ஜோகான் ஆண்ட்ரியாசு வாக்னர்

ஜோகான் ஆண்ட்ரியாசு வாக்னர் (21 மார்ச் 1797 – 17 திசம்பர் 1861) என்பவர் செருமனிய தொல்லுயிரியல், விலங்கியல் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் பழங்காலவியல் பற்றிய பல முக்கியமான படைப்புகளை எழுதினார்.

ஜோகான் ஆண்ட்ரியாசு வாக்னர்
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
பிகெர்மியிலிருந்து பெறப்பட்ட இப்பாரியன், நேஷனல் டி ஹிஸ்டோயர் நேச்சுரல், பாரிஸ் அருங்காட்சியகம் .
கழுதைப்புலி, அட்க்ரோகுடா எக்சிமியாவின் பல். பிகெர்மி படிமம்.டெய்லர்ஸ் அருங்காட்சிய சிறப்பியல்புகளுள் ஒன்று.

வாக்னர் மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் முனிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், விலங்கியல் ஸ்டாட்ஸ்சம்லுங் (மாநில விலங்கியல் சேகரிப்பு) காப்பாளராகவும் இருந்தார். இவர் பாலூட்டிகளின் புவியியல் பரவல் (Die Geographische Verbreitung der Säugethiere Dargestellt) (1844-46) என்ற நூலின் ஆசிரியர் ஆவார்.

வாக்னர் ஒரு கிறித்தவ படைப்பாளி.[1]

பிகர்மி

தொகு

பிகெர்மியின் புதைபடிவப் படுக்கைகளுக்கு வாக்னர் பயணம் செய்து, மாசுடோடன், டைனோதெரியம், இப்பாரியன், இரண்டு வகையான ஒட்டகச் சிவிங்கிகள், மான் மற்றும் பிறவற்றின் புதைபடிவ எச்சங்களைக் கண்டுபிடித்து விவரித்தார்.[2][3] இந்த புதைபடிமங்களில் ஜோகன்னசு ரோத்துடன் இவர் இணைந்து எழுதிய தொல்லியல் நூல், "ரோத் & வாக்னர்" என்று அழைக்கப்படும் பழங்காலவியலில் ஒரு முக்கிய பாடப்புத்தகமாக மாறியது. இதில் "மிகவும் உடைந்த எலும்புகள், அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைத்து முழுமையான எலும்புக்கூடு எதுவும் காணப்படவில்லை".[4][5]

பெருமை

தொகு

வாக்னர், தென் அமெரிக்கப் பாம்பு வகையான தயபோரோலெபிசு வாக்னேரியின் அறிவியல் பெயரில் நினைவுகூரப்படுகிறது.[6]

நூல் பட்டியல்

தொகு
  • (in இடாய்ச்சு மொழி) 1844-1846. Die Geographische Verbreitung der Säugethiere Dargestellt.
  • (in இடாய்ச்சு மொழி) Johann Andreas Wagner 1897. Monographie der gattung Pomatias Studer.

மேற்கோள்கள்

தொகு
  1. Rupke, Nicolaas A. (2005). Neither Creation nor Evolution: The Third Way in Mid-Nineteenth-Century Thinking about the Origin of Species. Annals of the History and Philosophy of Biology 10: 160.
  2. Upper Miocene Formations of Greece at Pikermi பரணிடப்பட்டது 2012-06-03 at the வந்தவழி இயந்திரம் on Geology.com
  3. Neue Beiträge zur Kenntniss der fossilen Säugthier-Überreste von Pikermi on Google books, by Wagner, Munich, 1857
  4. Die fossilen Knochenüberreste von Pikermi in Griechenland on Google books, by Johannes Rudolf Roth and Johann Andreas Wagner, Munich, 1854
  5. "bones were much broken" in the Edinburgh New Philosophical Journal, Volume 6, 1857, page 182
  6. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. ("Wagner, J.A.", p. 278).