணக்யா&oldid=4161474" இலிருந்து மீள்விக்கப்பட்டது