அயோடின் கலந்த உப்பு

அயோடின் கலந்த உப்பு (Iodised salt) என்பது உணவில் சேர்க்கப்படும் உப்புடன் தனிம அயோடினைக் கொண்டுள்ள பல்வேறு உப்புகளை மிகச்சிறிய அளவில் கொண்டுள்ள உப்பாகும். அயோடின் உட்கொள்வது அயோடின் குறைபாட்டைத் தடுக்கிறது. உலகளவில், அயோடின் குறைபாடு சுமார் இரண்டு பில்லியன் மக்களை பாதிக்கிறது இந்தக் குறைபாடு அறிவு சார் மற்றும் வளர்ச்சி குறைபாடுகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. [1] இக்குறைபாடு தைராய்டு சுரப்பி பிரச்சினைகளையும் "ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிக்குரிய முன்கழுத்துக் கழலை நோய்" உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. பல நாடுகளில், அயோடின் குறைபாடு என்பது ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சினையாகும், இப்பிரச்சனையை சோடியம் குளோரைடு உப்பில் சிறிய அளவு அயோடினை வேண்டுமென்றே சேர்ப்பதன் மூலம் எளிதாக தீர்க்க முடியும்.

அயோடின் கலந்த உப்பு பொதுவாக விநியோகிக்கப்படும் பொட்டலத்திற்கான எடுத்துக்காட்டு, இது அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பத நிலைகளில் அதன் அயோடின் உள்ளடக்கத்தை விரைவாக இழக்கக்கூடும்

அயோடின் என்பது ஒரு நுண்ணூட்டச்சத்து மற்றும் உணவுத் தாது ஆகும், இது இயற்கையாகவே சில பகுதிகளில், குறிப்பாக கடற்கரைகளுக்கு அருகில் உள்ள உணவுப் பொருள்களில் காணப்படுகிறது. ஆனால், பொதுவாக பூமியின் மேலோட்டடில் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. ஏனெனில், அயோடின் கனமான தனிமமாகும். வேதியியல் தனிமங்களின் எளிதில் கிடைக்கும் தன்மையானது அணுநிறை அதிகரிக்க, அதிகரிக்க குறைகிறது. மண்ணில் இயற்கையான அயோடின் அளவு குறைவாகவும், காய்கறிகளால் அயோடின் எடுக்கப்படாமலும் இருக்கும்போது, உப்பில் சேர்க்கப்படும் அயோடின் மனிதர்களுக்குத் தேவையான சிறிய ஆனால் அத்தியாவசியமான அயோடினை வழங்குகிறது.

அயோடினுடன் கூடிய சாதாரண சமையல் உப்பின் திறந்து வைக்கப்பட்டால், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பத நிலைகளில் அதன் அயோடின் உள்ளடக்கத்தை அது ஆக்சிஜனேற்றம் மற்றும் அயோடின் பதங்கமாதல் செயல்முறையின் மூலம் விரைவாக இழக்கக்கூடும்.[2]

வேதியியல், உயிர் வேதியியல் மற்றும் ஊட்டச்சத்து அம்சங்கள் தொகு

 
அயோடின் கலந்த உப்பின் குவியல்

தயாரிப்பாளரைப் பொறுத்து நான்கு கனிம சேர்மங்கள் அயோடைடு மூலங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை, பொட்டாசியம் அயோடேட், பொட்டாசியம் அயோடைடு, சோடியம் அயோடேட் மற்றும் சோடியம் அயோடைடு ஆகியவை ஆகும். இந்த சேர்மங்களில் எந்த ஒன்றும் தைராய்டு சுரப்பியால் தைராக்ஸின் (டி 4 ) மற்றும் ட்ரியோடோதைரோனைன் (டி 3 ) ஹார்மோன்களின் உயிரியக்கவியலுக்காக தேவைப்படும் அயோடினை உடலுக்கு வழங்குகிறது. விலங்குகளும் அயோடின் உபஉணவுப் பொருள்களால் பயனடைகின்றன, மேலும், கால்நடைகளின் தீவனத்திற்கு எத்திலீன்டையமீனின் ஹைட்ரஜன் அயோடைடு வழிப்பொருள் முக்கிய துணை உணவுப்பொருள் ஆகும். [3]

அயோடினைப் பொதுமக்களுக்கு விநியோகிக்க உப்பு ஒரு சிறந்த வாகனம் ஆகும். ஏனெனில், அது கெட்டுப்போகாமல் இருப்பதோடு, பிற பொருட்களை விட கணிக்கக்கூடிய அளவுகளில் நுகரப்படுகிறது.  எடுத்துக்காட்டாக, சுவிட்சர்லாந்தில் உப்பில் அயோடின் செறிவு படிப்படியாக அதிகரித்துள்ளது: 1952ஆம் ஆண்டில் 3.75 மிகி/கிகி, 1962ஆம் ஆண்டில் 7.5 மிகி/கிகி, 1980ஆம் ஆண்டில் 15 மிகி/கிகி, 1998ஆம் ஆண்டில் 20 மிகி/கிகி, 2014ஆம் ஆண்டில் 25 மிகி/கிகி என்ற அளவிலும் இருந்துள்ளது. [4] இந்த அதிகரிப்புகள் பொதுவான சுவிஸ் மக்களில் அயோடின் நிலையை மேம்படுத்துவது கண்டறியப்பட்டது. [5]

அயோடின் சேர்க்கப்பட்ட உப்பானது நீண்ட காலத்திற்கு அதிகப்படியான காற்றிற்கு வெளிப்படுத்துவதன் மூலம் அதன் அயோடின் உள்ளடக்கத்தை மெதுவாக இழக்கக்கூடும். [6]

உற்பத்தி தொகு

பொட்டாசியம் அயோடேட் அல்லது பொட்டாசியம் அயோடைடு கரைசலில் தெளிப்பதன் மூலம் உண்ணக்கூடிய உப்பை அயோடினேற்றம் செய்யலாம். ஒரு டன் (2,000 பவுண்டுகள்) உப்பை அயோடினேற்றம் செய்ய 57 கிராம் பொட்டாசியம் அயோடேட், (2006 ஆம் ஆண்டின் நிலையில் சுமார் 1.15 அமெரிக்க டாலர்) தேவைப்படுகிறது. பொட்டாசியம் அயோடைடு ஆக்ஸிஜனேற்றப்படுவதையும் ஆவியாவதையும் தடுக்க டெக்ஸ்ட்ரோஸ் ஒரு நிலைப்படுத்தியாக சேர்க்கப்படுகிறது. கால்சியம் சிலிகேட்டு போன்ற கெட்டிப்படுதலைத் தடுக்கும் காரணிகள் பொதுவாக சாப்பிடும் உப்பில் சேர்க்கப்படுகின்றன.[7]

பொது சுகாதார முயற்சிகளில் தொகு

 
ஃபோலிக் அமிலம் மற்றும் ஃப்ளோரின் கொண்ட அயோடின் கலந்த உப்பு. ஃபோலிக் அமிலம் உப்புக்கு லேசான மஞ்சள் நிறத்தை அளிக்கிறது.

உலகளவில், அயோடின் குறைபாடு இரண்டு பில்லியன் மக்களை பாதிக்கிறது மற்றும் அறிவு சார் வளர்ச்சி குறைபாடுகளுக்கு இது முக்கிய காரணமாக அமைகிறது. [1] பொது சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, உப்புடன் அயோடின் சேர்ப்பது உலகின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிய மற்றும் மிகவும் செலவு குறைந்த நடவடிக்கையாக இருக்கலாம். இதற்கு ஒரு நபருக்கு ஆண்டுக்கு 0.05 அமெரிக்க டாலர் மட்டுமே செலவாகும். 1990 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான உலக உச்சி மாநாட்டில், அயோடின் குறைபாட்டை 2000 க்குள் அகற்றுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த நேரத்தில், 25% குடும்பங்கள் அயோடின் கலந்த உப்பை உட்கொண்டன.இது 2006 க்குள் 66% ஆக அதிகரித்தது.

உப்பு உற்பத்தியாளர்கள் எப்போதும் இல்லை என்றாலும், உண்ணக்கூடிய உப்புடன் அயோடின் கலப்பு செய்வதற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்றனர். சிறிய அளவில் உப்பு உற்பத்தியில் ஈடுபடக்கூடியவர்கள் இதற்கான கூடுதல் செலவினத்தைத் தவிர்ப்பதற்காக இதை எதிர்க்கிறார்கள். அயோடின் மாத்திரைகள் தயாரிப்பவர்கள், உப்புடன் அயோடின் சேர்க்கப்படுவதால் எய்ட்ஸ் மற்றும் வேறு சில உடல்நலக்குறைவுகள் ஏற்படுவதாக நம்ப இயலாத சில வதந்திகளை சுட்டிக்காட்டி இதனை எதிர்க்கின்றனர்.[8]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 The Lancet (12 July 2008). "Iodine deficiency—way to go yet". The Lancet 372 (9633): 88. doi:10.1016/S0140-6736(08)61009-0. பப்மெட்:18620930. http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(08)61009-0/fulltext. பார்த்த நாள்: 2014-12-10. 
  2. Diosady, L. L., and M. G. Venkatesh Mannar. "Stability of iodine in iodized salt". 8th World Salt Symposium. Amsterdam: Elsevier. 2000.
  3. Phyllis A. Lyday "Iodine and Iodine Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a14_381.
  4. "Sel de cuisine : hausse du taux d'enrichissement en iode" (in பிரெஞ்சு). Swiss Federal Administration. பார்க்கப்பட்ட நாள் 8 January 2014.
  5. Michael B Zimmermann; Isabelle Aeberli; Toni Torresani; Hans Bürgi (August 2005). "Increasing the iodine concentration in the Swiss iodized salt program markedly improved iodine status in pregnant women and children: a 5-y prospective national study". American Journal of Nutrition 82 (2): 388–392. doi:10.1093/ajcn.82.2.388. பப்மெட்:16087983. 
  6. Katarzyna Waszkowiak & Krystyna Szymandera-Buszka. Effect of storage conditions on potassium iodide stability in iodized table salt and collagen preparations. International Journal of Food Science & Technology. Volume 43 Issue 5, Pages 895–899. (Published Online: 27 Nov 2007).
  7. "Iodized Salt". The Salt Institute. Archived from the original on 16 October 2013. பார்க்கப்பட்ட நாள் 7 October 2013.
  8. McNeil, Donald G. Jr (2006-12-16). "In Raising the World's I.Q., the Secret's in the Salt". New York Times. https://www.nytimes.com/2006/12/16/health/16iodine.html?fta=y. பார்த்த நாள்: 2008-12-04. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடின்_கலந்த_உப்பு&oldid=3708073" இலிருந்து மீள்விக்கப்பட்டது