ஞானம் அறக்கட்டளை

இலங்கையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அறக்கட்டளை

ஞானம் அறக்கட்டளை (Gnanam foundation) என்பது இலங்கையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு அறக்கட்டளை ஆகும். இந்த அறக்கட்டளை லைக்கா செல்லிடப்பேசி நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஷ்கரனால் 2010 இல் தோற்றிவிக்கப்பட்டது. இதில் அவரின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா, அவரது மனைவி பிரேமா சுபாஷ்கரன் போன்றோர் நிர்வாகிகளாக உள்ளனர். இந்த அறக்கட்டளை இலங்கையில் போரினால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நலவாழ்வு, கலவி போன்றவற்றிற்கு உதவிவருகிறது. இது இலங்கை மட்டுமல்லாது இந்தியா, பாக்கித்தான், ருமேனியா, நைஜீரியா, சூடான், தான்சானியா, பிலிப்பீன்சு ஆகிய நாட்டு மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவு செய்யும் விதமாக அங்குள்ள சேவை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

பணிகள் தொகு

இந்த அறக்கட்டளை இலங்கை உள்நாட்டுப் போரினால் பாதிப்புக்கு உள்ளாகி அடிப்டை வசதிகள் இல்லாமல் முகாம்களில் அடைபட்டிருந்த 150 தமிழ்க் குடும்பங்களுக்கு வவுனியா அருகே உள்ள சின்னடம்பன் என்கிற இடத்தில் இந்ந அறக்கட்டளையால் கிராமம் புனரமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த விடுகளை பயனாளிகளுக்கு அளிக்கும் விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வருவதாக அறிவிக்கப்பட்டது.[1] இவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கலந்துகொள்ளவில்லை என அறிவித்தார்.[2] ஆனால் திட்டமிட்டபடி ரஜினிகாந்த் கலந்துகொள்ளாமலே விழா நடைபெற்று பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

வெளி இணைப்புகள் தொகு

ஞானம் அறக்கட்டளை இணையதளம்

மேற்கோள்கள் தொகு

  1. "யாழில் சர்ச்சைக்குரிய லைக்காவின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்!". செய்தி. Nathamuni. 2017 மார்ர் 22. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "உண்மையில், 150 வீடுகளையும் லைக்கா நிறுவனம், தமது 'ஞானம் அறக்கட்டளை' யின் சார்பில் தான் கட்டியுள்ளது! தொல். திருமாவளவன்:-". அறிக்கை. http://athavannews.com/?p=439850. 29 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help); External link in |publisher= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானம்_அறக்கட்டளை&oldid=3582510" இலிருந்து மீள்விக்கப்பட்டது