டம்ப் மனி (Dumb Money) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க வாழ்க்கை வரலாற்று நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்பத்தின் பெரும்பகுதி அமெரிக்க பங்கு சந்தையில் நடந்த உண்மை நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டதாகும். இதனை கிரெய்க் கில்லெஸ்பி இயக்கியுள்ளார். இலாரன் சூக்கர் ப்ளூம், ரெபேக்கா ஏஞ்சலோ ஆகியோர் திரைப்படத்தின் கதையை எழுதி உள்ளனர. இது 2021 ஆம் ஆண்டு பென் மெஸ்ரிச்சின் (Ben Mezrich) எழுதிய தி ஆன்டிசோசியல் நெட்வொர்க் (The Antisocial Network) புத்தகத்தையும், சனவரி 2021 ஆண்டின் வெளியான கேம்சுடாப் சார்ட் சுகியூசு (GameStop short squeeze) என்ற தொடர் நிகழ்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டது ஆகும். பால் டானோ, பீட் டேவிட்சன், வின்சென்ட் டி'ஓனோஃப்ரியோ, அமெரிக்கா ஃபெரெரா, நிக் ஆஃபர்மேன், அந்தோனி ராமோஸ், செபாஸ்டியன் ஸ்டான், ஷைலீன் உட்லி, சேத் ரோஜென் ஆகியோரை உள்ளடக்கிய குழும நடிகர்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

டம்ப் மனி
இயக்கம்கிரேக் கில்லெஸ்பி
தயாரிப்பு
  • Aaron Ryder
  • Teddy Schwarzman
  • Craig Gillespie
கதை
  • Lauren Schuker Blum
  • Rebecca Angelo
இசைWill Bates
நடிப்பு
ஒளிப்பதிவுNikolas Karakatsanis
படத்தொகுப்புKirk Baxter
கலையகம்
விநியோகம்சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்
வெளியீடுசெப்டம்பர் 8, 2023 (2023-09-08)(Toronto International Film Festival(TIFF))
செப்டம்பர் 15, 2023 (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
ஓட்டம்104 நிமிடங்கள்[2]
நாடுUnited States
மொழிEnglish
ஆக்கச்செலவு$30 million[3]
மொத்த வருவாய்$20.7 million[4][5]

சொற்தோற்றம்

தொகு

டம்ப் மனி (Dump Money) என்றால், அமெரிக்க பங்கு சந்தையின் பெரும் பணக்காரர்களால், இளக்காரமாக குறிக்கப்படும் சல்லிப்பணம், குப்பைப் பணம் என்பது பொருளாகும், வட்டார வழக்குச் சொல் ஆகும். அச்சல்லி பணம் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்ததால், பெரும் முதலாளிகள் பெரு நட்டம் அடைந்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டதே, இத்திரைப்படமாகும்.

கதைச் சுருக்கம்

தொகு

ஒரு சாதரண பங்கு சந்தை அடிப்படையில் பதிவுகளை உருவாக்கும் யூடிப்பர், எளிய மக்களின் சிறுசிறு முதலீடுகளைக் கொண்டு, பெரும் பணக்காரர்கள் பெருமளவில் ஈடுபடும் பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபடுகிறார். தான் கொண்ட உறுதியான நம்பிக்கையில், மிக நேர்மையான முடிவுகளால், கோடிக்கணக்கில் பணம் ஈட்டுகிறார். அவர் மட்டும் அல்லாமல், அவரை நம்பி, முதலீடு செய்த எளியவர்களும் பெருமளவு பணம் ஈட்ட வைக்கிறார்.

நடிகர்கள்

தொகு

 

படப்பிடிப்பு

தொகு

அக்டோபர் முதல் நவம்பர் 2022 வரை நியூ செர்சியில் முதன்மை புகைப்படம் எடுத்தல் நடைபெற்றது மோரிஸ், எசெக்ஸ் மற்றும் அட்சன் மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது, செயின்ட் எலிசபெத் பல்கலைக்கழகத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டன.

சவால்கள்

தொகு

கோவிட்-19 தொற்றுநோய்களின் போது படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் முகமூடிகளை அணிந்திருந்தனர். இயல்பு வாழ்க்கையில் அவர்கள் நேரில் சந்தித்ததில்லை. உடல் நெருக்கம் இல்லாத நிலையில் அவர்களை ஒன்றிணைக்க, எழுத்தாளர்களான லாரன் சூக்கர் ப்ளூம் மற்றும் ரெபேக்கா ஏஞ்சலோ திரைக்கதை எழுத்தாளர் ஃபிராங்க் காப்ரா மற்றும் தி சோஷியல் நெட்வொர்க் போன்ற படங்களில் இருந்து மனஉந்துதலும், நம்பிக்கையும் பெற்றனர்.

வில் பேட்சு இசையமைத்த இந்த ஒலிப்பதிவு செப்டம்பர் 22, 2023 அன்று வெளியிடப்பட்டது.

பட வெளியீடு

தொகு

2023 SAG-AFTRA வேலைநிறுத்தம் காரணமாக நடிகர்கள் கலந்துகொள்ள முடியாமல் போன நிலையில், செப்டம்பர் 8, 2023 அன்று டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் Dumb Money திரையிடப்பட்டது.[7] இது கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் ஸ்டேஜ் 6 ஃபிலிம்ஸ் லேபிள்களின் கீழ் சோனி பிக்சர்ஸ் மூலம் அமெரிக்காவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,[8] சோனி, பிளாக் பியர் இன்டர்நேஷனல் மற்றும் பிற உள்ளூர் விநியோகஸ்தர்கள் சர்வதேச அளவில் இதை வெளியிட்டனர்.[9][10]

டம்ப் மணி நவம்பர் 7 அன்று எண்ணிம தளங்களில் வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து, திசம்பர் 12 இல் ப்ளூ-ரே, டிவிடி தொழில் நுட்பங்களில் வெளியானது.

ஈட்டிய பணம்

தொகு

டம்ப் மணி அமெரிக்காவிலும் கனடாவிலும் $13.9 மில்லியனையும், மற்ற பிராந்தியங்களில் $6.8 மில்லியனையும், உலகளவில் $20.7 மில்லியனை வசூலித்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Hines, Patrick (June 21, 2023). "Bad Bunny's Spider-Man Universe Movie 'El Muerto' Pulled From Sony Release Schedule". Deadline Hollywood. Archived from the original on June 21, 2023. பார்க்கப்பட்ட நாள் June 22, 2023.
  2. "Dumb Money (15)". BBFC. September 11, 2023. பார்க்கப்பட்ட நாள் September 11, 2023.
  3. Barnes, Brooks (September 8, 2023). "'Dumb Money' Lampoons Wall Street Titans With a Knowing Eye". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து December 17, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231217023334/https://www.nytimes.com/2023/09/08/business/dumb-money-wall-street-game-stop.html. 
  4. "Dumb Money". பாக்சு ஆபிசு மோசோ. ஐ. எம். டி. பி இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் November 24, 2023. 
  5. "Dumb Money". த நம்பர்சு. நேஷ் இன்பர்மேசன் சர்விசசு, எல்.எல்.சி. பார்க்கப்பட்ட நாள் November 24, 2023.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 Breznican, Anthony (June 21, 2023). "Dumb Money First Look: The GameStop Stock Frenzy Is Now a Movie". Vanity Fair. Archived from the original on June 21, 2023. பார்க்கப்பட்ட நாள் June 21, 2023.
  7. "TIFF Lineup Unveiled Amid Strikes: Awards Contenders 'Dumb Money', 'The Holdovers', 'Rustin'; Starry Pics For Sale With Scarlett Johansson, Kate Winslet, Michael Keaton, Viggo Mortensen & More". July 24, 2023.
  8. "Sony Pictures' Stage 6 Films Wins Rights To A24 & Ari Aster's 'Beau Is Afraid' In UK & Other Markets: EFM". February 22, 2023. பார்க்கப்பட்ட நாள் February 22, 2023.
  9. "Sony Swoops On Buzzy GameStop Movie 'Dumb Money' With Paul Dano, Seth Rogen, Sebastian Stan, Pete Davidson & Shailene Woodley; Filming Underway". October 12, 2022. பார்க்கப்பட்ட நாள் October 26, 2022.
  10. "Anthony Ramos, Vincent D'Onofrio, and Dane DeHaan Join Sony and Black Bear's GameStop Film 'Dumb Money'". October 17, 2022. பார்க்கப்பட்ட நாள் October 26, 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டம்ப்_மனி&oldid=4134837" இலிருந்து மீள்விக்கப்பட்டது