ஜோன் கீ
ஜோன் பிலிப் கீ (John Phillip Key, பிறப்பு: ஆகஸ்ட் 9, 1961) என்பவர் நியூசிலாந்தின் அரசியல்வாதியும் , 2008 பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்று அந்நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்[1].
ஜோன் பிலிப் கீ John Phillip Key | |
---|---|
நியூசிலாந்தின் 38வது பிரதமர் தெரிவு செய்யப்பட்டவர் | |
பதவியில் அறிவிக்கப்படவில்லை | |
ஆட்சியாளர் | எலிசபெத் II |
தலைமை ஆளுநர் | ஆனந்த் சத்தியானந்த் |
Deputy | பில் இங்கிலிஷ் |
Succeeding | ஹெலன் கிளார்க் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 ஆகத்து 1961 ஆக்லன்ட், நியூசிலாந்து |
அரசியல் கட்சி | நியூசிலாந்து தேசியக் கட்சி |
துணைவர் | புரோனா கீ |
பிள்ளைகள் | இருவர் |
வாழிடம் | ஆக்லன்ட் |
இணையத்தளம் | johnkey.co.nz |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுஆக்லன்ட் நகரில் இரண்டு பெண் சகோதரர்களுடன் பிறந்தார் ஜோன் கீ. சிறு வயதிலேயே தந்தையை இழந்த கீ ஆஸ்திரிய யூத இன தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தார்[2].
கண்டர்பரி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் பட்டப்படிப்பை 1981 இல் முடித்த கீ பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பைத் தொடர்ந்தார். ஆனாலும் அவர் பட்டம் பெறாமலேயேயே நாடு திரும்பினார்[3].
2001 ஆம் ஆண்டில் தீவிர அரசியலில் நுழைந்தார். நியூசிலாந்து தேசியக் கட்சியில் இணைந்து ஹெலன்ஸ்வில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரானார். 2006 இல் எதிர்க்கட்சித் தலைவரானார். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 8இல் நடந்த தேர்தலில் ஹெலன் கிளார்க்கின் ஒன்பதாண்டு கால ஆட்சியைத் தோற்கடித்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- www.johnkey.co.nz பரணிடப்பட்டது 2007-03-31 at the வந்தவழி இயந்திரம்