திஃசொங்கா மொழி

(ஜொங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜொங்கா (Dzongkha) பூட்டான் மக்களின் முதல் மொழியும் தேசிய மொழியும் ஆகும். "ஜொங்கா" என்றால் ஜொங் என்ற இடங்களில் பேசப்படும் மொழி (கா) என்பது கருத்து. 17ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பூட்டானில் அமைக்கப்பட்ட மடாலயங்கள் ஜொங் என அழைக்கப்படுகிறது.[1][2][3]

ஜொங்கா மொழி
Dzongkha
பிராந்தியம்பூட்டான் , சிக்கிம் (இந்தியா)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
முதல் மொழி: 130,000
இரண்டாம் மொழி ~470,000  (date missing)
திபெத்தியம்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பூட்டான்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1dz
ISO 639-2dzo
ISO 639-3dzo

ஜொங்கா மொழி தற்போதைய திபெத்திய மொழியின் உறவு மொழியாகும். 1960கள் வரையில் பௌத்த சமயத் துறவிகளால் திபெத்திய மொழியே கல்வி மொழியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ஜொங்கா மொழி பாடசாலைகளில் முதல் மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. பூட்டான் பாடசாலைகளில் ஜொங்கா மொழி கட்டாய பாடமாக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் காலிம்பொங் நகர மக்கள் ஜொங்கா மொழியைப் பேசி வருகின்றனர். இந்நகரம் முன்னர் பூட்டானுடன் இணைக்கப்பட்டிருந்தது.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "How many people speak Dzongkha?". languagecomparison.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-15.
  2. "Constitution of the Kingdom of Bhutan. Art. 1, § 8" (PDF). Government of Bhutan. 2008-07-18. Archived from the original (PDF) on 2011-07-06. பார்க்கப்பட்ட நாள் 2011-01-01.
  3. (van Driem 1991)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திஃசொங்கா_மொழி&oldid=4099509" இலிருந்து மீள்விக்கப்பட்டது