ஜெ. லோகாம்பாள்
ஜெ. லோகாம்பாள் (J Logambal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி அருகே உள்ள குமுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த 1991 சட்டப்பேரவைத் தேர்தலில், திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி தொகுதியிலிருந்து போட்டியிட்டு திமுக வேட்பாளரான கே. என். நேருவைத் தோல்வியடையச் செய்து வெற்றி பெற்றார்.[1] தொடர்ந்து. இதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் கே. என். நேருவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜெ. லோகாம்பாள் உடல்நலக் குறைவினால் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் நாள் இறந்தார். இவருக்கும் ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.[2]