ஜோஸ் பிரகாஷ்

இந்திய நடிகர்

ஜோஸ் பிரகாஷ் (ஆங்கிலம்: Jose Prakash) (பிறப்பு: 1925 ஏப்ரல் 14 - இறப்பு: 2012 மார்ச் 24) இவர் மலையாள சினிமாவில் பணியாற்றிய ஒரு இந்திய நடிகரும் பாடகரும் ஆவார். இவர் ஒரு பாடகராக மாறிய நடிகராக இருந்தார். இவர் 300 க்கும் மேற்பட்ட படங்களில் பெரும்பாலும் எதிர்மறையான வேடங்களில் நடித்தார். இவர் தனது 87 வயதில் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு இவருக்கு 2011 ஆம் ஆண்டுக்கான ஜே. சி. டேனியல் விருது வழங்கப்பட்டது.[1][2] சுமார் 40 ஆண்டுகளாக எதிர்மறையான வேடத்தில் நடித்து மலையாள திரையுலகில் ஆதிக்கம் செலுத்தினார் பின்னர், இவர் 90களின் நடுப்பகுதியில் கதாபாத்திர வேடங்களுக்கு மாறினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் ஏப்ரல் 1925 14 அன்று குன்னல் கே. ஜே. ஜோசப் மற்றும் இலியம்மா என்பவர்களுக்கு ஜோசப் எட்டு குழந்தைகளில் மூத்தவராக கோட்டயம் சங்கனாச்சேரி என்ற இடத்தில் பிறந்தார். இவருக்கு பிரேம் பிரகாஷ் என்ற ஒரு தம்பி இருக்கிறார். கோட்டயம் புனித இருதய பொதுப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.[3] இவர் சென்னையில் சுமார் 30 ஆண்டுகள் வசித்து வந்தார். பின்னர் கொச்சிக்கு குடிபெயர்ந்தார். 2003 ஆம் ஆண்டில் நீரிழிவு நோய் காரணமாக இவரது வலது காலை வெட்ட வேண்டியிருந்தது. இவருக்கு 6 குழந்தைகள், 2 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர்: எல்சம்மா ஜோசப், இராஜன் ஜோசப், கிரேசி மாலியகல், ஷாஜி ஜோசப், ஜாஸ்மின் ஜோசப், மற்றும் சூசன் ஜோசப் ஆகியோர். இவர் தனது இளைய மகன் ஷாஜி ஜோசப்புடன் கொச்சினில் 2012 மார்ச் 24 அன்று இறக்கும் வரை வாழ்ந்தார்.

திரைக்கதை எழுத்தாளர்கள் பாபி-சஞ்சய் மற்றும் மலையாளத் திரைப்பட இயக்குனர் டென்னிஸ் ஜோசப் ஆகியோர் இவரது மருமகன்கள் ஆவர்.[4]

ஆரம்ப கால வாழ்க்கையில்

தொகு

ஜோஸ் பிரகாஷ் திரையுலகில் நுழைவதற்கு முன்பு இந்திய ராணுவத்தில் இருந்தார். இராணுவத்தில் இருந்தபோது, பிரிவினையின் போது மகாத்மா காந்தியின் பாதுகாவலராக பணியாற்றுவதற்கான அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்த வயதின் மற்ற நடிகர்களைப் போல அவர் ஒரு நாடகக் கலைஞரோ அல்லது மேடை கலைஞரோ அல்ல. அவர் 8 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார்.[5][6] பின்னர் அவர் இராணுவத்தை விட்டு வெளியேறி தனது தாயகத்திற்குத் திரும்பி சிறு தொழிலைத் தொடங்கினார். சிறுவயதிலிருந்தே திரைப்படங்கள் மற்றும் இசையில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தனது நண்பர்களுடன் கோட்டயம் ஆர்ட்ஸ் கிளப் என்று ஒரு சிறிய கிளப்பைத் தொடங்கினார், அதில் அவர் முன்னணி பாடகராக இருந்தார்.[7] திக்குரிசி சுகுமரன் நாயர் ஒருமுறை அவரது நடிப்பைக் கண்டார். அவரது முதல் இயக்கமான ஷெரியோ தீட்டோவுக்கு பாடகராக அழைத்தார் . திக்குறிசிதான் இவருக்கு ஜோஸ் பிரகாஷ் என்ற பெயரைக் கொடுத்தார்.

திரைப்பட வாழ்க்கை

தொகு

பாடகராக

தொகு

ஜோஸ் பிரகாஷ் தனது ஆரம்பகால வாழ்க்கையை ஒரு பாடகராகத் தொடங்கினார், அவர் பிரேம் நசீர், சத்தியன் போன்றவர்களுக்கு குரல் கொடுத்தார். 1950 களின் முற்பகுதியில் மலையாளத் தொழில் தொழில்முறையாக இல்லை, பொதுவாக நடிகர்கள் தங்களுக்குத் தாங்களே பாடுவார்கள். திக்குறிசி சுகுமாரன் நாயர் இவரை வி தட்சிணாமூர்த்யிடம் அறிமுகப்படுத்தினார். அவர் இவரது குரலை விரும்பி, 1953 ஆம் ஆண்டில் திக்குரிசி சுகுமரன் நாயர் இயக்கிய ஷெரியோ தீட்டோ படத்திற்காக பாடகராக்கினார்.[8] ஜோஸ் பிரகாஷ் பாடிய தத்துவப் பாடல் வரிசையில் "பாடு பெட்டு பாதங்கலில்" என்ற பாடல் மலையாளத் திரைப்படங்களில் ஒரு புதிய போக்கை உருவாக்கியது. இந்தப் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்திலும் இவர் நடித்திருந்தார். அவர் ஒரு தொழில்முறை பாடகர் அல்ல, எந்த இசை வகுப்பிலும் கலந்து கொள்ளவில்லை. 1960 களின் முற்பகுதியில் மலையாளத் திரையுலகம் தொழில்முறை ஆனது மற்றும் ஏ.எம்.ராஜா, கே.ஜே.யேசுதாஸ் போன்ற திறமையான பாடகர்களின் அறிமுகம் தொழில்முறை அல்லாத அனைத்து பாடகர்களின் வாழ்க்கையையும் முடித்தது. 1960 கள் வரை பிரேம் நசீர் போன்ற பல்வேறு நடிகர்களுக்காக 60 பாடல்களை இவர் பாடியுள்ளார்.

விருதுகள்

தொகு

மேலும் படிக்க

தொகு
 • Jose Prakash Celebrating his 84th birthday-http://www.ratedesi.com/video/v/XJgxBIs0Hpk/Actor-Jose-Prakash-celebrates-84th-birthday!
 • "The Hindu : Metro Plus Kochi / Columns : SHARIYO THETTO 1953". hindu.com. Archived from the original on 2011-01-10. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
 • "STAR GALLERY   Malayalam TV, Channel Updates, TV Programmes, News Online". malayalamtv.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.

குறிப்புகள்

தொகு
 1. "J C Daniel award for Jose Prakash, 24 March 2012". Archived from the original on 27 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 டிசம்பர் 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
 2. "Manorama Online | Movies | Nostalgia |". manoramaonline.com. Archived from the original on 2014-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-19. பார்க்கப்பட்ட நாள் 2019-12-19.
 4. http://www.newindianexpress.com/cities/kochi/article348742.ece?service=print
 5. "Veteran actor Jose Prakash is dead". Archived from the original on 2012-09-06. பார்க்கப்பட்ட நாள் 2019-12-19.
 6. Malayalam thespian Jose Prakash dead பரணிடப்பட்டது 27 மார்ச்சு 2012 at the வந்தவழி இயந்திரம்
 7. he was the lead singer
 8. Mathrubhumi, Jose Prakash laid to rest பரணிடப்பட்டது 26 மார்ச்சு 2012 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஸ்_பிரகாஷ்&oldid=3573472" இலிருந்து மீள்விக்கப்பட்டது