டாட்டா உப்பு

டாட்டா உப்பு (Tata Salt) இந்தியாவின் முதல் பைகளில் அடைக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பாக டாட்டா கெமிக்கல்ஸ் நிறுவனத்தால் 1983இல் தொடங்கப்பட்டது. இது இப்போது 17% சந்தைப் பங்கைக் கொண்டு , இந்தியாவின் மிகப்பெரிய பைகளில் அடைக்கப்பட்ட உப்பாக உள்ளது.

டாட்டா உப்பு
நிறுவுகை1983
தலைமையகம்டாட்டா கெமிக்கல்ஸ், பாம்பே ஹவுஸ், மும்பை
சேவை வழங்கும் பகுதிஇந்தியாவெங்கிலும்
முக்கிய நபர்கள்நடராசன் சந்திரசேகரன்
(தலைவர்)
ஆர். முகுந்தன்
(நிர்வாக இயக்குனர்)
தொழில்துறைஉணவு
உற்பத்திகள்உப்பு
இணையத்தளம்Official Website

இந்திய உப்புச் சந்தைதொகு

சூன், 2019 நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள 161 மில்லியன் குடும்பங்களைச் சென்றடையும் 65 லட்சத்திற்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் 90 ஆயிரம் மெட்ரிக் டன் டாட்டா உப்பு விற்பனை செய்யப்படுகிறது. [1]

இந்தியாவில் பைகளில் அடைக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பும், இதர உப்புகளின் சந்தை மதிப்பும் ரூ. 21.7 பில்லியன் ஆகும். இதில் டாட்டா உப்பு விற்பனை பங்கு ரூ. 3.74 பில்லியன் அல்லது சந்தையில் 17.3% ஆகும். உள்நாட்டுப் போட்டியாளர்களில் அங்கூர், அன்னபூர்ணா, சர்பு, கேப்டன் குக், ஐ-சக்தி, நிர்மா சுத், ஆசீர்வாத் ஆகியவையும் அடங்கும். எவ்வாறாயினும், டாட்டா உப்புக்குப் பிறகு இரண்டாவது பெரிய சந்தைப் பங்கைக் கொண்ட சூர்யா உப்பு மட்டுமே பெரும் போட்டியை அளிக்கிறது.

தயாரிப்புகள்தொகு

டாட்டா உப்பு இரண்டு வகையான பைகளில் விற்கப்படுகிறது. டாட்டா உப்பு ஐந்து வெவ்வேறு வகையான உப்பை உற்பத்தி செய்கிறது.[2]

விளம்பரம்தொகு

அதன் விளம்பரத்தில், டாட்டா உப்பு தன்னை தேஷ் கா நமக் பரணிடப்பட்டது 2013-09-29 at the வந்தவழி இயந்திரம் என்று நிலைநிறுத்துகிறது. தோராயமாக "தேசத்தின் உப்பு" என்று மொழிபெயர்க்கலாம். குல் மில் என்ற பொருளின் சமீபத்திய விளம்பரம், ஒரு தேசமாக இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையைப் பற்றியும், டாட்டா உப்பை தண்ணீரில் முழுவதுமாகக் கரைக்கும் விதத்தில், அது ஒரு தூய உப்பு என்பதைக் காட்டும் விதத்தில், மக்கள் எப்படி ஒருவரோடு ஒருவர் கலந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் பேசுகிறது. வடகிழக்கிந்தியாவில் இதன் விலை 20 ரூபாய் எனவும் இந்தியாவின் பிற பகுதிகளில் 18 ரூபாய் எனவும் விற்கப்படுகிறது.

விருதுகளும் அங்கீகாரமும்தொகு

பொருட்களுக்கான நிறுவனத்தின் 2013இன் அறிக்கையின்படி டாட்டா உப்பு இந்தியாவின் நம்பகமான பொருட்களில் 316வது இடத்தைப் பிடித்தது. [3] அதே சமயம் 2014இன் அறிக்கை இதனை 106வது இடத்தில் கொண்டு சேர்த்தது. [4] டாட்டா சால்ட் 2015இல் இந்தியாவின் 2வது மிகவும் நம்பகமான பொருளாக இருந்தது [5] இந்தியாவின் மிகவும் நம்பகமான 'சிறந்த நபர்' பட்டியலில் டாட்டா குழுமத்தின் ரத்தன் டாட்டாவும் இடம்பெற்றுள்ளார்.

சான்றுகள்தொகு

  1. "TATA salt, about us". 2022-01-24 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  2. "Different type of TATA salt". 2022-01-21 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  3. "India's Most Trusted brands 2013". 2013-08-28 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  4. "India's Most Trusted brands 2014". 2015-05-02 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  5. "Most Trusted Brands 2015: And the winners are..." ETBrandEquity (ஆங்கிலம்). 2015-11-25. 2017-02-07 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா_உப்பு&oldid=3404690" இருந்து மீள்விக்கப்பட்டது