ஜோதிர்மயீ தாஷ்

ஜோதிர்மயி தாஷ் (Jyotirmayee Dash) கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ப்பு சங்கத்தில் பேராசிரியராக உள்ளார், பொதுவாக கரிம வேதியியல் மற்றும் வேதியியல் உயிரியல் தொடர்பான தலைப்புகளில் ஆராய்ச்சி ஆர்வத்துடன் உள்ளார். [1]

ஜோதிர்மயி தாஷ், 2003 ஆம் ஆண்டு பேராசிரியர். எஃப்.ஏ. கானின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய தொழில்நுட்பக் கழகம், கான்பூரில் தொகுப்புமுறை கரிம வேதியியலில் முனைவர் பட்டமும், இந்தியாவின் கட்டாக்கில் உள்ள ராவன்ஷா பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் பட்டமும் பெற்றார். இவர் 2004-2006 இல் ஜெர்மனியின் ஃப்ரீ பல்கலைக்கழக பெர்லினில் அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் ஆய்வு மாணவராகவும், 2006-2007 இல் பிரான்சின் ஈஎஸ்பிசிஐ பாரீசில் ஒரு முதுகலை ஆசிரியராகவும், 2006-2007-ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேரி-கியூரி ஆய்வுதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆய்வு மாணவராகவும் இருந்தார்.கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த அவர், 2014 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் வளர்ப்பு சங்கத்தில் சேர்ந்தார்.

கௌரவங்களும் விருதுகளும் தொகு

ஜோதிர்மயி தாஷுக்கு வழங்கப்பட்ட கௌரவங்கள் மற்றும் விருதுகள் பின்வருமாறு: [2]

மேற்கோள்கள் தொகு

  1. "Faculty Profile". பார்க்கப்பட்ட நாள் 8 November 2021.
  2. "JD Group: Organic Synthesis and Chemical Biology". பார்க்கப்பட்ட நாள் 8 November 2021.
  3. "Awardee Details". CSIR Human Resource Development Group, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 5 November 2021.
  4. "Odia chemical scientist gets prestigious award". பார்க்கப்பட்ட நாள் 8 November 2021.
  5. "Asia's Rising Scientists: Jyotirmayee Dash". பார்க்கப்பட்ட நாள் 8 November 2021.
  6. "Woman scientist nominated for Swarnajayanti fellowship". https://www.thehindu.com/sci-tech/science/Woman-scientist-nominated-for-Swarnajayanti-fellowship/article16986826.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிர்மயீ_தாஷ்&oldid=3881879" இலிருந்து மீள்விக்கப்பட்டது