ஜோபகா சுபத்ரா
ஜோபகா சுபத்ரா ( ஜூபகா மற்றும் ஜூப்கா என்றும் அழைக்கப்படும்; பிறப்பு 1962) [1] இந்தியாவின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தெலுங்கு தலித் செயற்பாட்டாளரும், கவிஞரும் எழுத்தாளருமாவார். இந்திய தலித்துகளின், குறிப்பாக தலித் பெண்களின் வாழ்வில் ஒளி வீசும் கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதி வரும் இவர், [2] தற்போது ஆந்திர பிரதேச தலைமை செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார். [3] [4]
ஜோபகா சுபத்ரா | |
---|---|
பிறப்பு | தமரஞ்செபள்ளி,வாரங்கல், தெலுங்கானா |
படித்த கல்வி நிறுவனங்கள் | காகாதியா பல்கலைக்கழகம், வாரங்கல் |
பணி | எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர். |
அறியப்படுவது | தலித் பெண்களைப் பற்றிய எழுத்துக்கள் |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுசுபத்ரா, வாரங்கல் மாவட்டத்தில் உள்ள (தற்போதைய தெலுங்கானா) தமரஞ்செபள்ளியில் நரசிம்மா மற்றும் கனக வீரம்மா என்ற பெற்றோருக்கு பிறந்துள்ளார். அவரது உடன்பிறந்தோர் பன்னிரண்டு பேரில் இவர் இளையவராவார். பள்ளிப் படிப்பை சமூக நல விடுதியில் தங்கி படித்துள்ள இவருக்கு சிறுவயதிலிருந்தே இயற்கை, அழகு, நட்பு போன்ற தலைப்புகளில் பல்வேறு கவிதைகள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானாவில் உள்ள காகதியா பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை பயின்றுள்ள சுபத்ரா, தெலுங்கு இலக்கியத்தில் முதுகலை மற்றும் முதுகலை தத்துவப் பட்டங்களைப் பெற்றுள்ளார். பல்வேறு அரசியல் கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள், பாடல்கள் மற்றும் பத்திரிகைத் துணுக்குகளையும் எழுதியுள்ளார். அரசுப்பணியின் மூலமாக, மட்டிப்பூலு (SC, ST, BC மற்றும் சிறுபான்மையினர்) பெண் எழுத்தாளர்கள் மன்றத்தை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ள இவர் தெலுங்கு இலக்கிய உலகில், நன்கு அறியப்பட்ட பெண்ணிய இதழான பூமிகா, [2] ஆந்திர ஜோதி, ஏகலவ்யா, வர்தா மற்றும் உத்யோக கிராந்தி போன்ற பத்திரிகைகளிலும் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளில் எழுதியுள்ளார். [1] 1988 ம் ஆண்டில் தனது ஆந்திரப் பிரதேச தலைமை செயலக பணியைத் தொடங்கிய பிறகு, அங்குள்ள பெண் ஊழியர்களுக்காக ஒரு மகளிர் சங்கத்தைத் தொடங்கியுள்ளார். 2015 ஆம் ஆண்டில், கட்டுரையாளராக இவரது பணிக்காக அபுரூப விருது அறக்கட்டளையின் சார்பாக அம்ருதலா விருது அவருக்கு வழங்கப்பட்டது. [5]
நூற்பட்டியல்
தொகுசுபத்ராவின் புத்தகங்கள் பெரும்பாலும் அவரது சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவையே.[2] அவரது புத்தகங்களின் பட்டியல் கீழே,:
- ராயக்கா மணியம், தலித் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்த சிறுகதைகளின் தொகுப்பு.[6]
- அய்யய்யோ தம்மக்கா. ஹைதராபாத். 2009. இணையக் கணினி நூலக மைய எண் 463973219.
- கைதுனகல டாண்டேம். கிருபாகர் மாதிகா போனுகோடி உடன் இணைந்து. ஹைதராபாத். 2008. இணையக் கணினி நூலக மைய எண் 313020449.
{{cite book}}
: CS1 maint: others (link) - நல்லாரிகாட்டி சல்லு (தெலுங்கில்). கோகு சியாமலாவுடன். ஹைதராபாத். 2008. இணையக் கணினி நூலக மைய எண் 170206399.
{{cite book}}
: CS1 maint: others (link) - சுட்டி செய்அலி தலித் பெண்கள் செய்த கடின உழைப்பை சித்தரித்தல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Zare & Mohammed 2013.
- ↑ 2.0 2.1 2.2 "Subhadra Joopka". பார்க்கப்பட்ட நாள் 11 October 2017.
- ↑ "Outcaste Interview". பார்க்கப்பட்ட நாள் 11 October 2017.
- ↑ "Rape Caste Feminism Dalit Movement". Archived from the original on 11 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 11 October 2017.
- ↑ "Award for novelist". https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/award-for-novelist/article7166471.ece.
- ↑ "Subhadra Joopaka". Literary Commons (in ஆங்கிலம்). 2016-01-19. பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.
- Zare, Bonnie; Mohammed, Afsar (2013). "Burn the Sari or Save the Sari? Dress as a Form of Action in Two Feminist Poems". Ariel: A Review of International English Literature 43: 69–86. https://journalhosting.ucalgary.ca/index.php/ariel/article/download/35065/28960.
வெளி இணைப்புகள்
தொகு- தலித் பெண் கவிஞர் ஜூபகா சுபத்ரா (2016 வீடியோ)