ஜே. இ. பி. வாலிஸ்

சென்னை மாகாண அரசு தலைமை வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

சர் ஜான் எட்வர்ட் பவர் வாலிஸ் (Sir John Edward Power Wallis) (3 நவம்பர் 1861 - 8 சூன் 1946) என்பவர் 1900 முதல் 1906 வரை மதராஸ் அரசு தலைமை வழக்கறிஞராகவும், 1914 முதல் 1921 வரை மதராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிய பிரித்தானிய வழக்கறிஞர் ஆவார்.

சர் ஜான் எட்வர்ட் பவர் வாலிஸ்
சென்னை மாகாண அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
1900–1906
முன்னையவர்வி. பாஷ்யம் ஐய்யங்கார் (செயல்)
பின்னவர்சி. சங்கரன் நாயர்
மதராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
பதவியில்
1914–1921
முன்னையவர்சர் சார்லஸ் அர்னால்ட் வைட்
பின்னவர்Sir Walter George Salis Schwabe
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 நவம்பர் 1861[1]
Marylebone, இலண்டன், இங்கிலாந்து[2]
இறப்பு8 சூன் 1946
Brighton, Sussex[3]
வேலைவழக்கறிஞர், நீதிபதி
தொழில்அரசு தலைமை வழக்கறிஞர், தலைமை நீதிபதி

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

இவர் 1861 ஆம் ஆண்டு எகிப்தின், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த ஜான் எட்வர்ட் வாலிஸ் என்பவரின் மகனாக பிறந்தார்.[4] இவர் டர்ஹாம், உஷாவ் கல்லூரி மற்றும் லண்டன் பல்கலைக்கழகம் (எம்.ஏ),[5] போன்றவற்றில் கல்வி கற்றார். 1886 ஆம் ஆண்டிலிருந்து மிடில் டெம்பிளில் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டு தொழிலில் ஈடுபட்டார்.[6]

மதராசில் சிலகாம் வணித்தில் ஈடுபட்ட நிலையில், சி. ஏ. வைட்டிற்குப் பிறகு 1900 சனவரியில் மதராஸ் மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

சட்ட வாழ்க்கை

தொகு

வாலிஸ் 1900 முதல் 1906 வரை மதராஸ் மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் இவர் மதராஸ் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு 1904 முதல் 1906 வரை பணியாற்றினார். 1907 ஆம் ஆண்டில், வாலிஸ் மதராஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1914 சூலை முதல் அக்டோபர் வரை பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டார். 1914 நவம்பரில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக செய்யப்பட்ட இவரது நியமனம் உறுதி செய்யப்பட்டது. இப்பதவியில் இவர் 1921 வரை பணியாற்றினார். 1926 ஆகத்து 19 அன்று, அவர் பிரிவி கவுன்சிலின் நீதித்துறை குழுவில் நியமிக்கப்பட்டார்.

இவர் 1908 இல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.[7] 1903 ஆம் ஆண்டில், வில்லியம் ரிச்சர்ட்சன் ஃபோக்கின் மகளான டோரோதியா மார்கரெட் என்பவரை மணந்தார்.[6]

குறிப்புகள்

தொகு
  1. Mair, Robert Henry (1914). Debrett's House of Commons and the Judicial Bench (in ஆங்கிலம்). Dean and Son. p. 487. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  2. 1891 England Census
  3. "Deaths". தி டைம்ஸ் (The Times Digital Archive): p. 1. 10 June 1946. 
  4. The Catholic Who's Who and Yearbook, vol. 9, Sir Francis Cowley Burnand, Burns & Oates, 1916, pg 473
  5. The County Families of the United Kingdom, 59th ed., Edward Walford, 1919, pg 370
  6. 6.0 6.1 Burke's General and Heraldic Dictionary of the Peerage and Baronetage of the Landed Gentry, 1914, pg 2578
  7. Who's Who, A. & C. Black, 1918

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._இ._பி._வாலிஸ்&oldid=3765954" இலிருந்து மீள்விக்கப்பட்டது