டாக்டர் என். ஜி. பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரி (Dr. N.G.P. Arts and Science College) என்பது கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை (KMCRET) அமைப்பினால் 1990ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சுயநிதி கல்லூரியாகும்.[1]

டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்1990
முதல்வர்வி. ராஜேந்திரன்
அமைவிடம்
கோவை- 641048.
, ,
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[http:// www.drngpasc.ac.in]

அறிமுகம் தொகு

கோயம்புத்தூர் மாவட்டம்[2] கலப்பட்டியில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் இந்த சுயநிதி கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரியாக இது செயல்படுகிறது.[3] புது தில்லி, பல்கலைக்கழக மானியக் குழுவின் 2 (எஃப்) மற்றும் 12 (பி) பிரிவின் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ளது.[4] பல்கலைக்கழக இணைவுப் பெற்றக் கல்லூரியாக துவங்கப்பட்ட இக்கல்லூரி, 2015-16 கல்வியாண்டிலிருந்து தன்னாட்சிக் கல்லூரியாக செயல்படுகிறது. மார்ச் 17, 2016 அன்று பெங்களூர் தேசிய தர மதிப்பீட்டு குழுவின் 3.17/4 தரப் புள்ளிகளுடன் "ஏ" (A) தரக் கல்லூரியாக செயல்படுகிறது.[5] இந்த கல்லூரிக்கு 2022-ல் மறுசுழற்சி ஆய்வின் போது அதிக தரப்புள்ளிகள் வழங்கியது.

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் இளங்கலையிலில் வணிகவியல், வணிகவியல் நிறுவனச்செயலாண்மை ஆகியப் பாடங்களும் முதுகலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் என 32 பிரிவுகளில் பட்ட பட்ட மேற்படிப்பில் பாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சான்றுகள் தொகு