டக்ளசு தோபியாசு
டக்ளசு இயேம்சு தோபியாசு (Douglas James Tobias) ஓர் அமெரிக்க வேதியியலாளர் ஆவார். இவர் இர்வைன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் உள்ளார்.[1]இவரது ஆராய்ச்சி உயிரி இயற்பியல் துறை, கோட்பாட்டு மற்றும் கணக்கீட்டு வேதியியல் துறைகளில் உள்ளது. 2006 ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கத்தின் உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 2013 ஆம் ஆண்டில் அமெரிக்க வேதியியல் சங்கத்தின் உறுப்பினராகவும், 2014 ஆம் ஆண்டில் அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டில், அமெரிக்க வேதியியல் ச்ங்கத்தின் இயற்பிய வேதியியல் பிரிவிலிருந்து கோட்பாட்டு வேதியியல் விருது இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் 2017 ஆம் ஆண்டில், இராயல் வேதியியல் கழகம் இவருக்கு மென் பருப்பொருள் மற்றும் உயிரி இயற்பியல் வேதியியல் விருதை வழங்கி சிறப்பித்தது. [3]
டக்ளசு தோபியாசு Douglas Tobias | |
---|---|
பிறப்பு | டக்ளசு இயேம்சு தோபியாசு |
தேசியம் | அமெரிக்கர் |
துறை |
|
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்) |
கல்வி |
|
ஆய்வேடு | புரத மடிப்பு துவக்க கட்டமைப்புகளின் உருவாக்கம் மற்றும் நிலைப்புத்தன்மை (1991) |
ஆய்வு நெறியாளர் | சார்லசு எல் புரூக்சு III |
விருதுகள் |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Douglas J. Tobias". UCI Department of Chemistry. பார்க்கப்பட்ட நாள் 2021-09-13.
- ↑ "Douglas J. Tobias". UC Irvine Faculty. பார்க்கப்பட்ட நாள் 2021-09-13.
- ↑ "Prof. Douglas J. Tobias". Atmospheric Integrated Research at University of California, Irvine. பார்க்கப்பட்ட நாள் 2021-09-13.
வெளி இணைப்புகள்
தொகு- Faculty page
- Lab website
- டக்ளசு தோபியாசு publications indexed by Google Scholar